உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்மீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிர்மீரன் (Kirmira) (சமசுகிருதம்:किर्मीर) ஒரு அரக்கன். மகாபாரதம் கூறும் பகாசூரனின் தம்பி மற்றும் இடும்பனின் நண்பன். மகாபாரத நூலின் வன பருவத்தில் கிர்மீரன் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. காம்யக வனத்தில் இருந்த கிர்மீரன் இரவில் மனிதர்களைக் கொன்று உண்டு வாழ்ந்து கொண்டிருந்த போது, சூதாட்டதில் நாட்டை இழந்த பாண்டவர்கள்திரௌபதியுடன் வன வாசத்தை கழிக்க காம்யக வனத்திற்கு தங்கச் சென்றனர். இதனை அறிந்த கிர்மீரன் பீமனை எதிர்த்து நின்றான். இருவருக்கும் நடைபெற்ற மற்போரில் பீமன் கையால் அரக்கன் கிர்மீரன் உயிர் துறந்தான். கிர்மீரனை கொன்ற பின்னர் பாண்டர்கள் திரௌபதியுடன் துவைத வனத்திற்குச் சென்றனர்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dowson, John (1957). A Classical Dictionary of Hindu Mythology and Religion, Geography, History, and Literature (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Trübner & Company. p. 159. Archived (PDF) from the original on 2021-09-23. Retrieved 2021-09-23.
  2. SECTION XI Kirmirabadha Parva

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்மீரன்&oldid=4450217" இலிருந்து மீள்விக்கப்பட்டது