உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்லின் டி'சோசா-ஷோரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்லின் டி'சோசா-ஷோரி
பிறப்புமும்பை
கல்விப் பின்னணி
கல்விசான் அந்தோனியோவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையம் (முனைவர் பட்டம், 1992)
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்நோட்ரெ டேம் பல்கலைக்கழகம்

கிறிஸ்லின் டி'சோசா-ஷோரி (Crislyn D'Souza-Schorey) ஓர் அமெரிக்க-இந்திய உயிரியலாளர் ஆவார். நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் மோரிஸ் பொல்லார்ட் பேராசிரியராகவும், உயிரியல் அறிவியலின் முன்னாள் துறைத் தலைவராகவும் உள்ளார். இயல்பான சூழல்களிலும் நோயுற்ற நிலைகளிலும் சவ்வுக் கடத்தல் எவ்வாறு செல் இயக்கத்தைப் பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்கிறார்.

இளமை வாழ்க்கை

[தொகு]

டி'சோசா-ஷோரி இந்தியாவின் மும்பையில் பிறந்து வளர்ந்தார். தனது 19 வயதில் தனது இளங்கலை பட்டத்தையும் பின்னர், முதுகலைப் பட்மும் பெற்றார்.[1] பின்னர் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு 1992 ஆம் ஆண்டில் சான் அந்தோனியோவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக சுகாதார அறிவியல் மையத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2]

தனது முனைவர் பட்டத்திற்குப் பிறகு, டி'சோசா-ஷோரி வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் முதுமுனைவர் ஆய்வு உதவித்தொகையை ஏற்றுக்கொண்டார். இந்தப் பணியில், புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் கண்டறியும் கருவிகள் குறித்து ஆய்வு செய்யத் தொடங்கினார். இவரது ஆராய்ச்சி, ஏஎஃப்ஆர் 6 எண்டோசோம்கள் சவ்வு கடத்தலில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதையும், மேலும் உயிரணுவின் மேற்பரப்பில் கட்டமைப்பு ஒழுங்கமைப்பை நிர்வகிப்பதையும் கண்டறிய வழிவகுத்தது.[3]

தொழில் வாழ்க்கை

[தொகு]

தனது முனைவர் பட்ட மேற்படிப்புக்குப் பிறகு, டி'சோசா-ஷோரி 1998-ல் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தில் வால்டர் புற்றுநோய் நிறுவனத்தின் இளையப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[4] தனது சொந்த ஆய்வகத்தைத் தொடங்கியபோது, ஏ. ஆர். எஃப் 6 உயிரணுக்களுக்கு இடையேயான தொடர்பை ஒழுங்குபடுத்துகிறது என்பதை அவர் கண்டறிந்தார்..[5] அதன்பிறகு அந்தப் புரதம் கட்டி உயிரணுக்களை எவ்வாறு பாதித்து மாற்றியமைக்கிறது என்பதை ஆராய்வதன் மூலம், புறவணியிழையம் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்யத் தொடங்கினார்

2009-ல், திசுச் சிதைவின் ஊக்கிகளான புரோட்டியேஸ்கள் செறிந்துள்ள, ஒரு தனித்துவமான நுண்குமிழித் தொகுதியை அடையாளம் காட்டும் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். இந்த நுண்குமிழிகளின் வெளியீடு, தொலைதூர இடங்களில் திசுக்களைச் சிதைப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஒரு வழிமுறையை வழங்குகிறது.[6] தனது கல்விசார் சாதனைகளின் விளைவாக, டி'சோசா-ஷோரி 2012-ல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்..[7]

2014 ஆம் ஆண்டில், நோட்ரே டேம் உயிரியல் அறிவியல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை டி'சோசா பெற்றார்.[8][9] இந்தப் பதவியில் பணியாற்றியபோது, ​​கட்டி உயிரணுக்களிலிருந்து உருவாகும் ஊடுருவும் நுண்குமிழிகளைக் கண்டறியும் ஒரு முறைக்கு இவர் காப்புரிமை பெற்றார்.[10] 2020-ஆம் ஆண்டில், "தலைமைத்துவச் செயல்பாடுகள், சக பேராசிரியர்களுக்கு வழிகாட்டுதல், அல்லது மாணவர்களிடம் முன்மாதிரியான அர்ப்பணிப்பு" போன்றவற்றின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு இவர் ஆற்றிய "சிறந்த சேவைக்காக", டி'சௌசா-ஷோரிக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது..[11][12] 2022-ல், அமெரிக்க பரிசோதனை உயிரியல் சங்கங்களின் கூட்டமைப்பின் பயோஅட்வான்சஸ் இதழின் இணை முதன்மை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்..[13]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

டி'சௌசா, உயிரியலாளர் ஜெஃப்ரி ஷோரி என்பவரி மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. McCool, Deanna (March 2018). "Women Who Lead: Crislyn D'Souza-Schorey". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  2. "Crislyn D'Souza-Schorey". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  3. Nybo, Kristie (2009). "Passion Breeds Opportunities: Crislyn D'Souza-Schorey". BioTechniques (Future Science) 46 (3): 155. doi:10.2144/000113129.
  4. "LECTURERS AT THE JEFFERSON EDUCATIONAL SOCIETY". Jefferson Educational Society. Retrieved May 5, 2023.
  5. Nybo, Kristie (2009). "Passion Breeds Opportunities: Crislyn D'Souza-Schorey". BioTechniques (Future Science) 46 (3): 155. doi:10.2144/000113129.
  6. Gilroy, William G. (November 4, 2009). "New Notre Dame study provides insights into the molecular basis of tumor cell behavior". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  7. "AAAS Members Elected as Fellows". American Association for the Advancement of Science. November 30, 2012. Retrieved May 5, 2023.
  8. Frazier, Matt (October 30, 2019). "Up Close with the Department Chair". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  9. Stowe, Gene (March 30, 2014). "D'Souza-Schorey named chair of the Department of Biological Sciences". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  10. Stowe, Gene (Spring 2017). "Discoveries lead to new patents" (PDF). University of Notre Dame. p. 11. Retrieved May 5, 2023.
  11. "Crislyn D'Souza-Schorey Receives 2020 Faculty Award". University of Notre Dame. May 29, 2020. Retrieved May 5, 2023.
  12. Csomo McCool, Deanna (June 15, 2020). "Rohr to succeed D'Souza-Schorey as chair in Department of Biological Sciences". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  13. Csomo Ferrell, Deanna (January 18, 2022). "D'Souza-Schorey and Smith named as journal editors". University of Notre Dame. Retrieved May 5, 2023.
  14. Frazier, Matt (October 30, 2019). "Up Close with the Department Chair". University of Notre Dame. Retrieved May 5, 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்லின்_டி%27சோசா-ஷோரி&oldid=4555799" இலிருந்து மீள்விக்கப்பட்டது