உள்ளடக்கத்துக்குச் செல்

கிரைக்கோ நீக்க வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரைக்கோ (நீக்கல் வினை
கிரைக்கோ (நீக்கல் வினை

கிரைக்கோ நீக்க வினை (Grieco elimination) என்பது ஓர் அலிபாட்டிக் முதனிலை ஆல்ககால் செலீனைடு உதவியால் நீக்க வினைக்கு உட்பட்டு விளிம்புநிலை ஆல்க்கீனாக மாறும் வினையைக் குறிக்கிறது [1][2]. பால் கிரைக்கோ கண்டறிந்த காரணத்தால் வினைக்கு இப்பெயர் இடப்பட்டது.

ஆல்ககால் முதலில் எலக்ட்ரான் குறைந்த செலீனியத்தின் மீது உட்கருகவர் பதிலீட்டு வினையின் வழியாக ஆர்த்தோ-நைட்ரோபீனைல்செலீனோசயனேட்டு மற்றும் டிரைபியூட்டைல் பாசுப்பீனுடன் வினைபுரிந்து ஒரு செலீனைடு சேர்மமாக உருவாகிறது. இரண்டாவது படிநிலையில் செலீனைடு ஐதரசன் பெராக்சைடால் ஆக்சிசனேற்றப்பட்டு செலீனாக்சைடைக் கொடுக்கிறது. இக்கட்டமைப்பு சிதைவடைந்து ஒற்றை மூலக்கூற்று வினை வழிமுறையால் ( Ei நீக்க வினை வழிமுறை) ஆல்க்கீனாக மாறுகிறது. கோப் நீக்க வினையில் நிகழ்வது போல செலீனால் இவ்வினையில் நீக்கப்படுகிறது. தேனிசுசெப்சிகை டேக்சால் ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் கார்பன் வளையத்தை தொகுக்கும் வினையில் இவ்வினை பங்கேற்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைக்கோ_நீக்க_வினை&oldid=2749934" இலிருந்து மீள்விக்கப்பட்டது