கிலோகலோரி/மோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிலோகலோரி/மோல் என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மூலக்கூறுகள், அணுக்கள்  அல்லது இதைப் போன்ற அடிப்படைத் துகள்களைப் பொறுத்து ஆற்றலின் அளவை அளவிடப் பயன்படும் ஒரு அலகு ஆகும். இது ஒரு மோல் பொருளொன்றினுடைய ஒரு கிலோகலோரி ஆற்றல்(1000 வெப்பவேதியியல் கிராம் கலோரிகள்)  என வரையறுக்கப்படுகிறது. ஒரு பொருளொன்றின் ஒரு மோல் என்பது அவகாதரோ எண் அளவிலான மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் அல்லது அயனிகள் கொண்ட பொருளின் அளவாகும். இது சுருக்கமாக, "கிலோகலோரி/மோல்" அல்லது "கிலோகலோரிமோல்−1" என குறிக்கப்படுகிறது. அளவீட்டு வாயிலாக கூறப்படும் போது, ஒரு கிலோகலோரி/மோல் என்பது ஒரு மோல் வினைக்காரணிகளின் வினையின் விளைவாக, ஒரு லிட்டர் நீருடைய (ஒரு கிலோகிராம் நிறையுள்ள) வெப்பநிலையை ஒரு செல்சியசு அளவிற்கு வெப்பநிலையை உணர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் குறிப்பிடுகிறது.

அனைத்துலக முறை அலகுகளின்படி, ஒரு கிலோகலோரி/மோல் என்பது 4.184 கிலோயூல்கள்/மோல், அல்லது 6.9477×10−216.9477×10−21ஜல்கள்/மூலக்கூறு, அல்லது 0.043 இலத்திரன்வோல்ட்/மூலக்கூறு ஆகியவற்றுக்குச் சமமானதாகும். அறை வெப்பநிலையில்  (25 °ெசல்சியசு, 77 °பாரன்ஹீட், அல்லது 298.15 ெகல்வின்) இது 1.688 போல்ட்சுமேன் சமன்பாட்டின் kT கூறு அலகுகளுக்குச் சமமானதாகும்.

இந்த அலகானது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றாக இல்லாவிடினும் இன்றும் பரவலாக வெப்ப இயக்கவியல் அளவுகளான வெப்ப இயக்கவியல் கட்டிலா ஆற்றல், ஆவியாதல் உள்ளீட்டு வெப்பம், உருகுதலின் உள்ளுறை வெப்பம் மற்றும் மின்மமாக்கும் ஆற்றல் போன்றவற்றைக் குறிப்பிட வேதியியலில் பயன்படுத்தப்படுகிறது.[1] இதற்கான காரணமானது,  இந்த அலகானது, ஒரு வேதி வினையில் நேரடியாக அளவீட்டில் பயன்படுத்தப்படும் அலகுகளைக்  கொண்டுள்ளதால் ஏற்படும் எளிமைத்தன்மையேயாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bach, Robert D. (2006). "General and Theoretical Aspects of the Peroxide Group". in Rappoport, Zvi. The Chemistry of Peroxides, Volume 2. Chichester: Wiley. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470862759. https://books.google.com/books?id=4PdYwo25VP8C&pg=PA12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோகலோரி/மோல்&oldid=2749432" இருந்து மீள்விக்கப்பட்டது