கிறிஸ்துலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுள் (2014ம் ஆண்டு கணக்கின் படி)

கிறிஸ்துலகம்[1][2] என்பது வரலாற்றில் கிறிஸ்தவ நாடுகள் அல்லது கிறிஸ்தவம் அதிகமாக பின்பற்றப்படும் இடங்களையும் பகுதிகளை குறிக்க பயன்படுத்தப்பட்ட பதம் ஆகும்.[1]

உரோமைப் பேரரசின் தொடக்க காலத்தில் லெவண்டிலிருந்து ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு கிறிஸ்தவம் பரவிய போது கிரேக்க மொழி பேசும் கிழக்கு பகுதிகளும் லத்தின் மொழி பேசும் மேற்கு பகுதிகளும் அடங்கிய இரண்டு மிகப்பெரிய பிரிவுகளைக்கொண்டதாக கிறிஸ்துலகம் விளங்கியது. காலப்போக்கில் இவை இரண்டும் தத்தம் வழிபாட்டு முறைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உரோம் நகரினை மையமாகக்கொண்டது மேற்கத்திய கிறித்தவம் (இலத்தீன் கிறித்தவம்)[3] எனவும் கான்ஸ்டண்டினோபில் நகரினை மையமாகக்கொண்டது கிழக்கத்திய கிறித்தவம் (கிரேக்க கிறித்தவம்)[4] எனவும் உருவெடுத்தது. பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய கிறிஸ்தவம் மேற்கில் குறிக்கத்தக்க பங்கு வகித்தது.[5] 1700 ஆண்டுகால கிறிஸ்தவ வரலாற்றில் பல சமூக, அரசியல், கலை, அறிவியல், மெய்யியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.[6][7][8]

இந்தப்பதம் குறிப்பாக நடு காலத்திலும் முன் நவீன காலத்திலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களுக்கு எதிராக, குறிப்பாக இசுலாமிய உலகிற்கு எதிராக ஒருங்கிணைந்த அரசியல் அமைப்புகளை குறைக்க உதவியது.


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 See Merriam-Webster.com : dictionary, "Christendom"
  2. Marty, Martin (2008). The Christian World: A Global History. Random House Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58836-684-9. https://books.google.com/books?id=MoolUlqQdmAC. 
  3. Chazan, Robert (2006). The Jews of Medieval Western Christendom: 1000-1500. Cambridge: Cambridge University Press. பக். xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521616645. https://books.google.com/books?id=JxJQ_98I3R0C. பார்த்த நாள்: 26 ஜனவரி 2018. 
  4. Encarta-encyclopedie Winkler Prins (1993–2002) s.v. "christendom. §1.3 Scheidingen". Microsoft Corporation/Het Spectrum.
  5. Chazan, p. 5.
  6. Dawson, Christopher; Olsen, Glenn (1961). Crisis in Western Education (reprint ). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8132-1683-6. 
  7. E. McGrath, Alister (2006). Christianity: An Introduction. John Wiley & Sons. பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1405108991. 
  8. "Review of How the Catholic Church Built Western Civilization by Thomas Woods, Jr.". National Review Book Service. மூல முகவரியிலிருந்து 22 ஆகஸ்ட் 2006 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்துலகம்&oldid=3094606" இருந்து மீள்விக்கப்பட்டது