கிலா முபாரக் (பரித்கோட்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரித்கோட் கிலா முபாரக் (Qila Mubarak, Faridkot), எனும் இக்கோட்டை, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தின் பரித்கோட் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கிலா முபாரக், முதலில் ராஜா மோகல்சி (Raja Mokalsi) என்பவரால் கட்டப்பட்ட கருதப்படுகிறது. அதன் பின்னர் இது 'ராகா அமிர்' (Raag Hameer) என்பரால் புதுபிக்கப்பட்டு, பிற்காலத்தில் ராஜா பிக்ரம் சிங் (Raja Bikram Singh) மற்றும் ராஜா பல்பீர் சிங் (Raja Balbir Singh) போன்றோர் இங்கு மேலும் பல புதிய கட்டடங்களை கட்டி இம்முபாரக்கை விரிவுபடுத்தியதாக அறியப்படுகிறது. மேலும், இந்த பழைய நினைவுச்சின்ன வளாகத்தில், அரச அரண்மனை, தொஸ்ஹக்ஹனா (Toshakhana), மோடி க்ஹனா (Modi khana) மற்றும் கருவூலம் போன்றவை உள்ளன. நன்கு கட்டப்பட்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் ஒரு அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது. [1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Qila Mubarak, Faridkot". www.nativeplanet.com (@ 2006). பார்த்த நாள் 2016-07-17.