கிர்க்கின் டிக்-டிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Madoqua|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
கிர்க்கின் டிக்-டிக்
Kirk's dik-dik
Madoqua kirkii - male (Namutoni).jpg
கிடாய்
Madoqua kirkii - female (Namutoni).jpg
பெட்டை
இரண்டும் நமீபியாவில் உள்ள எட்டோஷா தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Madoqua
இனம்: வார்ப்புரு:Taxonomy/MadoquaM. kirkii
இருசொற் பெயரீடு
Madoqua kirkii
(Günther, 1880)
Subspecies

4 ssp., see text

Madoqua kirkii map.png
காணப்படும் இடங்கள்

கிர்க்கின் டிக்-டிக் ( Kirk's dik-dik ) என்பது கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு சிறிய மறிமான் மற்றும் நான்கு வகை டிக்-டிக் மறிமான்களில் ஒன்றாகும். [2] இது ஆறு கிளையினங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது மற்றும் தென்மேற்கு ஆபிரிக்காவில் ஏழாவது கிளையினம் இருக்கலாம் எனப்படுகிறது. [3] டிக்-டிக்கள் தாவர உண்ணிகளாகும். பொதுவாக இவை இளமஞ்சள் நிறம் கொண்டவை. இவற்றின் இந்த நிறமானது சவன்னா வாழ்விடங்களில் தங்களை மறைத்துக் கொள்ள உதவுகின்றது. [3] மெக்டொனால்டின் (1985) கருத்துப்படி, இவை மணிக்கு 42 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை. [4] காடுகளில் கிர்க்கின் டிக்-டிக் ஆயுட்காலம் பொதுவாக 5 ஆண்டுகள், ஆனால் 10 ஆண்டுகளைத் தாண்டியும் வாழலாம். [4] கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்படும் நிலையில், ஆண் மான்கள் 16.5 ஆண்டுகள் வரை வாழ்வதாக அறியப்படுகிறது, அதே சமயம் பெண் மான்கள் 18.4 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. [4]

சொற்பிறப்பியல்[தொகு]

இதற்கு உண்டான டிக்-டிக் என்ற பெயர் அது கூப்பிடுவதிலிருந்து வந்தது. [2] இவை அச்சுறுத்தப்படுவதாக உணரும்போது, தான் கண்டறியப்படுவதிலிருந்து தப்பிக்க தாழ்வாக அமர்ந்து மறைந்துக் கொள்கின்றன. [2] இவை கண்டுபிடிக்கப்பட்டால், அருகிலுள்ள முட்புதர்களில் தஞ்சம் அடையும் வரை வேகமாக, ஜிக்ஜாக் வடிவத்தில் ஓடுகின்றன. [2] இப்படி ஓடும்போது, வேட்டையாடிகளை அலைக்கக்க அல்லது தன் இணையை எச்சரிப்பதற்காக எக்காளம் போன்ற "ஜிக்-ஜிக்" போன்ற ஓலியை எழுப்புகிறன. [2]

உடலமைப்பு[தொகு]

டிக்-டிக் மறிமான்கள் உலகின் மிகச்சிறிய மறிமான்களில் இவற்றில் மிகப்பெரியது, கிர்க்கிசின் டிக்டிக் ஆகும். இது 14 முதல் 18 அங்குல உயரம் மற்றும் 7.2 கிலோ (16 பவுண்டு) எடை வரை இருக்கும். பெட்டை டிக்-டிக்கள் கிடாக்களை விட 1 முதல் 2 பவுண்டுகள் கனமாக இருக்கும். [2] இவை கூரான, நீண்ட மூக்கும், பெரிய நீசித் துவாங்களும், பெரிய கண்களும், பெரிய காதுகளும் கொண்டவை. இந்த மானிக் கால்கள் மெலிந்தவை. ஆனால் நீண்டவை. பின் கால்கள் முன்னே சற்று மடங்கியதுபோன்று அதாவது முயல் போன்ற பின்னங்கால்கள் கொண்டவை. இவற்றின் முன்கால்களை விட பின்கால்கள் பெரியதாக இருக்கும். மற்றும் எச்சவுப்பாக வாலைக் கொண்ட அழகான உயிரினம். [2] இவற்றின் உடல் நிறம், இவற்றின் வாழ்விடத்தைப் பொறுத்து, [5] சாம்பல் நிறத்தில் இருந்து சாம்பல்-பழுப்பு வரை இருக்கும். இவறின் கண்களைச் சுற்றி வெண்மையான வளையங்களையும் கொண்டிருக்கும். [2]

