கிறீஸ் மனிதன்
கிறீஸ் மனிதன், (மர்ம மனிதன் அல்லது க்ரீஸ் பூதம், Grease devil) எனும் பெயரில் இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும் மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் பயங்கர நிகழ்வுகளாகும். இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் நாடு தழுவிய வகையில் இடம்பெறுகின்றதனால், ஒரு கும்பலோ, அமைப்போ செய்யும் விடயமன்றி, குறிப்பிட்ட சில தரப்பினரால் நன்கு திட்டமிடப்பட்டு ஏதோ காரணத்திற்காக உள்நோக்கின் அடிப்படையிலேயே இந்நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "நாட்டின் அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணாத அரசாங்கம் கிறீஸ் பூதம் என்றதொரு மாயையைத் தோற்றுவித்து மக்களைத் திசைதிருப்பும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசாங்கமே செயற்பட்டு வருகின்றது என்பது பல்வேறு நிகழ்வுகளின் பின்னனியில் தெளிவாகிறது." என்பதனை ஜே. வி. பி. யின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி என்பவரும் வெளிப்படுத்தியுள்ளார்.[1] நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.[2]
இவ்வாறான மர்ம மனிதன் அச்சுறுத்தல்கள் தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.[3]
மர்ம மனிதன் அச்சுறுத்தல்களின் போது ஊர்ப் பொது மக்கள் ஒன்று திரண்டு விரட்டிப் பிடிக்க முற்பட்ட நிகழ்வுகளின் போது, மர்ம மனிதன் போர்வையில் மக்களை அச்சுறுத்தலில் ஈடுப்பட்ட நபர் அருகாமையில் உள்ள போலிஸ் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.[4] மர்ம மனிதன் பெயரில் அச்சுறுத்துவோரை பொது மக்கள் பிடித்து போலிஸிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், போலிஸாரால் அவர்கள் விடுவிக்கப்படுவதும் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்து வருவதுடன், பொது மக்களுக்கும் பொலீஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் இடம் பெற்ற நிகழ்வுகளும் உள்ளன.
மர்ம மனிதன் எனப்படுவோர் பொது மக்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய வேளையில் அவர்களைப் பொது மக்கள் மடக்கி பிடிக்கி முற்படும் போது வழுக்கி ஓடுவதற்கு வசதியாக உடம்பில் கிறீஸ் களிம்பு பூசிக்கொண்டிருப்பதனால் அவர்களைக் கிறீஸ் பூதங்கள் என்று பரவலாக அழைக்கின்றனர். கிரீசுக் களிம்பு பூசிய மர்ம மனிதர்களும், விதம்விதமான ஆடைக்கவசங்களை அணிந்த மர்ம மனிதர்களும் இரவு நேரங்களில் குறிப்பாக இலங்கையின் கிராமியப் புறங்களில் ஆங்காங்கே பெண்களை குறிவைத்து நடமாடி, மக்களை அச்சமடையச் செய்து வருகின்றனர். இவ்வாறான மர்ம மனிதர்கள் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளினால் மக்கள் மக்கள் பெரிதும் அச்சமடைந்தனர். இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு சூலையில் ஆரம்பித்து ஆகத்து மாதத்திலும் பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்துவிடும்.
மக்களிடையே பேசப்பட்டுவரும் கிரீசு மனிதன் எனும் வதந்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட திருடர்களும், கொள்ளையர்களும், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுமே தாமே பூதம் போன்று வேடமிட்டு மக்களை ஏமாற்றி மிகவும் சாதுரியமாக தமது திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனரே தவிர, உண்மையில் நாட்டில் அவ்வாறான கிறிஸ் மனிதர்கள் இல்லையென இலங்கை காவல்துறைத் தலைவர் என். கே. இலங்கக்கோன் தெரிவித்தார்[5].
வதந்திகள்[தொகு]
க்ரீஸ் பூதங்கள் எனப்படும் மர்ம மனிதர்கள் பற்றிய வதந்திகள் 2011 சூலை இறுதிப் பகுதியில் பரவ ஆரம்பித்து. ஆகத்து நடுப்பகுதியில் உச்சநிலையை அடைந்தது. ஆரம்பத்தில் க்ரீஸ் களிம்புகளைப் பூசிக்கொண்டு சில மர்ம மனிதர்கள் இரவு நேரங்களில் கிராமப் புறங்களில் நடமாடுவதாகவும் இவர்கள் பெண்களுடன் தகாத முறையில் நடக்க எத்தனிப்பதாகவும் வதந்திகள் பரவின.அதைத் தொடந்து இந்த மர்ம மனிதர்கள் பெண்களின் முகம், மற்றும் மார்பகப் பகுதிகளை நகங்களால் அல்லது கூரிய ஆயுதங்களால் காயப்படுத்துவதாக வதந்திகள் பரவின. இரவு நேரங்களில் வீட்டிலுள்ளவர்களை வெளியே எடுப்பதற்காக வெளியிலுள்ள நீர்க் குழாய்களில் தண்ணீர்த் திறந்து விடுவதாகவும் கதவுகளைத் தட்டுவதாகவும் இந்த வதந்திகள் அமைந்திருந்தன. இன்னும் ஒரு சாரார் இது இராணுவ பயிற்சி நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்படும் ஒரு விடயம் என்றும் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இத்தகைய வதந்திகளால் இலங்கையின் பல மாவட்டங்களிலும் கிராமப் புற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவ்வாறாகத்தாக்குதலுக்கு உள்ளான சில பெண்களும், மர்ம மனிதர்களைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான சில பெண்களும் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.[6]
இளைஞர்களும் ஆண்களும் காவல்[தொகு]
வீடுகளினுள் பெண்களை அமர்த்திவிட்டு இளைஞர்களும், ஆண்களும் இரகசியமாக தத்தமது வீடுகளிலும் பிரதேசங்களிலும் காவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பங்களில் சில மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஏற்பட்ட வேளையில் சந்தேக நபர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டு இளைஞர்களால் நையப்புடையப்பட்டுப் பிரதேசக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.[7] இவ்வாறு சில பிரதேசங்களில் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்ட இத்தகைய சந்தேக நபர்களை காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் விடுவித்தது [8] பலவிதமான சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், மர்ம மனிதர்கள் பற்றிய செய்திகள் பலகோணங்களில் திரிவுபடுத்தப்பட்டு மக்கள் மத்தியில் வேகமாகப் பரவியன.
முஸ்லிம் கிராமங்கள் பாதிப்பு[தொகு]
கிறீஸ் மனிதனின் ஊடுருவல் குறித்து கிராமங்கள் தோறும் செய்திகள் பரவியமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ரமழான் மாதமாக இது இருப்பதனால் இரவு நேரத் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிலை கண்டி மாவட்டத்தில் அக்குறணை, புளுகோஹத்தென்ன, நீரெல்ல, குருகொட, அலவதுகொடை போன்ற பிரதேசங்களிலும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பல பிரதேசங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்பு[தொகு]
ஆகத்து 1ம் 2ம் வாரங்களில் மர்ம மனித நடமாட்டம் காரணமாக மலையக தோட்டப் பகுதிகளில் பல இடங்களில் முகங்களில் கீறல் காயங்களுடன் ஏனைய அதிர்ச்சி நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டதுடன், தோட்டத் தொழிலாளர்கள் வேலைகளுக்குச் செல்லாமல் தமது பெண்களை பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்பட்டதினால் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் தலையீடு[தொகு]
நிலைமை உச்சகட்டத்திற்குச் சென்ற பிறகு மலையக அரசியல் தலைவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் அக்கறை காட்டினர்.[9][10][11] குறிப்பாக இது விடயத்தை அரசியல் உயர்மட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு நிலைமை உச்சநிலைக்கு சென்ற பின்பே இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் மர்ம மனிதர்கள் என்பது போலியாக சோடிக்கப்பட்ட ஒரு வதந்தி என்றும் அப்படிப்பட்ட மர்ம மனிதர்கள் இல்லையென்றும் திருடர்களும், காம வெறியர்களும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் இவர்களை கைது செய்ய காவல்துறையினர் உயரிய மேற்கொண்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் வெளியிட்டனர்.[12][13] 6 வாரங்ளாக நாட்டில் பல மாவட்டங்களில் கிறீஸ் பூதங்கள் தொடர்பான 30 முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இது வரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் குறித்து அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் மத்தியில் பீதியை இல்லாதொழிக்கமாறும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.[14][15][16][17]
நிகழ்வுகள்[தொகு]
- ஆகத்து 9, 2011:செவ்வாய்க்கிழமை கிழக்குப் பகுதிக் கிராமமான ஓட்டமாவடியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 6 பேர் காயமடைந்திருந்தனர். இவர்களில் இருவர் பொலிஸார் ஆவர். கிறீஸ் பூதச் சந்தேகநபரை பொலிஸார் விடுதலை செய்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி வாசிகள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முற்றுகையிட்டிருந்தனர்.
