கிலாரி மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிலாரி பசு
கிலாரி காளை

கிலாரி மாடுகள் (கன்னடம்:ಖಿಲಾರಿ/மராத்தி:खिल्लारि) என்பவை இந்தியாவைச் சேர்ந்த போஸ் இன்டிகஸ் மாட்டினத்தின் ஒரு கிளை இனமாகும். இவை மகாராட்டிரத்தின் சாத்தாரா மாவட்டம், கோலாப்பூர் மாவட்டம், சாங்கலி ஆகிய வட்டாரங்களிலும், கர்நாடகத்தின் பிஜப்பூர், தார்வாட் பெல்காம் மாவட்டப் பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த இன மாடுகள் அப்பகுதியில் உள்ள வெப்பமண்டல மற்றும் வறட்சி வாய்ப்புகளை தாங்கி வாழக்கூடியனவாக உள்ளன. மேலும் அங்கு கடினமான வேளாண் பணிகளை செய்யம் திறனை கொண்ட மாடுகளாக உள்ளதால் இது உள்ளூர் விவசாய சமூகத்திற்கு சாதகமாகவே உள்ளன. இருந்தபோதும், அண்மைக் காலமாக இந்த இன மாடுகள் அதன் குறைந்த பால் கொடுக்கும் தன்மையால் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை சாம்பல் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும் இவற்றின் நடை வேகமாக இருக்கும்.[1]

பிறப்பிடம்[தொகு]

கிலாரி மாடுகளில் பல வகைகள் உள்ள, இந்த இன மாடுகள் மைசூர் மாநிலம் அல்லது மகாராட்டிர மாநிலத்திலுள்ள ஹலிகார் மாடுகளில் இருந்து தோன்றியவை ஆகும். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிலாரி". அறிமுகம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2017.
  2. "Oklahoma State University breed profile". Archived from the original on 2008-04-02. பார்க்கப்பட்ட நாள் 2017-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாரி_மாடு&oldid=3549796" இலிருந்து மீள்விக்கப்பட்டது