உள்ளடக்கத்துக்குச் செல்

கிர்னா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிர்னா ஆறு (Girna River) மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். பார்வதி என்றும் கிராச்சா என்றும் அழைக்கப்படும் தேவியின் பெயரிலிருந்து ஆறு இப்பெயரைப் பெற்றது.

நதியின் பாதை

[தொகு]

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கெம் சிகரத்தில் உருவாகி, நாசிக் மாவட்டத்தின் கிழக்கே கிர்னா ஆறு பாய்கிறது. அங்கு இது மவுசம் ஆற்றுடன் இணைகிறது. மேலும் பாய்ந்து மாலேகான் நகரத்தில் கலக்கிறது. பின்னர் இது வடக்கே சாய்ந்து ஓடி தப்தி ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆற்றில் உள்ள மிகப்பெரிய அணைகள் சங்கபூர் அணையும் கிர்னா அணையுமாகும். கல்வான் தாலுகாவில் அபோனா அருகே சங்கபூர் அணை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இங்கு சர்ப்கங்கா நதி கிர்னாவுடனும் கிர்னா அணையோடும் இணைகிறது கிர்னா அணை 1969 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது).[1] இந்த ஆற்றுப் படுகை தக்காண பீடபூமியில் அமைந்துள்ளது, மேலும் இதன் பள்ளத்தாக்கில் வளமான மண் உள்ளது. அது தீவிரமாக விவசாயம் செய்யப்படுகிறது.

பம்பாய் மாகாணத்தின் வர்த்தமானி இதழ் ஆற்றின் போக்கை பின்வருமாறு விவரித்தது. [2]  

நாசிக்கின் கல்வன் துணைப்பிரிவின் மேற்கு மலைகளில் உற்பத்தியாகி, சாந்தோர் அல்லது சப்தாசுரிங்கு மலைத்தொடரின் வடக்கு சரிவுகளில் இருந்து வரும் நீரோடைகளால் நீரளிக்கப்படுகிறது. சுமார் 150 மைல்கள் தொலைவைக் கடந்து, பால்சோட்டு (இராமேசுவர் கோயில்) அருகே உள்ள தப்தியில் விழுகிறது. இதன் பாதை நாசிக்கு மற்றும் கந்தேசில் கிட்டத்தட்ட சமமான பகுதிகளில் உள்ளது. நாசிக் வழியாக கிழக்கு நோக்கி கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் கடந்து, காந்தேசில் அதன் பாதை வடகிழக்காக மாறி, இயல்காவுன் அருகே, அது வடக்கு மற்றும் வடமேற்காக வளைந்து பல மைல்கள் தப்திக்கு இணையாக பல வளைவுகளுடன் பாய்கிறது. காந்தேசில், பாறை மலைகளால் சூழப்பட்ட ஒன்று அல்லது இரண்டு இடங்களைத் தவிர, கிர்னா, ஒரு பரந்த மணல் படுகையில், நன்கு உழவு செய்யப்பட்ட பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து படிப்படியாக பெரிய மத்திய சமவெளியில் பரவுகிறது. நாசிக்கு மற்றும் காந்தேசில் உள்ள அதன் நீர்நிலைகள் பாசனத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. நாசிக்கில் சமீபத்தில் பழுதுபார்க்கப்பட்ட அணைகள் மற்றும் கால்வாய்கள் அதன் பல மேட்டு நில பள்ளத்தாக்குகளுக்கு நீர்ப்பாசனம் செய்கின்றன. மேலும் காந்தேசில், சாலிசுக்கானுக்கு வடக்கே சுமார் பத்து மைல் தொலைவில் உள்ள ஈகாலில் இருந்து, இயம்டா கால்வாய்கள் கிழக்கு நோக்கி இடதுபுறத்தில் இருபத்தேழு மைல்களும் வலதுபுறத்தில் பன்னிரண்டு மைல்களும் நீண்டுள்ளன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Girna D01026". Archived from the original on January 6, 2014. Retrieved February 28, 2013.
  2. http://mpcb.gov.in/ereports/pdf/GirnaRiverReport_.pdf பரணிடப்பட்டது 5 பெப்ரவரி 2017 at the வந்தவழி இயந்திரம் Girna river report

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்னா_ஆறு&oldid=4242012" இலிருந்து மீள்விக்கப்பட்டது