ஆண் டிக்-டிக் மானுக்கு மட்டுமே கொம்புகள் உண்டு. அவை சுமார் 3 அங்குலம் (8 செ.மீ.) நீளம் கொண்டதாக இருக்கும். ஆண் கிர்க்கீசின் டிக்-டிக்களின் கொம்புகள் நேராகவோ அல்லது பின்னோக்கி வளைந்ததாகவோ இருக்கும். மேலும் கொம்புகளின் அடிப்பகுதி ஏழு முதல் ஒன்பது வளையத் திட்டுகளைக் கொண்டிருக்கும். இரண்டு கொம்புகளுக்கு இடையில் நீண்ட உரோமங்கள் வளர்ந்திருக்கும். [4] கிர்க்கின் டிக்-டிக் மான்கள் பால் ஈருருமை கொண்டவை. அதன்படி பெட்டைகளுக்கு கொம்புகள் இல்லை. அதே சமயம் கிடாய்களுக்கு மிகவும் வளர்ந்த முகவாய், மங்கிய நிறம் கொண்டதாக இருக்கும். [6]

உணவுமுறை[தொகு]

டிக்-டிக் ஒரு தாவர உண்ணி ஆகும். இவற்றின் உணவில் முக்கியமாக இலைகள், பழங்கள், தளிர்கள் பெர்ரிகள் போன்வற்றவை உள்ளன. [7] இது தான் உண்ணும் உணவிலிருந்தே தனக்கான நீர்சத்தைப் பெறும் தகவமைப்பைக் கொண்டுள்ளதினால் நீண்ட நாட்களுக்கு இதனால் தண்ணீரைக் குடிக்காமல் இருக்க முடியும். [7] இதன் உணவில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் உள்ள இலைகள் மற்றும் பழங்கள் அடங்கி உள்ளன. ஆனால் நார்ச்சத்து மற்றும் செல்லுலோஸ் குறைவாக இருக்கும். புற்களை முளைக்கும் போது மட்டுமே மேயும். [4] மேற்கூறிய உண்மைகள் மற்றும் அவற்றின் அதிக உணவுத் தேவைகள் காரணமாக, கிர்க்கின் டிக்-டிக்கள் பகல் மற்றும் இரவு முழுவதும் அவ்வப்போது உணவு உண்கிறது. [4] இவை நாள்தோறும் தங்கள் உடல் எடையில் சுமார் 3.8% சாப்பிடுகிறன. [4] வெல்வர்ட் குரங்குகள் வாழும் மரத்திற்கு அடியில் இந்த மான்கள் மாலையில் மேயும். வெல்வர்ட் குரங்கால் மரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழும் பழங்களை மிகுதியாக உண்ணும்.

ஒரு ஆய்வின் பொருட்டு டிக் டிக் மான் தின்று முடித்ததுதம் கீழ்கண்ட விகித்ததில் அதன் வயிற்றில் உணவு இருந்தது. முட்புதர்களின் இலைகள் 56%, மரங்களில் இலைகள் 23%, புற்களும் விதைகளும் 17% ஆகும்.[8]

இனப்பெருக்கம் மற்றும் நடத்தை[தொகு]

மற்ற குள்ள மறிமான்களைப் போலவே, கிர்க்கின் டிக்- டிக்குகளும் பிராந்தியத்தில் ஒருதணையுடன் வாழ்கின்றன. இந்த மான் தன் பிரதேசத்தின் எல்லையைக் குறிக்க சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்துகிறது. [2] ஆண் மான், பெண் மானின் சிறுநீரை முகர்ந்து அதன் இனப்பெருக்கச் சுழற்சியை அறிகிறது. [2] ஆண் மான் தன் தலை மற்றும் கழுத்தை நீட்டி, முகவாயை முன்னால் காட்டியபடி, பெண்ணின் பின்னால் ஓடி வந்து அதனுடன் காதலூடாட்டம் செய்கிறது. பின்னர் ஆண் பெண்ணின் பின்னங்கால்களின் அருகில் நின்றுகொண்டு, பெண் மானின் முதுகின் மேல் தன் முன்னங்களை போட்டு, முன்னங்கால்களை அசைத்து இணச்சேர்கையைத் தொடங்குகிறது. [4] இ்வாறு 9 மணி நேரத்திற்குள் பொதுவாக மூன்று முதல் ஐந்து முறை கலவி நிகழும். [4]

கிர்க்கின் டிக்-டிக்களின் கர்ப்ப காலம் 5-6 மாதங்கள் ஆகும். மேலும் ஆண்டுக்கு இரண்டு முறை சந்ததிகளை உருவாக்கக்கூடும். [2] பெண் மான்கள் 6 முதல் 8 மாதங்களுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகிறன. அதேபோல ஆண் மான்கள் 8 முதல் 9 மாதங்களுக்குள் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. [9] டிக்-டிக்கள் ஒரு கருவுருதலுக்கு ஒரு குட்டியைப் பெறுகின்றன. [2] பெரும்பாலான பிறப்புகள் நவம்பர் மற்றும் திசம்பர் மற்றும் ஏப்ரல் முதல் மே வரை நிகழ்கின்றன. இது மழைக்காலப் பருவத்துடன் ஒத்துப்போகிறது. [4] பிறந்த பிறகு, குட்டிகள் 2-3 வாரங்கள் மறைவிடத்தில் இருக்கும். இந்தக் குட்டிகள் உயிர்வாழும் விகிதம் தோராயமாக 50% ஆகும். [4] [9] குட்டிகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், தாயை விட்டு பிரிகின்றன அல்லது மற்றொரு குட்டி பிறக்கும் வரை பெற்றோருடன் இருக்கிறன. [2] இந்த கட்டத்தில், பெற்றோர்கள் மூத்த பிள்ளையை தங்கள் பிரதேசத்தை விட்டு துரத்துகிறன. [7] மூத்தப் பிள்ளை தனக்காக சொந்தமாக ஒரு பிரதேசத்தையும் துணையையும் தேடுகிறது. [2]

