கிறிஸ்தவ நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்தவ நாடு அல்லது கிறித்துவ அரசு என்பது கிறிஸ்தவ மதத்தின் ஒரு வடிவத்தை தன் அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரிக்கும் ஒரு நாடு ஆகும். பெரும்பாலும் இந்நாடு, ஒரு அரசு தேவாலயத்தைக் கொண்டிருக்கும். இந்த ஆலயம் அரசாங்கத்தை ஆதரிக்கும், அரசாங்கத்தால் ஆதரிக்கபட்டு இயங்கும் ஓர் அமைப்பாகும்.

கிறித்துவத்தை தங்கள் தேசிய மதமாக கொணடுள்ள நாடுகள் நீல நிறத்தில் இருப்பவை.

அர்மேனியா, அபிசீனியா, ஜார்ஜியா, ரோமானியப் பேரரசு மற்றும் பைசண்டைன் பேரரசு ஆகியவை முதன்முதலாக தங்களை கிறிஸ்தவ நாடுகளாக அறிவித்தன.[1]

இன்று, பல நாடுகள் அதிகாரப்பூர்வமாக தங்களை கிறிஸ்தவ அரசுகளாக அடையாளப்படுத்துகின்றன அல்லது அரசு தேவாலயங்களைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் அர்ஜென்டீனா, அர்மேனியா, கோஸ்டாரிகா, எல் சால்வடார், டென்மார்க் (கிரீன்லாந்து உட்பட),இங்கிலாந்து, எத்தியோப்பியா, பரோயே தீவுகள், ஜார்ஜியா, கிரீசு, ஹங்கேரி, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மால்டா, மொனாக்கோ, நார்வே, சமோவா, செர்பியா, டோங்கா, துவாலு, வாடிகன் நகரம், மற்றும் ஜாம்பியா ஆகியவை அடங்கும்.

ஒரு கிறிஸ்தவ அரசானது, மதச்சார்பற்ற அரசுகள், இறைமறுப்பு அரசுகள், அல்லது யூத அரசுகள், அல்லது இசுலாமிய அரசுகள் போன்ற மற்ற அரசுகளுக்கு முரணாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "முதல் கிறித்தவ நாடு". BBC.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தவ_நாடு&oldid=3416178" இலிருந்து மீள்விக்கப்பட்டது