- ஆகத்து 11, 2011: மலையக நகரான அப்புத்தளை தொட்டலாகலத் தோட்டத்திற்குச் சென்ற இரு நபர்களை மர்ம நபர்கள் எனச் சந்தேகித்த தோட்டத் தொழிலாளர்கள் அந்நபர்களை வெட்டி, தாக்கி கொன்றனர்.[18]. கொலை செய்யப்பட்ட இருவரும் பின்னால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எல்ல பகுதியைச் சேர்ந்த கினளன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.மகேந்திரன் என்பவரும் கோணக்கலை பெருந்தோட்டத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவன் பீட்டர் என்ற இருவருமே மர்ம மனிதர்கள் என்று கருதப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களாவர். தொட்டலாகலை பெருந்தோட்டத்திற்கருகாமையிலுள்ள காட்டில் மழைக்குருவிகளைப் பிடிக்க சென்ற போதே இக்கொலை இடம் பெற்றதாக கூறப்படுகிறது.[19]
- ஆகத்து 11, 2011: பொத்துவில் ஊறணி கிராமத்தில் இரவு மூன்று மர்ம மனிதர்கள் நடமாடியதைக்கண்ட பொதுமக்கள் அவர்களைப் பிடித்தனர். இந்த மூவரையும் பின்னர் படையினர், கைது செய்ததுடன் அவர்களை விடுவித்தனர். எனினும் இவர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொத்துவில் நகரில் ஆகத்து 12, 2011:கடையடைப்பும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்களைக் கலைப்பதற்கு படையினர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதன்போது இவர் படுகாயமடைந்தனர். பொதுமக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் வாகனம் ஒன்றைத் தாக்கிச் சேதப்படுத்தினர். மக்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடையவே மாலை 4 மணியளவில் வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் எம்.ஏ.மௌசூன் (32 வயது) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
- சம்மாந்துறை கோறக்கல் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவரைத் தாக்க முற்பட்ட மர்ம மனிதனை பெண்ணின் கூக்குரலைக் கேட்ட குழுவினர் விரட்டி வந்தபோது சம்மாந்துறை பொலிஸ் நிலைய வளவுக்குள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்ட செய்தியை அடுத்து சம்மாந்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆகத்து 11, 2011: இரவு பொத்துவில் 2 ஆம் குறிச்சியில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவர் மர்ம மனிதரால் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து பொத்துவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கல்முனை அஷ்ரப் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் அவ்விடத்தில் காணப்பட்ட சீருடையில் நின்ற இருவரும் தாக்கப்பட்டு காயமடைந்து பொத்துவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ஆகத்து 12, 2011: டொரிங்டன் அலுப்புவத்தைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கச் சென்ற பெண் தொழிலாளி ஒருவர் நிரை பிடிப்பதற்காக மட்டக்கம்பினை தேயிலைச் செடியின் மீது வைத்துள்ளார். அந்தக் கம்பு இழுக்கப்படவே திடீரென தேயிலைச் செடிக்கு அடியிலிருந்து மர்ம மனிதன் ஒருவன் தோன்றியுள்ளான். அவனைக் கண்டு பீதிக்குள்ளாகிய பெண் கதறியபடி மயங்கி கீழே விழுந்துள்ளார். இவரது கதறலைக்கேட்ட ஏனைய பெண் தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு தேயிலை மலையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறுவதற்கு முற்பட்ட போது அவர்கள் கீழே விழுந்ததால் காயமடைந்துள்ளனர். இவ்வாறான சம்பவமொன்று நியூபோர்ட்மோர் தோட்டப் பகுதியிலும் ஏற்பட்டதால் பெண் தொழிலாளர்களுக்குக் காயமேற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் மன்றாசி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.[6]
- ஆகத்து 12, 2011: திருக்கோவில் விநாயகபுரத்திலும் வெள்ளிக்கிழமை மாலை இரு மர்மமனிதர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதையடுத்து அங்கும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கக்கோரி பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கலைக்க பொலிஸார் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் இருவர் படுகாயமடைந்தனர்.
- ஆகத்து 12, 2011: அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.[20] அம்பாறை மாவட்டத்தில் மர்ம மனிதர்கள் என்ற வதந்தியால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து யாழ். மாவட்ட ehராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் விஜே குணவர்த்தனவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். பொத்துவில், திருக்கோவில் பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கையெடுக்குமாறும் அவர் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுள்ளார். இச் சம்பங்களால் தற்போது க.பொ.த. உயர்தரப் ரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.[21]
- திருகோணமலை 91 ஆம் கட்டையில் (கிரிஸ் மனிதன்) சந்தேகத்துக்கு இடமான நபர் ஒருவரை பிரதேச வாசிகள் மடக்கிப் பிடித்து கந்தளாய்ப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். இவரை 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- ஆகத்து 12 இரவு கண்டி கடுகண்ணாவ இலுக்குவத்தை பகுதியில் மர்ம மனிதர் என்ற சந்தேகத்தில் பொதுமக்களால் ஒருவர் நையப்புடைக்கப்பட்டதுடன், அவரது டிபென்டர் ரக ஜீப்பும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.படுகாயமடைந்த சாரதி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.[22]
- ஆகத்து 15 நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓவிட்ட , ஜெயசுந்தரபுர ஆகிய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை பிரதேச மக்கள் பிடித்து நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் நாவலப்பிட்டி ஓவிட்ட பகுதியில் சந்தேகத்தக்கு இடமான முறையில் நடமாடிய நபரொருவரை அந்தப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து பிடித்து ஜெயசுந்தரப்பகுதியில் உள்ள தொலைபேசியகம்பமொன்றில் கட்டி வைத்தனர்.ஏனைய மக்களுக்கும் தகவல் பரவியதால் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த சந்தேக நபரைக் காணுவதற்கு காலை 6 மணிவரை கூடியிருந்தனர்.[23]
- ஆகத்து 15 மர்ம மனிதன் பீதி காரணமாக கிண்ணியாவில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து 25 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா அண்ணல் நகரில் ஞாயிறு இரவு 8 மணியளவில் வீடொன்றின் சமையலறைக்குள்ளிருந்த பெண்ணை முகமூடி அணிந்த ஒருவர் யன்னல் ஊடாக கூப்பிட்டுள்ளார்.அவரைக் கண்ட அப்பெண் அவலக் குரலெழுப்பவே அயலவர்கள் அங்கு வர முகமூடி மனிதன் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேநேரம், இரவு 11 மணியளவில் பைசல் நகரில் வீடொன்றில் தனிமையிலிருந்த பெண்ணை ஒருவர் யன்னல் ஊடாகக் கத்தியைக் காட்டி மிரட்டவே அப்பெண்ணும் அவலக் குரலெழுப்பியுள்ளார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வரவே அவர் தப்பியோடியுள்ளார். எனினும் அவரை இளைஞர்கள் உட்பட பலரும் துரத்திச் செல்லவே தப்பிச் சென்று கிண்ணியா பழைய ஆஸ்பத்திரிக்கு முன்னால் உள்ள கடற்படை முகாமினுள் நுழைந்ததை அப்பிரதேச மக்கள் கண்டுள்ளனர். இதனைத் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு முகாமை முற்றுகையிட்டதுடன், மறைந்திருக்கும் மர்ம மனிதர்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட மூன்று காவல்துறையினரும், இரண்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். காவல்துறை ஜீப் வண்டியும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.[24]
- ஆகத்து 16ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் ஒருவர் ஊடுருவிய தகவல் ஒன்றினையடுத்து பாதுகாப்புத் தேடி ஓடிய பெண்மணி ஒருவர் மீது புகையிரத வண்டியொன்று மோதுண்டதால் அப்பெண்மணி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். வந்தாறுமூலை பலாச்சோலை பேசிக் கிராமப் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பிள்ளைகளின் தாயான ஆறுமுகன் பாக்கியம் (வயது 42) என்ற பெண்மணியே இச் சம்பவத்தில் பலியானவராவார்.[25]
