உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தோபர் இட்சன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறித்தோபர் இட்சன்சு
2007ல் ஹிட்சன்ஸ்
2007ல் ஹிட்சன்ஸ்
பிறப்புகிரிஸ்டோபர் எரிக் ஹிட்சனஸ்
ஏப்ரல் 13, 1949 (1949-04-13) (அகவை 75)
போர்ட்ஸ்மவுத், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்புதிசம்பர் 15, 2011(2011-12-15) (அகவை 62)
ஊஸ்டன், டெக்சாஸ், அமெரிக்கா
தொழில்எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் நோக்கர்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய அமெரிக்கா

கிறித்தோபர் இட்சன்சு (Christopher Hitchens) என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர், இலக்கிய விமர்சகர். இவரது சமயத்தை நோக்கி, குறிப்பாக சமயத்தில் புனிதமாக கருதப்படுபவையை நோக்கிய விமர்சனங்களுக்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் நான்கு குதிரைவீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற மூவர்: சாம் ஃகாரிசு, ரிச்சர்ட் டாக்கின்சு, டேனியல் டென்னட்)[1][2][3]

முன்னர் இடதுசாரி அரசியல் பார்வை கொண்ட இவர், சல்மான் ருஷ்டிக்கு எதிராக இரானிய இஸ்லாமிய முல்லாக்கள் பத்வா விடப்பட்டபின்னர், இடதுசாரிகள் அதை ஆதரித்ததை எதிர்த்து இடதுசாரிப் பிரிவில் இருந்து விலகினார். இவர் 18 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் அன்னை தெரசாவை விமர்சித்து இவர் எழுதிய 'மறைப்பணியாளர் நிலை' (The Missionary Position) நூல், சமய நம்பிக்கையை விமர்சித்து இவர் எழுதிய 'கடவுள் பெரியவரல்ல' (God Is Not Great) என்ற நூல் ஆகியவை பெரும் சர்ச்சையை எழுப்பியவை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Woo, Elaine (15 December 2011). "Christopher Hitchens dies at 62; engaging author and essayist". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 11 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121111194538/http://articles.latimes.com/2011/dec/15/local/la-me-christopher-hitchens-20111216/2. 
  2. "'God is Not Great' Author Christopher Hitchens on Religion, Iraq, and His Own Reputation – New York Magazine – Nymag". 26 April 2007.
  3. "Author Christopher Hitchens targets God and faith". Reuters. 18 June 2007. https://www.reuters.com/article/us-religion-hitchens-idUSN0726901520070618. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தோபர்_இட்சன்சு&oldid=3890110" இலிருந்து மீள்விக்கப்பட்டது