உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம், தூரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம்
Basilica di Santa Maria Ausiliatrice
ஆலய முகப்பு
அமைவிடம்துரின்
நாடுஇத்தாலி
சமயப் பிரிவுகத்தோலிக்க திருச்சபை
வரலாறு
திருத்தந்தையின் ஆணை ஓலை9 ஜூன் 1868
நிறுவப்பட்டது1865
Architecture
பாணிNeoclassical
நிருவாகம்
மறைமாவட்டம்தூரின் உயர் மறைமாவட்டம்

கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயம் என்பது இத்தாலியின் தூரினில் உள்ள ஒரு பேராலயமாகும்.[1] இந்த கட்டிடம் முதலில் ஜான் போஸ்கோவால் பராமரிக்கப்பட்ட ஏழை சிறுவர்களுக்கான இல்லத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது இவ்வாலயத்தில் தொன் போஸ்கோவின் உடலும், பிற ஆறாயிரம் கத்தோலிக்கப் புனிதர்களின் திருப்பண்டங்களும் உள்ளன.[2]

திருத்தந்தை பத்தாம் பயஸ் 1911 ஜூலை 12 அன்று அன்னோ ரெபராட்டே சலூடிஸ் என்ற திருப்பீட ஆணை மூலம் இவ்வாலயத்தை இளம்பேராலயமாக உயர்த்தினார்.[சான்று தேவை]

வரலாறு

[தொகு]

வால்தோக்கோ புறநகரில் சலேசியர்கள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு, கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் பேராலயத்தினைக் கட்ட ஜான் போஸ்கோ முடிவுசெய்தார். சலேசியர்களின் கூற்றுப்படி, 1844 அல்லது 1845 ஆம் ஆண்டில் போஸ்கோவிற்கு கனவில் கன்னி மேரியா காட்சி தந்து தூரினின் புனிதர்களான சொலூட்டர், அட்வென்டர் மற்றும் ஆக்டேவியஸ் ஆகியோர் மறைசாட்சிகளாய் மரித்த இடத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆலயம் இவர்கள் இறந்த இடத்திலேயே கட்டப்பட்டது மட்டுமல்லாமல் இந்த புனிதர்களின் திருப்பண்டங்களும் இங்கே உள்ளன.

இந்த ஆலயத்தை வடிவமைத்தவர் அன்தோனியோ ஸ்பெசியா. அவர் வெனிஸில் உள்ள புனித ஜார்ஜ் பேராலய முகப்பின் வடிவமைப்பைத் தழுவி இதனை அமைத்தார். இது 1865–1868 ஆம் ஆண்டில் கார்லோ புசெதி (தொன்போஸ்கோவின் மாணவர் குழுவின் முதல் சிறுவர்களில் ஒருவர்) என்பவரால் கட்டப்பட்டது. 1865 ஏப்ரல் 27 அன்று இளவரசர் அமெதியோ டி சவோயா முன்னிலையில் அடிக்கல் இடப்பட்டது. இந்த ஆலயம் 1868 ஆம் ஆண்டு ஆர்ச்சிக்கப்பட்டது.

தொன் போஸ்கோவின் தாயார் மம்மா மார்கெரிட்டாவின் நினைவுப் பலகை

இப்பேராலயத்தில் மரியா கிறிஸ்தவர்களின் சகாய அன்னை என்ற பட்டத்தில் கன்னி மரியாவின் ஓவியம் ஒன்று உள்ளது. 1903 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் நாள், திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ, இவ்வோவியத்தினை முடிசூட்ட அனுமதி வழங்கினார். இச்சடங்கு 1903 மே 17 அன்று அவரது திருத்தந்தையின் பதில் ஆளாக கார்தினால் அகோஸ்டினோ ரிச்செல்மியினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பசிலிக்காவில் புனிதர்களான டான் போஸ்கோ, மரிய தொமினிகா மசரெல்லோ, தோமினிக் சாவியோ மற்றும் புனித ஜோசப் பெனடிக்ட் கோட்டோலெங்கோ ஆகியோரின் கல்லறைகளை உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cotichella, G. (2015), Guida ai luoghi di don Bosco, துரின்: Editrice ELLEDICI, p. 73, ISBN 978-88-01-05721-8
  2. "Basilica di Maria SS. Ausiliatrice". Archived from the original on 2007-05-03. Retrieved 2007-02-12.