- ஆகத்து 16 கிழக்கில் ஏற்பட்ட மர்ம மனிதர் பிரச்சினை தற்போது வடக்கேயும் பரவியுள்ளது. மன்னாரில் திங்கட்கிழமை மாலை மூர் வீதியில் மர்ம மனிதன் ஒருவர் தப்பியோடியதையடுத்து அங்கு பதற்றமேற்பட்டது. இது தொடர்பாக படையினரும் பொலிஸாரும் அப்பகுதியில் தேடுதல் நடத்திய போது ஒதுக்குப்புறமான இடத்தில் ஆட்கள் இல்லாத வீடு ஒன்றில் புகுந்து இருவர் கொள்ளையடித்துக் கொண்டிருந்த போது படையினரிடம் அகப்பட்டுக் கொண்டனர். மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த இவ்விருவரும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.[26]
- ஆகத்து 17 மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஊரணி பகுதியில் பெண்ணொருவரை கிறீஸ் மனிதன் தாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றார். சம்பவத்தில் படுகாயமடைந்த 22 வயதுப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டின் மேல் மாடியில் துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென வந்த கிறீஸ் மனிதன் பெண்ணின் மீது பாய்ந்து காயப்படுத்தியுள்ளான். சம்பவத்தை தொடர்ந்து பிரதேச மக்கள் அருகில் இருந்த பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பிரதேசத்தில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனைக் தடுக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் வயோதிபர் ஒருவரும் காயங்களுடன் மட்டு. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.[27][28]
- ஆகத்து 17 2011 குருநாகல் மாவட்ட சியம்பளாகஸ்கொட்டுவ - அம்மையன் வெவ முஸ்லிம் கிராமத்தில் மர்ம மனிதன் இரு முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்ற இரு வேறுபட்ட சம்பவங்களில் ஒரு பெண் மீது அசிட் வீசப்பட்டுள்ளது. மற்றொரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். இரவு வுளுச் செய்வதற்காக வீட்டுக்கு வெளியே குழாயடிக்குச் சென்ற பெண் ஒருவரை முகமூடியணிந்து வந்த மர்ம மனிதன் இழுத்துச் சென்ற சம்பவத்தில் பெண் படுகாயம் அடைந்துள்ளார். நீண்ட தூரம் இருட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்ற சமயம், பெண் கூக்குரலிட்ட போது வாயை மூடிய மர்ம மனிதனின் கைவிரலை பலமாக கடித்த போது பெண்ணை விட்டு மாயமாக மறைந்துள்ளான். இதேவேளை, பறகஹகொட்டுவ கிராமத்தில் கடந்த ஆகத்து 16 செவ்வாய்கிழமை இரவு இஷா தொழுகைக்காக வுளுச் செய்வதற்கு வெளியே வந்த பெண் மீது தென்னை மரத்தில் ஏறிநின்ற மர்ம மனிதன் பாயமுற்பட்ட போது குறித்த பெண் கல்லினால் மனிதனைத் தாக்க முற்பட்ட சமயம் ஒருவித அசிட் திரவத்தை வீசிவிட்டு தப்பியோடியுள்ளான். இச்சம்பவத்தில் காயமுற்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.இச்சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் ஓடுவதை தவிர்த்து தாவிச் செல்வதையே தாம் கண்டதாக பெண்கள் தெரிவிக்கின்றனர். தாவிச் செல்லக்கூடிய வகையில் சப்பாத்து அணிந்திருப்பதாக கூறப்படுகின்றது.[29]
- ஆகத்து 18 2011 திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போஹாவத்தை டொப் டிவிசன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்தொழிலாளி ஒருவரை மர்ம மனிதர்கள் இருவர் இழுத்துச்சென்று காட்டோரத்தில் கைவிட்டுச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.பாதிக்கப்பட்ட வேலுராமையா தமிழ்ச்செல்வி ( வயது 35 ) என்ற பெண்தொழிலாளி கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவர் அரண்டு குழந்தைகளின் தாயாவார். மர்ம மனிதர்கள் தனது கழுத்திதை துணி ஒன்றினால் இறுக்கியதாகவும் அதனால் தன்னால் கழுத்தினை அசைக்க முடியவில்லை என்றும் அந்தப்பெண்தொழிலாளி தெரிவித்துள்ளார். 'பெண்ணின் உடம்பில் எவ்விதபாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனினும் கழுத்தினை இறுக்கியதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும்" கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார். இந்தச்சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.[30]
- ஆகத்து 20 2011 காத்தான்குடியை அண்டியுள்ள பாலமுனை கிராமத்திற்குள் கிறிஸ் மனிதன் ஊடுறுவியுள்ளதாக பரவிய தகவலையடுத்து காத்தான்குடியில் பொலிஸாருக்கும் பொது மக்களுக்குமிடையே இடம்பெற்ற மோதலில் காத்தான்குடி கடற்கரை வீதி உட்பட பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், வான் மற்றும் லொறிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் பல கடைகளும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இச்சம்பவம் அதிகாலை 1.30 மணியளிவில் இடம் பெற்றுள்ளது.[31]
- ஆகத்து 20 2011 மட்டக்களப்பு புறநகர்ப்பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு புதூர் வீச்சுக்கல்முனை பகுதியில் மர்ம மனிதனின் தாக்குதலில் யுவதியொருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். இத் தாக்குதலில் எஸ்.சர்மிளா என்ற யுவதி படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அவரது வீட்டில் பாய்ந்து வாய்ப்பகுதியில் இடித்ததுடன் இருகைகள் உட்பட்ட உடலின் சில பகுதிகளில் பலமாக இடங்களில் மர்ம மனிதர் கீறியுள்ளார். உரிய யுவதி ஓலமிடவே மர்ம மனிதன் அவ்விடத்தை விட்டு ஓடிவியுள்ளதாகவும், தற்போது குறித்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.[32] அதே நேரம் மட்டக்களப்பு தாண்டியடி நடராசானந்தாபுரத்தின் காட்டுப் பகுதியில் நடமாடிய மர்ம மனிதர்களால் பொது மக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் பொலிஸாரும் படையினரும் பொது மக்களை மிக மோசமாகத் தாக்கியுள்ளனர். இந்த மர்ம மனிதர்களை பொது மக்கள் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்ற போது அதனைத் தடுத்த பொலிஸாரும் படையினரும் பொதுமக்களை மோசமாகத் தாக்கியுள்ளனர். படுகாயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லவிடாதும் படையினர் தடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 18 பேர் மட்டக்களப்பு நீதிவான் ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பின்பு 18 பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த 18 பேரும் ஜனாதிபதியை அவதூறாகப் பேசியதாகவும் அரசின் சட்ட ரீதியான செயற்பாடுகளை அமுல்செய்ய இடையூறுகளை விளைவித்தது, சட்டவிரோதமான ஆயுதங்களுடன் கூட்டம் கூடியமை, பொலிஸாரைத் தாக்கி காயம் விளைவித்தது, கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.[33]
- ஆகத்து 19 2011 மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் கிராமத்தில் இரவு ஏற்பட்ட மர்ம மனிதர் பிரச்சினையால் அங்கு பதற்றம் காணப்பட்டதுடன், மன்னாரிலிருந்து மேலதிக படையினரும் வரவழைக்கப்பட்டனர். இங்குள்ள வீடு ஒன்றின் கதவை இரவு நேரத்தில் தட்டிய சத்தத்தைக் கேட்டு உரிமையாளர் அதனைத் திறந்து பார்த்தபோது நால்வர் காணப்பட்டனர். பின்னர் அவர்கள் தப்பியோடினார்கள். அவர்கள் அங்கிருந்து தப்பியோடவே வீட்டுக்காரர் எழுப்பிய சத்தத்தால் அயலிலுள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு அந்த நான்கு பேரையும் துரத்திச் செல்லவே அவர்கள் அருகிலுள்ள கடற்படை முகாமிற்குள் சென்று ஒளிந்து கொண்டனர். இதையடுத்து அங்குள்ள பள்ளிவாசலின் ஒலிபெருக்கி மூலம் இப்பிரச்சினை அறிவிக்கப்பட்டது.இதனால் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அக் கடற்படை முகாமைச் சூழ்ந்து கொண்டு அங்கு வந்தவர்களை வெளியே விடுமாறு கேட்டுள்ளனர். உயர் பொலிஸ் கடற்படை அதிகாரிகள் அந்த மக்களை சமாதானப்படுத்தி வீடுகளுக்கு செல்லுமாறு கேட்டுள்ளனர் [34]
