கிறித்தினா இரிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிறித்தினா இரே இரிச்சி
Christina Rae Richey
Christina Richey headshot.jpg
பிறப்புகிழக்கு இலிவர்பூல், ஓகியோ
துறைகோள் அறிவியல், வானியற்பியல்
பணியிடங்கள்கோடார்டு விண்வெளிப் பறப்பு மையம்
நாசா தலைமையகம்
கல்வி கற்ற இடங்கள்வீலிங் இயேசுவின்ர் பல்கலைக்கழகம்
அலபாமா பல்கலைக்கழகம், பர்மிங்காம்
ஆய்வு நெறியாளர்பெரி ஏ. ஜெராகைன்சு [1]
அறியப்படுவதுஇன்னல் எதிர்ப்பு முயற்சிகள்
விருதுகள்2014 நாசா தலைமையகத்தின் சிறப்புத் தகைமை விருது,
2015 WJஞேம்சு ஓ பிறையான் விருது, வீலிங் இயேசுவினர் பல்கலைக்கழகம்,
201மரோல்டு மாசுர்சுகி விருது, கோள் அரிவியல் பிரிவு,
2016 UAB ஒளிர்தட முன்னாள் மாணவர் விருது

முனைவர் கிறித்தினா "கிறிசி" இரிச்சி (Christina "Chrissy" Richey) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் கலிபோர்னியாவில் உள்ள இலா கனடா பிளின்ட்ரிட்ஜ் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணிபுரிகிறார். இவர் ஐரோப்பா விண்கல இலக்குத் திட்டத்தில் பணிபுரியும் அறிவியலாளரும் வனியற்பியல், விண்வெளி அறிவியல் பிரிவின் ஆராய்ச்சித் தொழில்நுட்பவியலாளரும் ஆவார்.[1]

தாரைச் செலுத்த ஆய்வகத்தில் பணி செய்வதற்கு முன்பு, இவர் வாழ்சிங்டன் டி.சி நாசா தலைமையகத்தில் ஆர்க்டிக் சுலோப் வட்டாரக் குழுமத்தின் ஒப்பந்தக்கார்ராகப் பணி செய்துள்ளார். இவர் நாசாவின்கோள் அறிவியல் பிரிவில் கணினி நிரலாளராகவும் பணி செய்துள்ளார்.[2] மேலும் OSIRIS-REx இலக்குத் திட்ட இணை நிரலாக்க அறிவியலாளராகவும் இருந்துள்ளார்.[3] இவற்றோடு, அறிவியல் செயல் இலக்கு இயக்குநரக இணை அறிவியல் அறிவுரையாளராகவும் இருந்துள்ளார்.[4]

இவர் கோள் அறிவியல், வானியல் புலங்களின் பணியிட இன்னல்களின் விளைவுகளை விளக்கும் கல்வியாளராக அறியப்படுகிறார்.[5][6][7] இவர் 2015முதல் 2017 வரை அமெரிக்க வானியல் கழகம் சார்ந்த வானியலில் மகளிர் நிலை குழுவின் தலைவராக உள்ளார்.[8] இவர் 2015முதல் 2017 வரை கோள் அறிவியல் பிரிவு சார்ந்த தொழில்முறைக் காலநிலை, பண்பாட்டு துணைக்குழுவின் துணைத்தலைவரும் ஆவார்.[9] இவர் வானியலில் மகளிர் வலைப்பதிவில் முனைவாகச் செயல்படும் வலைப்பதிவாளராகவும் உள்ளார்[10]

இளமையும் கல்வியும்[தொகு]

ஆய்வும் பணியும்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

2014:

நாசா தலைமையகத் தகைமை விருது[2]

2015:

வீலிங் இயேசுவினர் பல்கலைக்கழக WJU ஜேம்சு ஓ பிறையான் விருது[3]
வீலிங் இயேசுவினர் பல்கலைக்கழக உறைவிட முன்னாள் மாணவ அறிஞர் அறிவிப்பு[4]
கோள் அறிவியலுக்கும் தேட்டத்துக்கும் ஆற்றிய தன்னிகரற்ற பணிக்காக கோள் அறிவியல் பிரிவின் அரோல்டு மாசுர்சுகி விருது[11]

2016:

பர்மிங்காம் அலபாமா பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல்கல்லூரியின் ஒளிர்தட முன்னாள் மாணவர் விருது [5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Richey's 2015 presentation reporting results of a survey about harassment in astronomy
  • Talk on communications crises, from the 2016 International Astronomical Union's "Communicating Astronomy with the Public" Conference [6]
  • The Women in Astronomy blog [7], to which she is an active contributor
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்தினா_இரிச்சி&oldid=2716002" இருந்து மீள்விக்கப்பட்டது