கிறுகிறு மாம்பழம் (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிறுகிறு மாம்பழம் என்பது சிறுவர் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு மகிழும் ஒரு உல்லாச விளையாட்டு. ஒவ்வொருவரும் தன் கைகளைத் தோளுக்கு நேரே பக்கவாட்டில் நீட்டிக்கொண்டு சுழல்வர். கிறுகிறு எனத் தலையைச் சுற்றுவது போன்று வரும் உணர்ச்சி இன்பத்தில் திளைப்பது ஒருவகைச் சுவை.

சுற்றும்போது கிறு கிறு என வந்தால் உட்கார்ந்து இன்பம் காண்பர்.

சுற்றும்போது பாடும் பாடல்

கிறு கிறு மாம்பழம்
கிய்யா கிய்யா மாம்பழம்

திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டே சுழல்வர்

பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982