- ஆகத்து 19 2011 கற்பிட்டி பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் மர்ம மனிதன் பெண்ணொருவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து அவரைத் தேடி இளைஞர்கள் துரத்திச் சென்றபோது அவர் அங்குள்ள சிங்கள பாடசாலைக்குள் புகுந்து ஒளிந்து கொண்டார். அப்பாடசாலை வளவுக்குள் அவரை ஊர்மக்கள் ஒன்று திரண்டு பிடித்து நையப்புடைத்தனர். இதனால் அங்குபெரும் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பொலிஸாரும் கடற்படையினரும் அங்கு வந்தபோதிலும் அவரை பொதுமக்களிடமிருந்து காப்பாற்ற முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களால் தாக்கப்பட்ட வரை பின்னர் கற்பிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.[35]
- ஆகத்து 21 2011 மட்டக்களப்பு மாவட்ட வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் பெண் ஒருவர் மர்ம மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் இவர் குறித்த பகுதியில் கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் அவருக்கு பின்னால் இருந்து மேல் முழுவதும் கறுப்பு நிற திரவத்தைப் பூசிக்கொண்டு குறித்த பெண்ணை அணைத்துப் பிடித்துள்ளதுடன் அவரது நகத்தினால் கீறி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்து பெண் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான பெண் பூபாலபிள்ளை லக்ஷ்மி மூன்று குழுந்தைகளின் தாயாவார். பின்னர் அவரை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்த்துள்ளனர்.[36]
- ஆகத்து 21 2011 கிரீஸ் பூதம் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பியதாகக்கூறி கைது செய்யப்பட்ட முகத்துவார பிரதேச முச்சக்கர வண்டிச் சாரதியை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரீஸ் பூத நடவடிக்கையின் பின்புலமாக அரசு செயற்படுவதாக முச்சக்கர வண்டிச் சாரதி மக்களை அச்சுறுத்தியதாக குற்றம்சுமத்தியே அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சாரதி பரப்பிய பிழையான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.[37]
- ஆகத்து 21 2011 ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடிப் பகுதியில் மற்றுமொரு மர்ம மனிதன் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீட்டில் இருந்து சாதாரணமாக வெளியில் வந்த என்.நிஷாந்தினி (வயது 19) என்ற இளம் பெண்ணொருவரை அவரது காணியினுள் மறைந்திருந்த ஒருவர் திடீரென கட்டிப்பிடுத்து கூறிய ஆயுதத்தினால் கீறியுள்ளார். இதனால் தோளிலும் கை பகுதியிலும் காயமுற்ற பெண் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். முகம் முழுவதும் கருப்பு நிறப்பூச்சுடனும் உடல் முழுதும் கிரீஸ் பூசியிருந்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு ஓடியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதுடன், கட்டிப்பிடித்த வேளை மர்ம மனிதனின் உடலில் பூசப்பட்டிருந்த கிரீஸ் பெண்ணிலும் ஒட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.[38]
- ஆகத்து 22 2011 புத்தளம் மணல் குன்று கிராமத்தில் நேற்றிரவு க்ரீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியை அடுத்து காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், காவல் துறையினரின் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் 13 வயது பிள்ளை உட்பட ஐவர் காயமான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.[39][40]],
- ஆகத்து 24 2011 குடும்பப் பெண் ஒருவரின் மார்புச் சட்டையைக் கூரிய ஆயுதமொன்றினால் கிழித்த மர்ம மனிதன், பெண்ணின் மேலங்கியைப் பறித்து அருகிலுள்ள பற்றைக் காட்டுக்குள் போட்டுச் சென்ற சம்பவம் ஒன்று (ஆகத்து 22 2011) வரிப்பத்தான் சேனை மஜீத்புரத்தில் இடம்பெற்றுள்ளது.[41]
- ஆகத்து 25 2011 மாத்தளை நகரிலும் நகரை அண்மித்த சில பகுதிகளிலும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மர்ம மனிதன் நடமாட்டத்தால் மாத்தளை பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தளை நகர மெயின்வீதி, பள்ளிவீதி, முஹாந்திரம் வீதி,கொடபொலவீதி, டோலவீதி, அக்கரைமலை,களுதாவளை, மாடசாமி கோவில்வீதி, முதலாம் வட்டாரம், ஆற்றங்கரை வீதி போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மர்ம மனித நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.[42]
- ஆகத்து 27 2011 சந்தேகத்திற்கிடமான மனித நடமாட்டம் காணப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாடசாலை செல்லும் 16 வயது சிறுவன் ஒருவன் பலியாகி உயிரிழந்த சம்பவம் ஆகத்து 25 2011 இரவு (25) கண்டி குருதெனிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளதாக தலாத்து ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.[43]
- ஆகத்து 27 2011 யாழ். குடாநாட்டில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகத்து 26 2011நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் மர்ம மனிதர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இராமகிருஷ்ண வீதி, கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலைச் சேர்ந்த ரி. தர்மகுலசிங்கம் (வயது 54) என்பவரே படுகாயமடைந்தவராவார்.[44]
- ஆகத்து 27 2011 முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீரூற்று, குமிழ முனை, நீராவிப்பிட்டி, முள்ளியவளை போன்ற கிராமங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் இரவில் குடும்பம் குடும்பமாக தங்கி வாழ்வதாகவும் அப்பிரதேசங்களில் அச்சமான சூழல் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.[45]
ஐவர் உயிர் இழப்பு[தொகு]
மர்ம மனித வதந்தி காரணமாக ஆகத்து 13 2011 திகதி வரை ஐவர்கொல்லப்பட்டுள்ளனர். மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்பட்ட இருவர் மலையகப் பகுதியில் பொது மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டனர். பொத்துவில், திருகோவில் பகுதிகளில் ஆகத்து 12 வெள்ளிக்கிழமை மர்ம மனிதர்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்தனர்.[20] இந்தக் கிறீஸ் பூதத்தை தேடிச்சென்ற 22 வயதுடைய இளைஞர் ஒருவர் காட்டுக்குள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். ஆகத்து 16 ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் மர்ம மனிதர் ஒருவர் ஊடுருவிய தகவல் ஒன்றினையடுத்து பாதுகாப்புத் தேடி ஓடிய பெண்மணி ஒருவர் மீது புகையிரத வண்டியொன்று மோதுண்டதால் அப்பெண்மணி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சந்தேகம்[தொகு]
இவ்வாறான ஒரு வதந்தி நாட்டில் பல மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் பரவியமை குறித்தும், பல மாவட்டங்களிலும் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரே மாதிரியாக இருப்பது குறித்தும் மக்கள் மத்தியில் பலவித சந்தேகங்கள் நிலவியன. இதன் பின்னணியை தெரிந்துகொள்ள பலரும் ஆர்வம் காட்டி வந்தனர்.அரசியல் இலாபத்தினை அடைந்து கொள்ளும் நோக்கிலான திட்டமிடப்பட்ட செயற்பாடே இதுவெனவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். எது எவ்வாறிருந்தும் இவ்விடயம் குறித்து இப்பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் குறித்தும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன. கிறீஸ் மனிதனின் பெயரால் வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதானமாக இருக்குமாறு மத அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம்[தொகு]
பொலிஸாரின் கையில் இருக்க வேண்டிய சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொள்வதால் பல்வேறு விபரீதங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.[46] அதேநேரம் நாட்டில் கிறீஸ் பூதங்களோ மர்ம மனிதர்களோ இல்லை. சில இடங்களில் மனநோயாளிகள் ஏதாவது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். அவ்வாறு யாராவது சந்தேகத்துக்கு இடமான முறையில் செயற்பட்டால் அவர்களை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். மாறாக, பிரதேச மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.[47] அதேநேரம் மர்ம மனிதர் விடயத்தில் சட்டத்தை கரத்தில் எடுக்க எவருக்கும் அனுமதியில்லை என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலயும் தெரிவித்துள்ளார்.[48]
