கிறிஸ்டியன் மைக்கேல்சன்
கிறிஸ்டியன் மைக்கேல்சன் | |
---|---|
நோர்வேயின் பிரதம மந்திரி | |
பதவியில் 11 மார்ச் 1905 – 23 அக்டோபர் 1907 | |
ஆட்சியாளர் | ஹேக்கான் VII |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்னவர் | ஜோர்கென் லவ்லாண்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1925) 15 மார்ச் 1857 பெர்ஜென், நோர்வே |
இறப்பு | 29 சூன் 1925 ஃபானா (நகராட்சி), ஓர்தாலாந்து, நோர்வே | (அகவை 68)
இளைப்பாறுமிடம் | (1925) லிபரல் கட்சி (1884–1903) கூட்டணி கட்சி (நோர்வே) (1903–09) ஃப்ரீ-மைண்டட் லிபரல் கட்சி (1909–25) |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (நோர்வே) |
பிற அரசியல் தொடர்புகள் | பாதர்லாந்து லீக் (நோர்வே) |
பெற்றோர் |
|
பீட்டர் கிறிஸ்டியன் ஹெர்ஸ்லெப் கெர்ஷ்சோ மைக்கேல்சன் (15 மார்ச் 1857 - 29 ஜூன் 1925) ஒரு நோர்வே கப்பல் அதிபரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். 1905 ஆம் ஆண்டு முதல் 1907ஆம் ஆண்டு வரை சுதந்திர நோர்வேயின் முதல் பிரதமராக இருந்தார் . 1905 ஆம் ஆண்டில் நோர்வேக்கும் சுவீடனுக்கும் இடையிலான ஒற்றுமையைக் கலைத்ததில் முக்கிய பங்காற்றியதில் மைக்கேல்சன் மிகவும் பிரபலமானவர் ஆவார். மேலும், அவரது காலத்தில் நோர்வேயின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார்.[1]
பின்னணி
[தொகு]பெர்கனில் பிறந்த இவருக்கு அவரது தாத்தா பிஷப் பெடர் கிறிஸ்டியன் ஹெர்ஸ்லெப் கெர்ஷ்சோவின் பெயர் சூட்டப்பட்டது. இவர் ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூத்தவர் ஆவார். மைக்கேல்சன் பெர்கன் கதீட்ரல் பள்ளியில் பயின்றார் . அவர் ராயல் ஃபிரடெரிக் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். பின்னர் அவர் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். சி.ஆர். மைக்கேல்சன் & கோ., என்ற கப்பல் நிறுவனம் நோர்வேயின் இது நோர்வேயில் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றானது.[2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1891 ஆம் ஆண்டில் நோர்வேயின் லிபரல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நோர்வே நாடாளுமன்றத்தில் (ஸ்டோர்டிங்) உறுப்பினரானார். அவர் தன்னை பெரும்பாலும் குட்டி கட்சிகளுக்கு மேலாக கருதினார். மேலும் அவரது முக்கிய நோக்கங்களில் ஒன்று கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து லிபரல் கட்சிக்கு செல்லும் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதாகும். அதை அவர் கூட்டணி கட்சி என்று அழைத்தார். இரண்டாவது அமைச்சரவையில் ஹாகெரூப்பில் அவர் நிதி அமைச்சராக பணியாற்றினார், மேலும் ஸ்வீடன் மற்றும் நோர்வே இடையேயான ஒருங்கிணைப்பிற்கு எதிரான உறுதியான கொள்கையின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார்.
கலைக்கப்படுவதற்கான முறையான அடிப்படைக் காரணமானது அரசர் ஸ்வீடனின் ஆஸ்கார் II நோர்வே தூதரக அரச சட்டங்களை ஏற்க மறுத்தது ஆகும். வெளிநாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஸ்வீடிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாக வலியுறுத்தியது. மேலும், இசுவீடன் பாராளுமன்றம் அனுமதியின்றி தூதரக சட்டங்களை நோர்வே ஸ்டோர்டிங் மூலம் நிறைவேற்ற முடியாது. தனி தூதரக விவகாரங்களுக்கான நோர்வேயின் வேண்டுகோளை ஸ்வீடர்கள் ஏற்கத் தயாராக இருந்தனர். ஆனால் 90 ஆண்டுகளாக ஒன்றியம் செயல்பட்டு வந்த முன்னுதாரணத்தை நோர்வே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரினர். அதாவது, வெளியுறவு அமைச்சர் ஸ்வீடிஷ் ஆக இருக்க வேண்டும் என்று கோரினர். நோர்வே சுவீடன் ஒன்றியத்தில் சுவீடனின் மேலாதிக்கம் செலுத்தியதை நோர்வேயர்கள் உணரவும், ஒப்புக்கொள்ளவும் செய்தனர். இந்த மேலாதிக்கம் உண்மையில் இருந்தபோதிலும், நோர்வேயர்கள் சமத்துவமற்ற உறவை முறையான, சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.[4]
1905 மே 27 அன்று ஆஸ்கார் மன்னர் இந்த மசோதாவில் கையெழுத்திட மறுத்துவிட்டார், அதற்கு பதிலளிக்கும் வகையில் நோர்வே அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகினர். மன்னர் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருநாடுகளின் ஒன்றியம் கலைக்கப்படுவது உடனடியாக நடக்கக்கூடியது என்பதை அறிந்திருக்கலாம், ஸ்வீடிஷ் அரசியல்வாதிகளும் எதுவும் செய்யவில்லை. இது நோர்வேயின் மற்றொரு அரசியல் பின்வாங்கல் என்று நம்பினார்கள். மைக்கேல்சன் பதவி விலகிய பின்னர் அரசர் நோர்வேயில் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்பதால், அவர் ஆட்சி செய்யும் திறனை இழந்துவிட்டிருந்தார். எனவே நோர்வே மன்னராக இருப்பதை நிறுத்திவிட்டதாக ஜூன் 7 அன்று நோர்வே ஸ்டோர்டிங் அறிவித்தது. இந்த மூலோபாய நடவடிக்கை கலைப்புக்கு ஓரளவு சட்டபூர்வமான அடிப்படையை அளித்தது. இது முதன்மையாக கிறிஸ்டியன் மைக்கேல்சனின் வேலை ஆகும். பல மாதங்களாக நன்கு இயக்கப்பட்ட செயல்பாடுகளின் வழியாகக் கிடைத்த தகவல்களுக்குப் பிறகு, நோர்வே மக்கள் ஜனநாயகத்தில் மிகவும் அரிதான வகையில் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒன்றியத்தைக் கலைப்பதற்கான நோர்வே விருப்பத்தை நிரூபித்த வாக்கெடுப்பில், ஒன்றியகத்தை தக்கவைத்துக்கொள்வது நாடு முழுவதும் வெறும் 184 வாக்குகளைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Magnus A. Mardal. "Christian Michelsen". Store norske leksikon. பார்க்கப்பட்ட நாள் June 10, 2016.
- ↑ Terje Bratberg. "Kjerschow". Store norske leksikon. பார்க்கப்பட்ட நாள் June 10, 2016.
- ↑ «Nu gjælder det at holde kjæft», by Øyvind Ask, Bergens Tidende.
- ↑ Magnus A. Mardal. "Konsulatsaken". Store norske leksikon. பார்க்கப்பட்ட நாள் June 10, 2016.