கிரைகிபர்ன் வனப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரைகிபர்ன் வனப் பூங்கா
Craigieburn Forest Park
அமைவிடம்தெற்கு தீவு, நியூசிலாந்து
கிட்டிய நகரம்கிரேமவுத்
பரப்பளவு44,694.78 எக்டேர்கள் (110,443.2 ஏக்கர்கள்)
நிருவாக அமைப்புநியூசிலாந்து பாதுகாப்பு துறை

கிரைகிபர்ன் வனப் பூங்கா (Craigieburn Forest Park) நியூசிலாந்து நாட்டின் தெற்குத் தீவிலுள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பூங்காவாகும். ஆர்தர் கணவாய் தேசியப் பூங்காவிற்கு அடுத்ததாக வடக்கில் 447 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பூங்கா விரிந்துள்ளது [1].

இப்பூங்காவின் எல்லைகளில் ஒருபகுதி மாநில நெடுஞ்சாலை 73 உடன் சேர்ந்து அமைந்துள்ளது மற்றும் தெற்கு ஆல்ப்சு மலையின் கிழக்கு விலாப் பக்கத்திற்கு அருகில் உள்ளது.

உடைந்த நதி பனித்தரைப் பகுதியும் கிரைகிபர்ன் சமவெளி பனித்தரைப் பகுதியும் கிரைகிபர்ன் வனப் பூங்கா எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. நியூசிலாந்தில் உள்ள மற்ற அனைத்து பொது நிலங்களையும் பாதுகாப்பது போலவே பாதுகாப்புத் துறை இவற்றை பாதுகாக்கவும் வணிக நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தவும் உரிய நிர்வாகத்தை மேற்கொள்கிறது.

நியூசிலாந்து வன சேவை அமைப்பு இப்பகுதியை ஒரு சோதனை வனப்பகுதியாகப் பயன்படுத்தியது. காட்டுப்பகுதிகளில் ஊசியிலை மரக்கன்றுகளின் பரவல் சுற்றுச்சூழல் பிரச்சினையாக இப்போது கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Data Table - Protected Areas - LINZ Data Service". Land Information New Zealand. பார்த்த நாள் 2017-10-18.

வெளி இணைப்புகள்[தொகு]