ஜே.வி.பி.யின் குற்றச்சாட்டு[தொகு]
இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.[49] அதே நேரம் "கிறீஸ் பூதம் சகல இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு மாதகாலத்திற்கும் மேலாக மகியங்கனை, கண்டி, கந்தளாய், ஹட்டன், இப்போது கிழக்கு என கிறீஸ் பூதங்கள் தொடர்பான செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையை இதுவரை பொலிஸாரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் சமாதானம் ஸ்திரத்தன்மை என்பவற்றை இந்த விடயம் மோசமாக பாதித்துக்கொண்டிருக்கின்றது" என்றும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராததற்கும் பொலிஸாரைக் கட்டுப்படுத்தி வைத்திராததற்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என்றும் ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் கூறியுள்ளார்.[50]
ஜனாதிபதியின் கவனத்திற்கு[தொகு]
மர்ம மனிதர் நடமாட்டம் தொடர்பில் பொத்துவில் பிரதேசத்திலும், ஏனைய இடங்களிலும் நடைபெற்றுள்ள அசம்பாவித சம்பவங்களையிட்டு பூரண விசாரணை நடாத்துமாறு நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.நடந்துள்ள சம்பவங்களையிட்டு தாம் பெரிதும் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவை தொடர்பான பூரண விசாரணைக்கு இணக்கம் தெரிவித்ததோடு அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்குவதற்கு தீய சக்திகள் மேற்கொள்ளும் சதியாக இவை இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.[51][52][53]
காவல்துறை அவசர பிரிவு வேண்டுகோள்[தொகு]
சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்திற்கு அல்லது 119, 118 ன்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்குமாறு காவல்துறை அவசர பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.[54]
காவல்துறையினர் யாரைப் பாதுகாக்கின்றனர்?[தொகு]
காவல்துறையினர் பொதுமக்களை பாதுகாக்கின்றார்களா அல்லது மர்ம மனிதர்களைப் பாதுகாக்கின்றார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்படுவதாலேயே காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் ஏற்படக் காரணமாக அமைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கில் மர்ம மனிதரின் அச்சுறுத்தல் அதிகரிக்குமாயின் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையேற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.[55]
பெண் அமைப்புகள் கவலை[தொகு]
இலங்கையில் பல பகுதிகளிலும் கிறீஸ் பூதங்கள் என்ற பெயரில் தொடருகின்ற வன்செயல்கள் பெரும்பாலும் பெண்களையே இலக்குவைத்து நடத்தப்படுவதால், அவற்றை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் செய்தியாளர் சந்திப்பில் கோரப்பட்டுள்ளது.[56]
ஒரு சக்தியின் பின்னணியில்லாமல் நடைபெறமாட்டாது[தொகு]
மர்ம மனிதன் பிரச்சினை ஒரு சக்தியின் பின்னணியில்லாமல் நடைபெறமாட்டாது. இவ்வாறான சம்பவங்கள் போரின் பின்னணியிலேயே தான் நடைபெற்றிருக்கின்றன. தற்போது சம்பவங்கள் ஏன் நடைபெறவேண்டும்? எதற்காக நடைபெறவேண்டும் என நாம் சிந்தித்தே ஆகவேண்டும். மர்ம மனிதன் பிரச்சினையில் அரசாங்கத்துக்கும் பங்கிருக்கிறது. இதனை அரசாங்கம் மறுக்கமுடியாது. இதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.[57]
பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள்[தொகு]
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் அச்ச நிலை காரணமாக அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் பொது மக்கள் பகலில் தூங்கி இரவில் விழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தொழிலுக்குச் செல்வோர் இரு வேளையும் விழித்திருக்க வேண்டிய நிலையில் சிறுவர்கள் பலமான பீதியிலும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி வருவதாகவும், பெண்கள் தமது ஆண் துணைகளை வலுக்கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் முடக்குகின்றனர் எனவும், நோன்பு காலமாகையால் பள்ளிக்கு தொழுகைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலை எழுந்துள்ளதாகவும், 3 வருடங்கள் படித்த உயர் தர மாணவர்கள் திருப்தியாக பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளதாகவும் எங்கு பார்த்தாலும் மர்ம மனிதன் பற்றிய கதையே நடக்கிறது எனவும், மக்களின் மன நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தினமும் புதுப்புதுச் செய்திகள் உண்மையாகவோ, வதந்தியாகவோ குவிகின்றன. பலர் கேட்டுக் கேட்டு, அலுத்துப் போயுள்ளனர்.[58]
போதனா வைத்தியசாலையில் மர்ம மனிதர்கள்[தொகு]
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்குள் மர்ம மனிதர்கள் இருவர் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவியது. ஆகத்து 19 பிற்பகல் 12.30 மணியளவில் மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியின் சுற்று மதிலினால் மர்ம மனிதர்கள் பாய்ந்து ஓடியதை அங்கிருந்த தாதியர் மாணவியர் கண்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆண் தாதி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மர்ம மனிதர்களை தேடியதுடன் மட்டக்களப்பு பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது அச்சத்தினால் சில தாதி மாணவிகள் மயங்கி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தையடுத்து நேற்றைய பாடநெறிகள் இடை நிறுத்தப்பட்டன. எனினும் அங்கு மர்ம மனிதர்கள் எவரும் தென்படவில்லை. இதேவேளை மேற்படி சம்பவத்தை படமெடுக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவரின் வீடியோ கமரா மற்றும் ஊடகவியலாளருக்கான அடையாள அட்டை என்பன அங்கிருந்த பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.[59]
புலிகளிருந்த காலத்தை விட மக்கள் அச்சத்தில்[தொகு]
விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையை விடவும் தற்போது கிறீஸ் பூதம் என்ற பிரச்சினையால் மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளனர். எனவே, அரசாங்கம் மக்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆகத்து 19 இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. இந்த பிரச்சினையால் கிழக்கு மாகாணம் அதிர்ந்து போயுள்ளது. இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரமில்லாமல் தெற்கிலும் மலையகத்திலும் இந்த பிரச்சினையானது வியாபித்துள்ளது. தொடர்ச்சியாக பெண்கள் மீதான தாக்குதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதனால் மக்கள் செய்வதறியாது அரசாங்கத்துக்கெதிராகவும் பொலிஸாருக்கெதிராகவும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிலர் பலியாகியுமுள்ளனர். இது பெரும் கட்டுக்கதை இதில் உண்மைத் தன்மை இல்லை என கூறி விட்டு சாதாரணமாக இருந்து விட முடியாது இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் இந்த அசம்பாவிதம் நீடிக்காமல் அதனை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.[60]
அரசு நிர்மாணித்திருக்கின்றது[தொகு]
சர்வதேசத்துக்கு எவ்வாறான கதைகளைக் கூறினாலும் அல்லது உறுதி மொழிகளை வழங்கினாலும் அவசர காலச் சட்டத்தை நீக்கிவிடுவதற்கோ, வடக்குகிழக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தை அங்கிருந்து அகற்றுவதற்கோ அரசாங்கத்திடம் திட்டம் இல்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்குறித்த இரண்டையும் தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே கிறீஸ் பூதம் இல்லாவிட்டால் மர்ம மனிதன் என்ற பயங்கரவாதத்தை அரசு நிர்மாணித்திருக்கின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.[61]
எந்தவித உண்மையும் இல்லை[தொகு]
