கிரேசியெல்லா பிராந்துவார்தி இரேமாண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேசியெல்லா பிராந்துவார்தி இரேமாண்ட்
Graziella Branduardi-Raymont
பிறப்புகிரேசியெல்லா பிராந்துவார்தி
தேசியம்இத்தாலியர்
துறைவானியல்
கோள் அறிவியல்
பணியிடங்கள்ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையம் (1977-1979)
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகம் (1979 முதல் அண்மை வரை)

கிரேசியெல்லா பிராந்துவார்தி இரேமாண்ட் (Graziella Branduardi-Raymont) ஓர் இத்தாலிய இயற்பியலாளர் ஆவார். இவர் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் பேராசிரியராக உள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் இயற்பியல் இளவல் பட்டத்தை 1973 இல் மிலான் பல்கலைக்கழகத்தில் முடித்ததும், இவர்1974 இல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தார் .[1] இவர் 1977 இல் புதிர்க்கதிர் வானியலில் முனைவர் பட்ட்த்தை முடித்ததும் ஆர்வார்டு சுமித்சோனியன் வானியற்பியல் மையத்தில் சேர்ந்தார்.

இவர் மீள முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தில் 1979 இல், ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். அங்கே1987 இல் விரிவுரையாளராகவும் 1992 இல் வானியல் உயர்விரிவுரையாளராடவும் ஆனார். இவர் 1990 களில் முல்லார்டு விண்வெளி அறிவியல் ஆய்வகத்தின் ஐரோப்பிய விண்வெளி முகமை XMM-நியூட்டன் திட்டத்தில் தெறிப்பு வரிக்கீற்று கதிர்நிரல் அளவியின் இலக்கவியல் மின்னன் பிரிவுக்குத் திட்ட மேலாளர் ஆனார். இவர் 2009 இல் விண்வெளி அறிவியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார்.[2]இவரது நடப்பு ஆராய்ச்சி கோள்சார் புதிர்க்கதிர் உமிழ்வில் குவிந்துள்ளது. இவர் 2024 இல் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையும் சீன அறிவியல் கல்விக்கழகம் இணைந்துநட்த்தும் சிமிலி விண்கலத் திட்ட இணை முதன்மை ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார்.[3][4]

ஆராய்ச்சி ஆர்வங்கள்[தொகு]

இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள்[5] பின்வருமாறு:

  • புதிர்க்கதிர் இரும விண்மீன்கள்
  • புதிர்க்கதிர் பின்னணி
  • முனைப்பான பால்வெளிக்கரு
  • கோள்சார் புதிர்க்கதிர் உமிழ்வு

விண்வெளித் திட்டங்கள்[தொகு]

  • இணை முதன்மை ஆய்வாளர், தெறிப்பு வரிக்கீற்று கதிர்நிரல் அளவி, ஐரோப்பிய விண்வெளி முகமை XMM-நியூட்டன் திட்டம்.[சான்று தேவை]
  • இணை முதன்மை ஆய்வாளர், ஐரோப்பிய விண்வெளி முகமை - CAS சிமிலி விண்கலத் திட்டம்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Graziella Branduardi-Raymont". MSSL. 7 மே 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Graziella Branduardi-Raymont". UCL IRIS. 21 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. "SMILE Mission: Chief and Project Scientist". CAS. 21 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "SMILE Mission: Overview". CAS. 18 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Prof Graziella Branduardi Raymont". MSSL. 21 September 2020 அன்று பார்க்கப்பட்டது.