வேட்டையாடிகள்[தொகு]

இந்த மறிமான்களை கழுகுகள், காட்டுப்பூனைகள், குள்ள நரிகள், கறகால் பூனைகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், சிவிங்கிப்புலிகள், கேப் காட்டு நாய்கள், தேன் வளைக்கரடிகள், முதலைகள், மலைப்பாம்புகள், சிங்கங்கள், உடும்புகள், மனிதர்கள் உள்ளிட்ட எண்ணற்ற வேட்டையாடிகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றன. [2] [7] [9] இளம் டிக்-டிக்கள் குறிப்பாக பாபூன்கள், ஜெண்ட்கள், கழுகுகள் போன்றவற்றிற்கு இரையாகின்றன. டிக்-டிக்களுக்கு செவிப்புலன், பார்வை, வாசனை போன்ற நுணுக்கமான புலன்கள் கொண்டுள்ளன. அவை ஆபத்தில் இருப்பதை உணரும்போது அல்லது மற்ற விலங்குகளின் எச்சரிக்கை ஒலியைக் கேட்கும்போது, தப்பி ஓடுவதை விட ஒளிந்து கொள்கிறன. இவை பயப்படும்போது அல்லது தொந்தரவுக்கு ஆளாகும் போது மட்டுமே "ஜிக்-ஜிக்" என்ற ஒலியை வெளியிடுகின்றன.

மனிதத் தாக்கங்கள்[தொகு]

டிக்-டிக்களுக்கு மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்கள் சிலசமயம் இவற்றின் தோல் மற்றும் எலும்புகளுக்காக வேட்டையாடுகின்றனர். மனிதர்கள் இவற்றைப் பிடிக்க பெரும்பாலும் கண்ணிகளைப் பயன்படுத்துகின்றனர். [5] இவற்றின் கால்கள் மற்றும் கால் எலும்புகள் பாரம்பரிய நகைகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் இவற்றின் தோல் மெல்லிய தோல் கையுறைகள் தாயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. [5] ஒரு கையுறையை உருவாக்க முழு டிக்-டிக் தோலும் தேவை. [4] டிக்-டிக்களுக்கு உணவு ஆதாரமாகவும் புகலிடமாகவும் செயல்படும் புதர்களை மனிதர்கள் வெட்டுவதாலும், எரிப்பதாலும் டிக்-டிக்கள் பாதிப்புறுகின்றன. [4] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் ஆய்வாளர்களால் கிர்க்கின் டிக்-டிக் "தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்" என்று பட்டியலிட்டுள்ளது. [1]

கிளை இனங்கள்[தொகு]

வழக்கமாக, கிர்க்கின் டிக்-டிக் நான்கு கிளையினங்களாக வேறுபடுத்தபட்டுள்ளன. ஆனால் இவை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனித்துவமான இனங்களையும் குறிக்கலாம்:

 • எம். கே. கிர்கி குந்தர், 1880
 • எம். கே. கேவென்டிஷி தாமசு, 1898 – கேவென்டிஷின் டிக்-டிக்
 • எம். கே. டமரென்சிஸ் குந்தர், 1880 – டமரா டிக்-டிக்
 • எம். கே. ஹிண்டே தாமசு, 1898

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 IUCN SSC Antelope Specialist Group (2016). "Madoqua kirkii". IUCN Red List of Threatened Species. 2016: e.T12670A50190709. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T12670A50190709.en. Retrieved 12 November 2021.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 "dik-dik - antelope".. 
 3. 3.0 3.1 "Kirk's dik-dik". 2015-11-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-04-29 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 "ADW: Madoqua kirkii: INFORMATION". Animal Diversity Web.
 5. 5.0 5.1 5.2 "Dik-Dik". African Wildlife Foundation.
 6. "Archived copy" (PDF). 2015-09-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-04-29 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 7. 7.0 7.1 7.2 7.3 Sarah Zielinski. "What In The World Is A Dik-dik?". Smithsonian.
 8. பேராசிரியர் கே. கே. ராஜன், உலகில் உள்ள மான்கள், பக்கம்; 223, கார்த்திக் பதிப்பகம், மேற்கு மாம்பலம், சென்னை 600033
 9. 9.0 9.1 9.2 "Kirk's dik-dik". www.ultimateungulate.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்க்கின்_டிக்-டிக்&oldid=3631511" இருந்து மீள்விக்கப்பட்டது