நாட்டின் சில பகுதிகளில் நடமாடும் மர்ம மனிதர்கள் விடயத்தில் அரசாங்கத்துக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.பாதுகாப்பு அமைச்சில் (ஆகத்து 23, 2011) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் "மர்ம மனிதர்கள் விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறுகிறார்கள். அவசரகால சட்டத்தை நீடிப்பதற்காக இப்படியொரு மறைமுகமான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். நாட்டுத் தலைவருக்கு இரத்தம் தேவையாதலால் மர்ம மனிதர்களால் இரத்தம் உறிஞ்சப்படுவதாகக் கூறுகிறார்கள் இவற்றில் எந்த உண்மையும் இல்லை". என்று குறிப்பிட்டார்.[62]
கிரீஸ் பூதம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்[தொகு]
கிரீஸ் பூதம் தொடர்பில் ஆகத்து 23 இல் நாடாளுமன்றில் விவாதிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரன் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார்.[63] வடக்கு கிழக்கிலும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி மற்றும் பாரதிபுரம் பகுதிகளில் மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் நிர்வாணமாக திரிகின்றனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்ததை அடுத்து ஆளும் தரப்பினர் அக்கூற்றுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் ஆகத்து 23 ம் திகதி துறைமுக விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார். மலையகத்தில் ஆரம்பித்த மர்ம மனிதனின் பீதி கிழக்கிற்கு சென்று தற்போது வடக்கிற்கு வியாபித்துள்ளது. மர்ம மனிதர்களை பிடிப்பதற்காக மக்கள் துரத்தி செல்கையில் அவர்கள் இராணுவ முகாம்களுக்குள்ளும் பொலிஸ் நிலையங்களுக்கும் புகுந்துவிடுகின்றனர். இறுதியில் துரத்தி செல்கின்ற பொதுமக்களுக்கு எதிராகவே படையினர் நடவடிக்கை எடுக்கின்றனர் இது நியாயமா எனவும் வினவினார்.[64] கிறீஸ் மனிதர்கள் என்பவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனில் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஆளுங் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியான எஸ். ஸ்ரீதரன் (ஆகத்து 23, 2011) சபையில் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையிலேய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.[65]
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்[தொகு]
நாவாந்துறையில் கிறீஸ் பூதத்தைப் பிடிக்க முடியாத பொலிஸார் பத்திரிகை புகைப்படப் பிடிப்பாளரைக் கைது செய்திருப்பதாக ஆகத்து 23ல் நாடாளுமன்றத்தில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கிறீஸ் பூதங்களைப் பிடிக்க அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய இந்தக் கேள்விக்கு அரச தரப்பிலிருந்து எவரும் பதிலளிக்கவில்லை.[66]
- ஆகத்து 25 2011 மர்ம மனிதனின் செயற்பாட்டினால் பெண்கள் தனித்திருக்க அஞ்சுகின்றனர். ஆண்கள் வீட்டில் இருப்பதனால் அவர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மர்ம மனிதனின் செயற்பாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பி.யான எஸ். யோகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஆகத்து 25 நடைபெற்ற இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் கட்டளைகள், தேயிலை சிறு பற்று நில அபிவிருத்தி சட்டத்தின் கீழான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலையியற் கட்டளையின் பிரகாரமே தான் உரையாற்றுவதாக தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி., மட்டக்களப்பில் மட்டுமே கிறீஸ் மனிதனின் செயற்பாட்டினால் 16 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம மனிதனின் செயற்பாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே நிறைவேறுகின்றது என்று தனது உரையை இடைநிறுத்திகொண்டார்.[67]
பேஸ்புக்கில் உலாவரும் கிறீஸ் மனிதன்[தொகு]
பேஸ்புக்கில் உலாவரும் கிறீஸ் மனிதன் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் பேஸ்புக் பாவனையாளர்கள் நிறுவனத்துக்கு நேரடியாக முறைப்பாடுகளை தெரிவிக்குமாறும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்களின் அவசர உதவி மற்றும் பொறுப்புகளுக்கான குழுவின் பிரதான பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே தெரிவித்துள்ளார்.[68]
யாழ்ப்பாணத்திலும் மர்ம மனிதர்கள்[தொகு]
மர்ம மனிதர்கள் நடமாட்டம் தொடர்பில் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகலும், மோதலும் உருவான சம்பவங்கள் தற்போது யாழ்ப்பாணத்திலும் நடந்துள்ளன. யாழ்ப்பாணம் நாவாந்துறையில் திங்கள் இரவு (ஆகத்து 22) மர்ம மனிதர்கள் மூவர் நடமாடியதாக தகவல்கள் பரவியதையடுத்து ஒன்று கூடிய பொதுமக்கள் அவர்களைப் பிடிப்பதற்காகத் துரத்திச் சென்றனர். அப்போது அம்மனிதர்கள் அருகில் உள்ள இராணுவ தளம் ஒன்றிற்குள் ஓடிச் சென்றுள்ளனர். அதனையடுத்து எதிர்ப்பு தெரிவிப்பதற்காகக் கூடிய பொதுமக்கள் மீது படையினர் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. படையினர் 102 பேரைக் கைது செய்து தம்முடன் கொண்டு சென்றதாக ஊர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை, வடமராட்சி பொலிகண்டி பகுதியிலும் இவ்வாறான மர்ம மனிதர்களின் நடமாட்டத்தை அவதானித்த ஊர்வாசிகள் அவர்களைப் பிடிப்பதற்காகத் துரத்திச் சென்றபோதும், அவர்களைப் பிடிக்க முடியாமல் போயுள்ளது. இவ்வாறு தப்பியோடியவர்கள் சிறிது தூரம் சென்றதும், அங்கு வந்த வாகனம் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.[69]
யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழு அலுவலகத்துக்கு முன்பாகவும் யாழ் சிறைச்சாலைக்கு முன்பாகவும், மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர்.[70] யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார்.[71]
மதத் தலைவர்கள் வேண்டுகோள்[தொகு]
மர்ம மனிதன் பீதியை போக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் என அரசிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் மதத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யுத்தம், இன்னோரன்ன அனர்த்தங்கள், பாதிப்புக்குப் பின்னர் மக்கள் சுதந்திரமாக வாழ முற்பட்டுள்ள இவ்வேளையில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகள் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் துயரத்தையும் தோற்றுவித்துள்ளன. இதனை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் நிலமை மேலும் மோசமாகக் கூடும் எனவும், எவரும் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறி வருகின்ற வேளையில் தினந்தோறும் மர்ம மனிதர்களால் மக்கள் பாதிக்கப்படும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இது மன நோயாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் செயல் என்று பாதுகாப்புத்துறையினரின் அறிக்கைகள் கூறினாலும், மக்கள் இதனை நம்பத் தயாரில்லை. மக்கள் தாமே மர்ம மனிதர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழ்நிலையே இன்று காணப்படுகின்றது என்றும் சமயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.[72]
மகஜர்[தொகு]
யாழ்.குடாநாட்டில் மர்ம மனிதர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து தடுத்தும் நிறுத்தக் கோரியும் ஜனாதிபதி உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மகஜர் அனுப்பி வைப்பதற்கு யாழ்.மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.[73]
ஜனாதிபதி இணக்கம்[தொகு]
