உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேட் எக்ஸ்பெக்டேசன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேட் எக்ஸ்பெக்டேசன்ஸ்
நூலாசிரியர்சார்ல்ஸ் டிக்கின்ஸ்
பட வரைஞர்மார்கசு இசுட்டோன்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்சாப்மன் & ஹால்
வெளியிடப்பட்ட நாள்
1861
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்மாறுபடும்
முன்னைய நூல்'எ டேல் ஆஃப் டூ சிட்டீசு'
அடுத்த நூல்'அவர் முயூச்சுவல் பிரண்ட்'

கிரேட் எக்ஸ்பெக்டேசன்ஸ் (Great Expectations என்பது ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய பதின்மூன்றாவதுப் புதினம், அவரது இறுதிப் புதினம் ஆகும். இந்தப் புதினம் ஒரு பில்டங்ஸ்ரோமான் (முக்கிய கதைமாந்தரின் வளர்ச்சியை (சிறுவயதிலிருந்து முதிர்ச்சிக்கு) சித்தரிக்கும் புதினம்), பிப் என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு அனாதையின் கல்வியைச் சித்தரிக்கிறது. இந்தப் புதினம் முதன்முதலில் டிக்கின்சின் வாராந்திர இதழான ஆல் தி இயர் ரவுண்டில் ஒரு தொடராக டிசம்பர் 1,1860 முதல் ஆகஸ்ட் 1861 வரை வெளியிடப்பட்டது.[1] அக்டோபர் 1861 இல், சாப்மேன் & ஹால் இந்தப் புதினத்தை மூன்று தொகுதிகளாக வெளியிட்டது.[2][3][4]

இதன் கதை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் கென்ட் மற்றும் இலண்டன் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்தப் புதினத்தில் டிக்கின்சின் மிகவும் புகழ்பெற்ற காட்சிகளில் சில இடம்பெறுகின்றன. அவற்றில், கல்லறைத் தோட்டத்தில் சிறுவனான பிப் தப்பியோடிய கைதியான ஏபெல் மேக்விட்சால் எதிர்கொள்ளப்படும் தொடக்கக் காட்சி குறிப்பிடத்தக்கது.[5]

இந்தப் புதினம் வறுமை, சிறைக் கப்பல்கள், சங்கிலிகள் மற்றும் உயிர்ப்போராட்டங்கள் போன்ற தீவிரமான காட்சிகளால் நிரம்பியுள்ளது. மேலும், இலக்கிய உலகிலும் பொதுப் பண்பாட்டிலும் புகழ்பெற்ற பல கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் விசித்திரமான குணம் கொண்ட மிஸ் அவிசம், அழகான ஆனால் உணர்ச்சியற்ற எசுடெல்லா மற்றும் எளிமையான, அன்பான கொல்லரான ஜோ கார்கெரி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். செல்வமும் வறுமையும், காதலும் நிராகரிப்பும், தீமையை வெல்லும் நன்மையின் வெற்றியும் ஆகியவை இந்தப் புதினத்தின் முக்கியக் கருப்பொருள்களாகும். வாசகர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் பரவலாகப் பாராட்டப்பட்ட இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுடன், திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு ஊடக வடிவங்களிலும் பலமுறை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.[6][7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Was Dickens Really Paid By the Word?". University of California Santa Cruz: The Dickens Project. Regents of the University of California. Archived from the original on 14 September 2013. Retrieved 15 February 2013.
  2. Dickens, Charles (1861). Great Expectations. Vol. I (First ed.). London: Chapman & Hall. Retrieved 6 January 2017 via Internet Archive.
  3. Dickens, Charles (1861). Great Expectations. Vol. II (First ed.). London: Chapman & Hall. Retrieved 6 January 2017 via Internet Archive.
  4. Dickens, Charles (1861). Great Expectations. Vol. III (First ed.). London: Chapman & Hall. Retrieved 6 January 2017 via Internet Archive.
  5. "Great Expectations by Charles Dickens". Cliffsnotes. Archived from the original on 28 October 2012. Retrieved 30 October 2012.
  6. Paul Schlicke 1999
  7. John Hillis-Miller 1958