கில்கித்து ஆறு
Appearance
கில்கித்து ஆறு Gilgit River | |
---|---|
கில்கித்து ஆற்றின் பாதை | |
அமைவு | |
நாடு | பாக்கித்தான் |
தன்னாட்சி பிரதேசம் | வடக்கு நிலங்கள் |
மாவட்டங்கள் | குபிசு-யாசின், கைசர் மாவட்டம் (2019–) மற்றும் கில்கித்து |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 35°44′31″N 74°37′29″E / 35.74194°N 74.62472°E |
நீளம் | 240 கிலோ மீட்டர் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
நீர்தேக்கங்கள் | சாந்தூர் ஏரி, பாந்தெர் ஏரி, அட்டாபாத் ஏரி |
கில்கித்து ஆறு (Gilgit River) பாக்கித்தான் நாட்டில் பாயும் சிந்து நதியின் துணை நதியாகும். பாக்கித்தானின் கில்கித்து-பலுசிசுத்தான் பகுதியின் குபிசு-யாசின், கைசர் மாவட்டம் மற்றும் கில்கித்து உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக கில்கித்து ஆறு பாய்கிறது. இந்நதி சாந்தூர் ஏரியிலிருந்து உருவாகி [1]இயூக்லோடு மற்றும் புஞ்சி நகரங்களுக்கு அருகில் சிந்து நதியுடன் இணைகிறது. இந்த சங்கமம் இந்து குஃசு, இமயமலை மற்றும் காரகோரம் ஆகிய மூன்று முக்கிய மலைத்தொடர்கள் சந்திக்கும் இடமாகக் கருதப்படுகிறது.[2][3]
கில்கித்து ஆற்றின் மேல் பகுதிகள் குபிசு ஆறு மற்றும் கைசர் நதி என குறிப்பிடப்படுகின்றன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ isbn:1483603792 - Cerca con Google (in இத்தாலியன்).
- ↑ Handy, Norman (2017). K2, The Savage Mountain: Travels in Northern Pakistan (in ஆங்கிலம்). novum pro Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783990487174.
- ↑ Dani, Ahmad Hasan; Masson, Vadim Mikhaĭlovich (2003). History of Civilizations of Central Asia: Development in contrast : from the sixteenth to the mid-nineteenth century (in ஆங்கிலம்). UNESCO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231038761.