வடக்கு, கிழக்கில் இடம்பெற்று வரும் கிறீஸ் மனிதர்கள் விடயத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதையடுத்து செப்டெம்பர் 10, 2011 திகதியன்று யாழ்ப்பாணத்தில் தாம் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவதென்று தமிழ்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதிக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் இடையில் இன்று இந்த விடயம் தொடர்பில் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது வடக்கு, கிழக்கில் கிறீஸ் பூதங்கள் என்று கூறப்படுவோரின் செயற்பாடும் இதன் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பிரசன்னங்களும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழ்க்கட்சிகள் சுட்டிக்காட்டின.[74]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கிறீஸ் பூதத்தின் பின்னணியில் அரசே செயற்பட்டுவருகின்றது[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "கோத்தபாயவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கிறீஸ் மனிதர்கள்!". 2016-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் மர்ம மனிதர் இலக்கு வைப்பது ஏன்? கேள்வி எழுப்புகிறது ஐ.தே.க. [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 20, 2011
- ↑ "மட். புதுநகரினுள் புகுந்த மர்மமனிதரை மக்கள் துரத்திச் சென்றபோது, பொலிஸ் காவலரணுக்குள் ஒளிந்தனர்! கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம்". 2016-03-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-08-16 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கிறிஸ் மனிதன்’ என்பது வெறும் பொய், பொலிஸ்மா அதிபர் பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 12, 2011
- ↑ 6.0 6.1 அக்கரப்பத்தனையில் "மர்ம மனிதன்' பீதி ஐந்து பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- ↑ ஓட்டமாவடியில் பொலிஸ் - மக்கள் மோதல், பிபிசி, ஆகத்து 11, 2011
- ↑ மர்ம மனிதர் போர்வையில் தொடர்ந்து அக்கிரமங்கள் திருக்கோவில்,பொத்துவில் பகுதியில் பெரும் களேபரம் துவக்குச் சூட்டில் ஒருவர் பலி,பொலிஸார் கண்ணீர்புகை[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- ↑ மர்ம மனிதர்களால் எழுந்துள்ள பதற்றத்தை போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 11, 2011
- ↑ மர்ம மனிதன் குறித்த விசாரணைகள் நம்பகத் தன்மையாக இடம்பெற்றால் மாத்திரமே மக்களின் பீதியைப் போக்க முடியும் திகாம்பரம் எம்.பி.[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 11, 2011
- ↑ மர்ம மனிதரென பீதியை ஏற்படுத்தி பரீட்சை எழுதும் மாணவரைக் குழப்பாதீர் அமைச்சர் தொண்டமான் வேண்டுகோள்[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- ↑ கிறிஸ் மனிதன் எனும் பெயரில் போலி நாடகமாடிய 47 பேர் இதுவரை கைது[தொடர்பிழந்த இணைப்பு], தினமின (சிங்களம்) ஆகத்து 12, 2011
- ↑ மர்மமனிதன் நடமாட்டம் குறித்து விசாரணை செய்ய சி.ஐ.டி குழு பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 12, 2011
- ↑ கிறீஸ் பூதங்கள் போர்வையில் நடமாடிய 47 பாலியல் பைத்தியங்கள் இதுவரை கைது பரணிடப்பட்டது 2011-09-16 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 14, 2011
- ↑ 47 பேர் இதுவரை கைது பரணிடப்பட்டது 2011-12-11 at the வந்தவழி இயந்திரம், சிலுமின, ஆகத்து 14, 2011
- ↑ மர்மமனிதர்களின் விவகாரத்திற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: மாவை[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 15, 2011
- ↑ Grease Devil’ panic grips Sri Lanka,
- ↑ கிரீஸ் பூதம் என்ற சந்தேகத்தில் இருவர் கொலை; ஹப்புத்தளையில் சம்பவம், தமிழ்மிரர், ஆகத்து 11, 2011
- ↑ சந்தேகத்தில் கொல்லப்பட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்[தொடர்பிழந்த இணைப்பு] வீரகேசரி, ஆகத்து 13, 2011
- ↑ 20.0 20.1 பொத்துவில் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு, பிபிசி, ஆகத்து 13, 2011
- ↑ நிலைமை குறித்து மாவை பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 14, 2011
- ↑ கடுகண்ணாவையில் ஜீப் தீக்கிரை தாக்குதலில் சாரதி ஆபத்தான நிலையில் மர்ம மனிதன் விவகாரத்தால் வந்த வினை [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 14, 2011
- ↑ பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட மர்ம நபர்: நாவலப்பிட்டியவில் சம்பவம்(காணொளி இணைப்பு)[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 15, 2011
- ↑ மர்ம மனிதர்கள் புகுந்ததால் கிண்ணியாவில் பெரும் களேபரம் பொலிஸார் துவக்குச் சூடு, கண்ணீர்ப் புகை பிரயோகம் 2 பொதுமக்கள் ,3 பொலிஸார் காயம்; ஜீப் தீக்கிரை பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 16, 2011
- ↑ மர்ம மனிதன் பீதியில் ஓடிய பெண் ரயிலில் மோதுண்டு பலி[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 16, 2011
- ↑ [1] பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம், தினமலர், ஆகத்து 17, 2011
- ↑ ஊரணியில் கிறீஸ் மனிதனின் தாக்குதலில் பெண் படுகாயம்: பிரதேசத்தில் கலவரம்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 17, 2011
- ↑ Tense situation in Batti, police fire teargas, அததெரன, ஆகத்து 17, 2011
- ↑ மர்ம மனிதன்: இழுத்துச் சென்று பெண் மீது அசிட் வீச்சு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன் , ஆகத்து 19, 2011
- ↑ பெண் தொழிலாளியின் கழுத்தை இறுக்கிய மர்ம மனிதன்: பத்தனையில் சம்பவம்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 18, 2011
- ↑ மர்ம மனிதன் கலவரத்தின் பின் காத்தான்குடியில் அமைதி[தொடர்பிழந்த இணைப்பு], அததெரன, ஆகத்து 20, 2011
- ↑ வீச்சுக்கல்முனையில் யுவதி மீது மர்ம மனிதர் தாக்குதல்[தொடர்பிழந்த இணைப்பு], அததெரன, ஆகத்து 20, 2011
- ↑ தாண்டியடியில் மர்ம மனிதர்களைப் பிடிக்க முயன்ற பொது மக்கள் மீது படையினர் கடும் தாக்குதல் 18 இளைஞர்கள் கைதாகி விடுதலை பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 21, 2011
- ↑ எருக்கலம்பிட்டியில் வீட்டுக் கதவை தட்டிய மர்ம மனிதனால் பதற்றம் பரணிடப்பட்டது 2011-09-18 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 21, 2011
- ↑ கற்பிட்டியில் பெண்ணைத் தாக்கிவிட்டு ஓடிய மர்ம மனிதன் பொதுமக்களால் நையப்புடைப்பு பரணிடப்பட்டது 2011-09-18 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல், ஆகத்து 21, 2011
- ↑ வெல்லாவெளியில் மர்ம மனிதன் குடும்பப் பெண் மீது தாக்குதல்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 17, 2011
- ↑ Man remanded for spreading “grease devil” rumors , adaderana, ஆகத்து 21, 2011
- ↑ செங்கலடியில் மர்ம மனிதன் தாக்குதல் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், அததெரன, ஆகத்து 21, 2011
- ↑ புத்தளத்தில் பதற்றம்; பொலிஸ்காரர் பலி , பிபிசி தமிழ், ஆகத்து 22, 2011
- ↑ புத்தளத்தில் பொலிஸார் - பொதுமக்கள் மோதல்: ஒருவர் பலி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், அததெரன, ஆகத்து 22, 2011
- ↑ பெண்ணின் மேற்சட்டையை கத்தியால் கிழித்து வீசிய மர்ம மனிதர்கள் வரிப்பத்தான் சேனையில் பரபரப்பு [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 24, 2011
- ↑ மாத்தளை நகரை அண்மித்த பகுதிகளில் மர்ம மனிதன் நடமாட்டம் அதிகரிப்பு [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 25, 2011
- ↑ மர்மமனிதன் பீதியில் துப்பாக்கிச்சூடு, குருதெனியவில் சம்பவம், 16வயது சிறுவன் பரிதாப மரணம்[தொடர்பிழந்த இணைப்பு], ஆகத்து 27, 2011
- ↑ குடாநாட்டில் மர்ம மனிதர்களின் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்[தொடர்பிழந்த இணைப்பு], ஆகத்து 27, 2011
- ↑ முல்லைத்தீவில் மர்ம மனிதர் நடமாட்டம் அதிகரிப்பு! பரணிடப்பட்டது 2013-03-24 at the வந்தவழி இயந்திரம், ஆகத்து 28, 2011
- ↑ சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 12, 2011
- ↑ நாட்டில் கிறீஸ் பூதங்களோ மர்ம மனிதர்களோ இல்லை: சுசில்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 16, 2011
