கிறிஸ் கெய்ர்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டோபர் லான்ஸ் கெய்ர்ன்ஸ்

கிறிஸ்டோபர் லான்ஸ் கெய்ர்ன்ஸ் (Christopher Lance Cairns (பிறப்பு: ஜூன் 13, 1970) ஒரு முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் மற்றும் முன்னாள் ஒருநாள் துடுப்பாட்ட அணியின் தலைவர் ஆவார்.இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். 62 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 3,320 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது மட்டையாட்ட சராசரி 33.53 ஆகும். 215 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 4,950 ஓட்டங்களை 29.46 எனும் சராசரியில் எடுத்துள்ள இவரது அதிகபட்ச ஓட்டம் 115 ஓட்டங்கள் எடுத்தது ஆகும்.இவரது மேலும் இவர் 217 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 10,702 ஓட்டங்களை 35.32 எனும் மட்டையாட்ட சராசரியில் எடுத்தார். இவர் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை எடுத்தார். 424 பட்டியல் அ போட்டிகளிலும் விளையாடி 10,367 ஓட்டங்களை 32.60 எனும் சராசரியில் எடுத்த இவர் அதிகபட்சமாக 143 ஓட்டங்களை எடுத்தார். இவர் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்காக பன்முக வீரராக விளையாடினார் . 2000 ஆம் ஆண்டில், அவர் ஆண்டின் ஐந்து விசுடன் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நியூசிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் லான்ஸ் கெய்ர்ன்ஸின் மகன். அவர் ஒருநாள் மற்றும் தேர்வுத் துடுப்பாட்ட நியூசிலாந்து அணிகளிலும், கேன்டர்பரி நியூசிலாந்து உள்நாட்டு அணியிலும் விளையாடினார். கெய்ர்ன்ஸ் தனது விளையாட்டு வாழ்க்கைக்குப் பிறகு ஸ்கை ஸ்போர்ட் தொலைக்காட்சியில் துடுப்பாட்ட வர்ணனையாளராக மாறினார்.

உள்ளூர் போட்டிகள்[தொகு]

கெய்ன்ஸ் ஹாக் கோப்பையில் நார்த்லேண்ட் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். அவர் இந்திய கிரிக்கெட் லீக்கில் சேர்ந்தார், மேலும் 2008 ல் அது நிருத்தப்படும் வரை சண்டிகர் லயன்ஸ் அணியின் தலைவராக இருந்தார். பின்னர் அவர் இருபது -20 கோப்பை போட்டியில் நாட்டிங்ஹாம்ஷையர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

கெய்ர்ன்ஸ் பேட்டிங்

2000 ஆம் ஆண்டில் கென்யாவில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐ.சி.சி நாக் அவுட் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற அவரது மட்டையாட்டம் உதவியது. அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களை எடுத்தார். 2004 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 172 பந்துகளில் 158 ஓட்டங்களை எடுத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆகஸ்ட் 1993 ஆம் ஆண்டில் ரோலஸ்டனில் நடந்த ரயில் விபத்தில் அவரது சகோதரி லூயிஸ் கொல்லப்பட்டார். செப்டம்பர் 2008 இல் அவர் 1,001 km (622 mi) தூரம் ரயில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் நடைப்பயணத்தினை இவர் மேற்கொண்டார். [1]

சிட்னியில் உள்ள ஆக்டகன் என்ற விளையாட்டு சந்தைப்படுத்தல் குழுவில் பணிபுரியும் ஆஸ்திரேலியரான மெலனி க்ரோசரை கெய்ர்ன்ஸ் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இது அவரது மூன்றாவது திருமணம் ஆகும். கெய்ர்ன்ஸ் கான்பெர்ராவில் வசித்து வருகிறார், மேலும் 2011/12 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் துடுப்பாட்ட சங்கமான நார்த் கான்பெர்ரா குங்காஹ்லின் ஈகிள்ஸ் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.  ஆகத்து 11 அன்று ஆத்திரேலியாவிற்குச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். கான்பெர்ரா மருத்துவமனையில் இவர் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறியப்படுகிறது.[2]

சான்றுகள்[தொகு]


  1. "Cairns battles emotions at end of trek". The New Zealand Herald. 22 September 2008. பார்க்கப்பட்ட நாள் 21 September 2008.
  2. "நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கவலைக்கிடம்". Dailythanthi.com. 2021-08-11. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_கெய்ர்ன்ஸ்&oldid=3219911" இலிருந்து மீள்விக்கப்பட்டது