கிறிஸ்டைன் லகார்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டைன் லகார்டே
மேலாண் இயக்குனர்,
பன்னாட்டு நாணய நிதியம்
அறிவிகப்பட்ட
பதவியேற்பு
5 சூலை 2011
துணை ஜான் லிப்ஸ்கி
முன்னவர் ஜான் லிப்ஸ்கி (பொறுப்பில்)
பிரான்சு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
19 சூன் 2007
பிரதமர் பான்சுவா ஃபில்லோன்
முன்னவர் யான் லூயி போர்லூ
பின்வந்தவர் தீர்மானிக்கபடவில்லை
வேளாண் அமைச்சர்
பதவியில்
18 மே 2007 – 19 சூன் 2007
பிரதமர் பான்சுவா ஃபில்லோன்
முன்னவர் டொமினிக் புசரோ
பின்வந்தவர் மைக்கேல் பார்னியர்
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
பதவியில்
31 மே 2005 – 18 மே 2007
பிரதமர் டொமினிக் டி வில்லேபின்
முன்னவர் கிறிஸ்டியன் ஜாகப்
பின்வந்தவர் பதவி ஒழிக்கப்பட்டது
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1956 (1956-01-01) (அகவை 67)
பாரிசு, பிரான்சு
அரசியல் கட்சி யூனியன் ஃபார் அ பாபுலர் மூவ்மென்ட்
படித்த கல்வி நிறுவனங்கள் பாரிசு மேற்கு பல்கலைக்கழகம் நான்டெர்ரெ லா டிஃபென்சு
அரசறிவியல் கல்வி நிறுவனம், ஏய்க்ஸ்-ஆன்-பிரொவின்சு
சமயம் கத்தோலிக்கர்

கிறிஸ்டைன் மேடலீன் ஓடெட் லகார்டே (Christine Madeleine Odette Lagarde, பிறப்பு 1 சனவரி 1956)[1] பிரான்சின் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் பெண் தலைவராக சூலை 5, 2011 அன்று பொறுப்பேற்க தெரிவு செய்யப்பட்டுள்ளவருமாவார்[2]. சூன் 2007 அன்று பிரான்சின் நிதி அமைச்சராக குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியால் நியமிக்கப்பட்டார். முன்னதாக, டொமினிக் வில்லெபின்னின் அரசில் வேளாண் அமைச்சராகவும் வணிக அமைச்சராகவும் பங்காற்றி யுள்ளார். ஜி8 நாடுகள் ஒன்றில் பொருளாதார விவகார அமைச்சராகப் பணியாற்றிய முதல் பெண் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் தலைவர் என்ற பெருமையும் கொண்டவர்.[3]

ஏகபோகத்திற்கு எதிரான மற்றும் தொழிலாளர் நலன் வழக்கறிஞராக அறியப்பட்ட லகார்டே பன்னாட்டு சட்ட நிறுவனம், பேக்கர் & மெக்கன்சியின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 16, 2009 நாளிட்ட த பினான்சியல் டைம்ஸ் இதழ் ஐரோப்பிய வலயத்தில் மிகச்சிறந்த நிதி அமைச்சராக தரவரிசைப்படுத்தி உள்ளது.[4] 2009ஆம் ஆண்டு போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் மிகச் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் லகார்டே 17வதாக குறிப்பிடப்பட்டுள்ளார் .[5]

சூன் 28, 2011, பாலியல் குற்றவழக்குத் தொடரப்பட்டுள்ள டொமினிக் ஸ்ட்ராஸ்-கானிற்கு மாற்றாக பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த மேலாண் இயக்குனராக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். சூலை 5, 2011 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார்.[3][6][7]

ஊடகம்[தொகு]

2011 ஆண்டு வெளியான எச்பிஓ நிறுவனத்தின் டூ பிக் டு ஃபெயில் என்ற திரைப்படத்தில் லைலா ராபின்சு என்ற நடிகை லகார்டேயாக சித்தரிக்கப்படுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Le Nouvel Economiste" இம் மூலத்தில் இருந்து 2011-08-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110828092934/http://www.nouveleconomiste.fr/Portraits/1230-Lagarde.html. 
  2. "ஐஎம்எப்பின் முதல் பெண் தலைவர் கிறிஸ்டைன் லகார்டே!" இம் மூலத்தில் இருந்து 2011-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110821011427/http://thatstamil.oneindia.in/news/2011/06/29/france-s-christine-lagarde-is-first-woman-imf-chief-aid0136.html. 
  3. 3.0 3.1 "IMF Executive Board Selects Christine Lagarde as Managing Director". Press Release (IMF). 28 June 2011. http://www.imf.org/external/np/sec/pr/2011/pr11259.htm. பார்த்த நாள்: 28 June 2011. 
  4. From Ralph Atkins, Andrew Whiffin and FT reporters. (16 October 2009). "FT ranking of EU finance ministers". Financial Times. http://www.ft.com/cms/s/0/3f36c9c4-d2d0-11de-af63-00144feabdc0.html?nclick_check=1. பார்த்த நாள்: 2 January 2010. 
  5. (ஆங்கில மொழியில்) « The 100 Most Powerful Women », forbes.com
  6. "France's Lagarde elected new IMF chief". Reuters. 28 June 2011. http://www.reuters.com/article/2011/06/28/us-imf-idUSTRE75Q60H20110628. பார்த்த நாள்: 28 June 2011. 
  7. "Christine Lagarde named IMF chief". BBC News. 28 June 2011. http://www.bbc.co.uk/news/business-13951950. பார்த்த நாள்: 28 June 2011. 

வெளியிணைப்புகள்[தொகு]

அரசியல் பதவிகள்
முன்னர்
கிறிஸ்டியன் ஜாகப்
வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர்]]
2005–2007
பின்னர்
பதவி ஒழிக்கப்பட்டது
முன்னர்
டொமினிக் புசரோ
வேளாண் அமைச்சர்
2007
பின்னர்
மைக்கேல் பார்னியர்
முன்னர்
யான்-லூயி போர்லூ
நிதி அமைச்சர்
2007–2011
பின்னர்
நிச்சயமாகவில்லை
முன்னர்
ஜான் லிப்ஸ்கி
பொறுப்பில்
பன்னாட்டு நாணய நிதியத்தின் மேலாண் இயக்குனர்
அறிவிப்பு

2011–
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டைன்_லகார்டே&oldid=3549933" இருந்து மீள்விக்கப்பட்டது