- ↑ மர்ம மனிதர் விடயத்தில் சட்டத்தை கரத்தில் எடுக்க எவருக்கும் அனுமதியில்லை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம், தினக்குரல் , ஆகத்து 19, 2011
- ↑ மர்ம மனிதர்களை பிடிக்க முடியாதா? ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், ஆகத்து 13, 2011
- ↑ தற்போதைய பதற்றமான சூழ்நிலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் ஜே.வி.பி.சாடுகிறது[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 14, 2011
- ↑ மர்ம மனிதர் அச்சுறுத்தல்; ஜனாதிபதியுடன் ஹக்கீம் சந்திப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 14, 2011
- ↑ பொத்துவில் நிலமை: அமைச்சர் ஹக்கீம் கருத்து , பீ.பீ.சி, ஆகத்து 14, 2011
- ↑ மர்மம்': கிழக்கில் பீதியில் உறைந்த மக்கள் , பீ.பீ.சி, ஆகத்து 14, 2011
- ↑ மர்ம மனிதன் வதந்தியா ? 118, 119 க்கு அறிவிக்கவும்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 14, 2011
- ↑ பொலிஸார் பாதுகாப்பு அளிப்பது பொதுமக்களுக்கா மர்ம மனிதர்களுக்கா சந்தேகம் காணப்படுவதாகக் கூறுகிறார் அரியநேத்திரன் [தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 14, 2011
- ↑ கிறீஸ் பூதம்: பெண் அமைப்புகள் கவலை, பீ.பீ.சி, ஆகத்து 17, 2011
- ↑ ஒரு சக்தியின் பின்னணி இல்லாது மர்ம மனிதர்கள் நடமாட முடியாது: த.தே.கூ _[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 18, 2011
- ↑ பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 16, 2011
- ↑ மட்டு. தாதியர் பயிற்சி கல்லூரிக்குள் மர்ம மனிதர்கள் ஊடுருவல்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 20, 2011
- ↑ புலிகளிருந்த காலத்தை விடவும் மர்மமனிதர்களால் மக்கள் அச்சத்தில்: ஐ.தே.க[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 20, 2011
- ↑ அவசரகால சட்டத்தை தக்கவைக்க அரசினால் நிர்மாணிக்கப்பட்ட பயங்கரவாதமே "கிறீஸ் பூதம்'[தொடர்பிழந்த இணைப்பு], பிபிசி தமிழ், ஆகத்து 22, 2011
- ↑ மர்ம மனிதர்களுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை : பாதுகாப்புச் செயலர்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 23, 2011
- ↑ கிரீஸ் பூதம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிப்போம் - த.தே.கூ பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், அத தெரன, ஆகத்து 22, 2011
- ↑ வடக்கில் இரவில் நிர்வாணமாக நடமாடும் மர்ம மனிதர்கள்: த.தே.கூ.[தொடர்பிழந்த இணைப்பு], ஆகத்து 24, 2011
- ↑ இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 24, 2011
- ↑ கிறீஸ் பூதத்தை கைதுசெய்ய முடியாத பொலிஸார் புகைப்படப்பிடிப்பாளரை கைதுசெய்தது ஏன் நாவாந்துறை சம்பவம் குறித்து ரணில் கேள்வி பரணிடப்பட்டது 2011-09-18 at the வந்தவழி இயந்திரம், ஆகத்து 24, 2011
- ↑ கிறீஸ் மனிதனின் செயற்பாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இடம்பெறுகிறது: யோகேஸ்வரன்[தொடர்பிழந்த இணைப்பு], ஆகத்து 24, 2011
- ↑ பேஸ்புக்கில் கிறீஸ் மனிதன்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 23, 2011
- ↑ மர்ம மனிதர்கள்: யாழ் மக்கள் மீது இராணுவம் தாக்குதல், பி.பி.சி, ஆகத்து 23, 2011
- ↑ யாழ்ப்பாணத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 24, 2011
- ↑ யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள் கட்டளைத் தளபதி சந்தேகம்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 24, 2011
- ↑ அரசிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் மதத் தலைவர்கள் வேண்டுகோள்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 24, 2011
- ↑ மர்ம மனிதர் செயல்களை தடுத்து நிறுத்த ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானம் யாழ்.மாநகர சபையில் நிறைவேறியது[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், செப்டெம்பர் 9, 2011
- ↑ 20cIBV40ePjQC4ebiGphcbdF92sddc8293bc41pG3e43oQj2023PL022கிறீஸ் பூதம் விரட்டப்படும்! ஜனாதிபதி உறுதிமொழி! தமிழ்க்கட்சிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டன பரணிடப்பட்டது 2011-08-16 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், செப்டெம்பர் 9, 2011
மூலம்[தொகு]
- ஓட்டமாவடியில் பொலிஸ் - மக்கள் மோதல், பிபிசி, ஆகத்து 11, 2011
- மர்ம மனிதர்களின் பீதியினால் மலையகத்தில் தொடர்ந்தும் பதற்றம்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 11, 2011
- மர்ம மனிதர்களால் எழுந்துள்ள பதற்றத்தை போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் ஆறுமுகன் தெரிவிப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 11, 2011
- பெண்ணைச் சீண்டிய கிறீஸ்மனிதன் மக்களால் வளைத்துப் பிடிப்பு[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், ஆகத்து 11, 2011
- மர்ம மனிதன் குறித்த விசாரணைகள் நம்பகத் தன்மையாக இடம்பெற்றால் மாத்திரமே மக்களின் பீதியைப் போக்க முடியும் திகாம்பரம் எம்.பி.[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 11, 2011
- கிரீஸ் பூதம் என்ற சந்தேகத்தில் இருவர் கொலை; ஹப்புத்தளையில் சம்பவம், தமிழ்மிரர், ஆகத்து 11, 2011
- வதந்தியை சாதகமாக்கி திருடர்கள், காமவெறியர்கள் கைவரிசை பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 12, 2011
- ஹப்புத்தளையில் கொலை பரணிடப்பட்டது 2011-08-27 at the வந்தவழி இயந்திரம், தினமின (சிங்களம்) ஆகத்து 12, 2011
- மர்மமனிதன் நடமாட்டம் குறித்து விசாரணை செய்ய சி.ஐ.டி குழு பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 12, 2011
- கிறிஸ் மனிதன் எனும் பெயரில் போலி நாடகமாடிய 47 பேர் இதுவரை கைது[தொடர்பிழந்த இணைப்பு], தினமின (சிங்களம்) ஆகத்து 12, 2011
- பொத்துவில் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு, பிபிசி, ஆகத்து 13, 2011
- மர்ம மனிதர் போர்வையில் தொடர்ந்து அக்கிரமங்கள் திருக்கோவில்,பொத்துவில் பகுதியில் பெரும் களேபரம் துவக்குச் சூட்டில் ஒருவர் பலி,பொலிஸார் கண்ணீர்புகை[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் பரணிடப்பட்டது 2011-08-17 at the வந்தவழி இயந்திரம், வீரகேசரி, ஆகத்து 13, 2011
- பீதியை ஏற்படுத்தும் மனிதர்கள் நடமாட்டம்:[தொடர்பிழந்த இணைப்பு] தினகரன், ஆகத்து 13, 2011
- அக்கரப்பத்தனையில் "மர்ம மனிதன்' பீதி ஐந்து பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- மர்ம மனிதரென பீதியை ஏற்படுத்தி பரீட்சை எழுதும் மாணவரைக் குழப்பாதீர் அமைச்சர் தொண்டமான் வேண்டுகோள்[தொடர்பிழந்த இணைப்பு], தினக்குரல், ஆகத்து 13, 2011
- சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 12, 2011
- பீதியை ஏற்படுத்த வேண்டாம் பரணிடப்பட்டது 2014-09-10 at the வந்தவழி இயந்திரம், தினமின (சிங்களம்) ஆகத்து 13, 2011
- சந்தேகத்தில் கொல்லப்பட்ட இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்[தொடர்பிழந்த இணைப்பு], வீரகேசரி, ஆகத்து 13, 2011
- மர்ம மனிதர்களை பிடிக்க முடியாதா? ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச பரணிடப்பட்டது 2016-03-10 at the வந்தவழி இயந்திரம், தமிழ்வின், ஆகத்து 13, 2011
- மட்டக்களப்பு மாநகர சபைப்குதிக்குள் மர்ம மனிதன் பொலிஸாரால் கைது[தொடர்பிழந்த இணைப்பு] வீரகேசரி, ஆகத்து 13, 2011
- Government Ministers hold meeting in Pottuvil, டெயிலிமிரர், ஆகத்து 13, 2011
- இலங்கையில் கிறிஸ்மனிதனும் அதன் பின்னணியும்...., ரத்தம் இல்லாத யுத்தம்
- படங்களில்: பூதாகரமாகும் 'க்ரீஸ் பூதம்', பீ.பீ.சி, ஆகத்து 17, 2011
- மர்ம மனிதர்களால் பெண்களுக்கே பாதிப்பு, பீ.பீ.சி, ஆகத்து 17, 2011
- போரின் முடிவுக்குப் பின்னரான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மர்ம மனிதர்கள் ஒரு சவால் பரணிடப்பட்டது 2011-09-17 at the வந்தவழி இயந்திரம் தினக்குரல், ஆகத்து 28, 2011