கிரேக்க தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரேக்கம் தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிரேக்க தேசிய காற்பந்து அணி
Shirt badge/Association crest
அடைபெயர்Ethniki (National)
Piratiko (The Pirate Ship)
Galanolefki (Sky blue-white)
கூட்டமைப்புHellenic Football Federation (HFF)
Ελληνική Ποδοσφαιρική Ομοσπονδία
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்Fernando Santos
துணைப் பயிற்சியாளர்Leonidas Vokolos
அணித் தலைவர்Giorgos Karagounis
Most capsGiorgos Karagounis (131)
அதிகபட்ச கோல் அடித்தவர்Nikos Anastopoulos (29)
தன்னக விளையாட்டரங்கம்ஜார்ஜியோசு கரைசுகாகிசு விளையாட்டரங்கம் (Georgios Karaiskakis Stadium)
பீஃபா குறியீடுGRE
பீஃபா தரவரிசை12
அதிகபட்ச பிஃபா தரவரிசை8 (ஏப்ரல் 2008 – சூன் 2008; அக்டோபர் 2011)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை66 (செப்டம்பர் 1998)
எலோ தரவரிசை17
அதிகபட்ச எலோ7 (ஆகத்து 2004)
குறைந்தபட்ச எலோ78 (மே 1963 மற்றும் நவம்பர் 1963)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 கிரேக்க நாடு 1–4 இத்தாலி 
(ஏதென்ஸ், Greece; 7 April 1929)
பெரும் வெற்றி
 கிரேக்க நாடு 8–0 சிரியா 
(ஏதென்ஸ், Greece; 25 November 1949)
பெரும் தோல்வி
 அங்கேரி 11–1 கிரேக்க நாடு 
(Budapest, அங்கேரி; 25 March 1938)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1994 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்ற, 1994 மற்றும் 2010
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1980 இல்)
சிறந்த முடிவுவாகையர்  : 2004
ஒலிம்பிக்சு
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1920 இல்)
சிறந்த முடிவுRound 1: 1920,1952,2004
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2005 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 2005

கிரேக்க தேசிய காற்பந்து அணி (Greek national football team; கிரேக்க மொழி: Εθνική Ελλάδος, Ethniki Ellados), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் கிரீசு நாட்டின் சார்பாக விளையாடும் அணியாகும்; இதனை, கிரீசு நாட்டில் காற்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான எல்லெனிக் கால்பந்துக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. ஐரோப்பிய தேசிய காற்பந்து அணிகளில், சிறப்பான வெற்றிகளைப் பெற்ற அணிகளுள் கிரீசும் ஒன்றாகும்; ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக் கோப்பையை வென்ற ஒன்பது அணிகளில் இதுவும் ஒன்று.

கால்பந்துக்கான பன்னாட்டுப் போட்டிகளில், நிரந்தரமாக சிறப்பான இடத்தை இந்த அணி பெற்றதில்லை. இவ்வணி வாகையர் பட்டம் வென்ற யூரோ 2004-க்கு முன்னர், உலகக்கோப்பை கால்பந்து 1994-ஆம் ஆண்டிலும், ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிக்கு 1980-இலும் மட்டுமே தேர்வுபெற்றிருந்தனர். தமது இரண்டாவது பங்கேற்பிலேயே ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை 2004-இல் வென்றனர்; அப்போது, நடப்பு வாகையர்களாக இருந்த பிரான்ஸ் மற்றும் போட்டியை நடத்திய போர்த்துகல் ஆகிய வலுவான அணிகளை வீழ்த்தி வெற்றிகண்டது.

அதன்பிறகு, ஒரு போட்டித் தொடரைத் தவிர்த்து அனைத்து முக்கியமான பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளுக்கும் (உலகக்கோப்பை கால்பந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி) தகுதி பெற்றனர். யூரோ 2012 போட்டியில் காலிறுதியை எட்டினர். யூரோ 2004 வெற்றிக்குப் பிறகு, பிஃபா உலகத் தரவரிசையில் எப்போதும் 20 இடங்களுக்குள் இருந்து வருகின்றனர் (இடையில் நான்கு மாதங்கள் தவிர்த்து); மேலும், ஏப்ரல் - சூன் 2008 காலகட்டத்திலும், அக்டோபர் 2011-லும் அதிகபட்ச தரவரிசை இடமான எட்டாவது இடத்தை எட்டினர்.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

முன்னர்
2000 பிரான்சு 
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
2004 (First title)
பின்னர்
2008 எசுப்பானியா 
விருதுகள்
முன்னர்
2004 England Rugby Union Team
Laureus World Team of the Year
2005
பின்னர்
2006 Renault F1