கில்கமெஷ் காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கில்காமேசு காப்பியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
களிமண் பலகை எண் 5-இல் கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி
மன்னர் கில்கமெஷ், கிமு 2,100, இலூவா அருங்காட்சியகம்

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் வடிவ இதிகாசம் ஆகும். இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. உரூக் நகர இராச்சிய மன்னர் கில்கமெஷ் பற்றிய சுமேரிய மொழி செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.[1][2] கில்காமேசின் கதை 12 களிமண் பலகைகளில் அக்காதிய மொழியில் ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. இப்பலகைகள் தற்கால ஈராக் நாட்டின் பண்டைய உரூக் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

காப்பியச் சுருக்கம்[தொகு]

என்கிடு என்ற முரட்டு அரக்கன் உரூக் நகரத்திற்கு வருகிறான். அங்கு வாழும் கில்கமெஷ் நிலம், வானம், மண், காற்று பற்றிய பஞ்சபூத அறிவு நிரம்பப்பெற்ற பலசாலி. இருவருக்கும் போட்டி நடக்கிறது. மூர்க்கமான போர் நிகழ்கிறது. கில்கமெஷ் என்-கிருவை வென்றான். ஆனால் அவனைக் கொல்லாமல், அவனது நட்பைப் பெறுகிறான். என்கிடுவும் கில்காமேசும் உயிர் நண்பர்களாயினர் என்று அந்தக் கதை தொடர்ந்து செல்கின்றது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Epic of Gilgamesh
  2. The Epic of Gilgamesh

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்கமெஷ்_காப்பியம்&oldid=3841518" இலிருந்து மீள்விக்கப்பட்டது