கிரேஃபிரியர்ஸ் பாபி
| கிரேஃபிரியர்ஸ் பாபி | |
|---|---|
பாபியின் இந்தச் சிலை, எடின்பர்க்கின் கேண்டில்மேக்கர் ரோ மற்றும் நான்காம் ஜார்ஜ் பாலத்தின் சந்திப்பில் அமைந்துள்ளது | |
| வகை | ஸ்கை டெரியர் அல்லது டான்டி டின்மாண்ட் டெரியர்[1] |
| பிறப்பு | 4 மே 1855 எடின்பரோ, எசுகாட்லாந்து [சான்று தேவை] |
| இறப்பு | 14 சனவரி 1872 (16 வயதில்) எடின்பரோ, எசுகாட்லாந்து |
| Resting place | கிரேஃப்ரையர்ஸ் கிர்க்கியார்ட் |
| அறியப்படுவதற்கான காரணம் | தனது இறப்பு வரை 14 ஆண்டுகள், தனது உரிமையாளரின் கல்லறையைக் காவல் காத்ததாகக் கூறப்படுகிறது. |
| உரிமையாளர் | ஜான் கிரே |
| எடின்பர்க் நகரத்தின் திறவுகோல் | |
கிரேஃபிரியர்ஸ் பாபி (Greyfriars Bobby, 4 மே 1855 - 14 சனவரி 1872) என்பது ஒரு ஸ்கை டெரியர் அல்லது டான்டி டின்மாண்ட் டெரியர் வகை நாய் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் எடின்பர்க்கில் தன் உரிமையாளரின் கல்லறைக்கு அருகில் தான் இறக்கும் வரை அதாவது 14 ஆண்டுகள் இருந்ததற்காக அறியப்படுகிறது. இந்த நாயின் கதை இசுகாட்லாந்தில் பல புத்தகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. இருப்பினும் இதன் துல்லியத் தன்மை சர்ச்சைக்குரியது. இதற்கு அமைக்கப்பட்ட சிலை மற்றும் அருகிலுள்ள கல்லறைத் தோட்டம் போன்றவை சுற்றுலா தலமாக உள்ளன.
பாரம்பரியப் பார்வை
[தொகு]

இந்தக் கதையின் மிகவும் பிரபலமான பதிப்பின்படி, பாபி எடின்பர்க் நகர காவல்துறையில் இரவுக் காவலாளியாகப் பணியாற்றிய ஜான் கிரே என்பவரால் வளர்க்கப்பட்டது. உடல்நிலை பாதிக்கபட்டு ஜான் கிரே இறந்தார். அவரது உடல் எடின்பர்க் பழைய நகரத்தில் உள்ள கிரேஃப்ரியர்ஸ் கிர்க் தேவாலயத்தை ஒட்டியுள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தன் உரிமையாளர் புதைக்கபட்ட இடத்திலேயே பாபி தனது வாழ்நாள் முழுவதும் இருந்தது. [2] [3]
1867 ஆம் ஆண்டில், எடின்பர்க் நகர நாய்களுக்கு உரிமம் கட்டாயம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது எடின்பர்க்கின் பிரபுவான சர் வில்லியம் சேம்பர்ஸ், ஸ்காட்டிஷ் விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தின் இயக்குநராகவும் இருந்தார், அவர் பாபிக்கான உரிமத்திற்கு பணம் செலுத்தி, அந்த நாய்க்கு ஒரு கழுத்துப்பட்டையை அணிவித்தார். அது இப்போது எடின்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ளது. [3]
பாபி 14 ஆண்டுகள் கல்லறையிலேயே அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. [2] [3] [4] அது 1872 சனவரி 14 அன்று இறந்தது. [4] எடின்பர்க் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் தாமஸ் வாலியின் மேற்கொண்ட பிணக்கூறாய்வில் அது தாடைப் புற்றுநோயால் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. ஜான் கிரேயின் கல்லறைக்கு சற்று தொலைவில் அதே கல்லறைத் தோட்டத்தில் அது அடக்கம் செய்யப்பட்டது. [3]
ஒரு ஆண்டு கழித்து, ஆங்கிலேய கொடையாளர் லேடி பர்டெட்-கவுட்ஸ் இந்த நாயின் கதையால் ஈர்க்கபட்டு, நான்காம் ஜார்ஜ் பாலம் மற்றும் கேண்டில்மேக்கர் ரோ (தேவாலய நுழைவாயிலுக்கு எதிரே) உள்ள சந்திப்பில் பாபியின் சிலையுடன் கூடிய ஒரு நீரூற்றை அமைத்தார். [4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Khan, Aina J (24 July 2022). "Faithful terrier Greyfriars Bobby may have been a different breed, book claims". தி கார்டியன் (in ஆங்கிலம்). Retrieved 23 August 2022.
- 1 2 greyfriarsbobby.co.uk "Greyfriars Bobby - Greyfriars". Archived from the original on 6 March 2013. Retrieved 11 February 2013.
- 1 2 3 4 Education Scotland website "Greyfriars Bobby - