உள்ளடக்கத்துக்குச் செல்

கிலாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிலாடி
இயக்கம்அப்பாஸ்-முஸ்தான்
தயாரிப்புகிரீஷ் ஜெயின்
சம்பக் ஜெயின்
கதைநயீம்-எஜாஸ்
வசனங்கள்ஆதேஷ் கே. அர்ஜுன்
இசைஜதின்-லலித்
நடிப்புஅக்சய் குமார்
ஆயிஷா ஜுல்கா
தீபக் திஜோரி
சபிஹா
ஒளிப்பதிவுதாமஸ் ஏ. சேவியர்
படத்தொகுப்புஉசேன் ஏ. பர்மாவாலா
கலையகம்வீனஸ் ரெக்கார்ட்ஸ் & டேப்ஸ்
யுனைடெட் செவன்
வெளியீடு5 சூன் 1992 (1992-06-05)
ஓட்டம்152 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்மதிப்பீடு₹4 கோடி[2]

கிலாடி (Khiladi; மொ.பெ.*விளையாட்டு வீரன்*) என்பது 1992 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்திய இந்தி மொழி அதிரடித் திகில் திரைப்படமாகும். அப்பாஸ்-முஸ்தான் இயக்கத்தில், வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் பேனரின் கீழ் கிரீஷ் ஜெயின் மற்றும் சம்பக் ஜெயின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளியானது.[3] இது நடிகர் அக்சய்குமாரின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் இதுவாகும். இதில் இவருடன் ஆயிஷா ஜுல்கா, தீபக் திஜோரி மற்றும் சபிஹா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களிலும், பிரேம் சோப்ரா, சக்தி கபூர் மற்றும் ஜானி லிவர் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[4]

இத்திரைப்படம் அக்சய் குமார் கதாநாயகனாக நடித்து, தங்களுக்குள் கதையமைப்பு ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லாத, ஆனால் தலைப்பில் **"கிலாடி"** என்ற சொல்லைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நீண்டத் திரைப்படத் தொடரின் முதல் பாகமாகும். இதன் தொடர்ச்சியாக *மேன் கிலாடி தூ அனாரி* (1994), *சப்ஸே படா கிலாடி* (1995), *கிலாடியோன் கா கிலாடி* (1996), *மிஸ்டர் அண்ட் மிசஸ் கிலாடி* (1997), *இண்டர்நேஷனல் கிலாடி* (1999), *கிலாடி 420* (2000) மற்றும் *கிலாடி 786* (2012) ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Khiladi". British Board of Film Classification.
  2. "Khiladi Box Office Collection | India | Day Wise | Box Office". Bollywood Hungama (in ஆங்கிலம்). 1992-01-05. Retrieved 2024-01-25.
  3. "Khiladi turns 30: How Akshay Kumar's 'all-rounder' skills gave him an upper hand over Rishi Kapoor, Govinda". The Indian Express (in ஆங்கிலம்). 2022-06-05. Retrieved 2022-08-04.
  4. "What makes Akshay Kumar's Khiladi one of the best murder mysteries in Bollywood". The Indian Express (in ஆங்கிலம்). 2018-06-05. Retrieved 2022-08-04.
  5. "Revisiting Khiladi: 30 lesser-known facts about Akshay Kumar's breakout film". Cinema Express (in ஆங்கிலம்). 9 January 2021. Retrieved 2022-08-04.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலாடி&oldid=4615967" இலிருந்து மீள்விக்கப்பட்டது