கில்தா மித் லெப்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்தாமிக் லெப்சா பத்மசிறீ விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்ற காட்சி. (ஏப்ரல் 20, 2013 புதுதில்லி)

கில்தா மித் லெப்சா (Hilda Mit Lepcha) என்பவர் லெப்சா நாட்டுப்புற இசை வல்லுநர் ஆவார்.[1] இவருக்கு இந்திய அரசு 2013-ல் பத்மசிறீ விருதினை வழங்கியது.[2] கில்தாமித் பாரம்பரிய லெப்சா இசைக் கருவிகள் மற்றும் லெப்சா பாடல்களின் கலைஞராகச் சிறந்து விளங்கினார்.

வாழ்க்கை[தொகு]

கில்தா மித் லெப்சா 1956ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள காளிம்பொங்கில் பிறந்தார். இவர் புகழ்பெற்ற லெப்சா இசைக்கலைஞர் சோனம் செரிங் லெப்சாவை மணந்தார்.

இசைப்பயணம்[தொகு]

தனது கணவருடன் இணைந்து, கில்தா மித் லெப்சா பல ஆண்டுகளாக லெப்சா பாரம்பரிய இசைக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்து வருகிறார். பாரம்பரிய லெப்சா இசைக்கருவிகளின் கலைஞரைப் போலவே இவர் சிறந்து விளங்கினார். லெப்சா பாடல்களைப் பாடிக்கொண்டே அரிய இசைக்கருவியான தும்போக்கினை இசைப்பதில் வல்லவர். இவர் லெப்சா கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்து, ஏராளமான கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார்.[3]

இவரது இசைப்பயணத்தில் 1988ஆம் ஆண்டில் அப்னா உத்சவ், 1978-ல் லோக் உத்சவ், 1993ஆம் ஆண்டில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தவீப் உத்சவ் மற்றும் 1998-ல் உலக இசை நாள் கொண்டாட்டங்கள் குறிப்பிடத்தக்கன.

விருதுகள்[தொகு]

சிக்கிமின் லெப்சா இசைக்காக கில்தா மித் லெப்சா 2009ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருதினைப் பெற்றார். மேற்கு வங்காளப் பகுதியினைச் சேர்ந்த பல நிறுவனங்களால் லெப்சா கௌரவிக்கப்பட்டார். இவருக்கு 2013ஆம் ஆண்டு பத்மசிறீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்தா_மித்_லெப்சா&oldid=3661879" இருந்து மீள்விக்கப்பட்டது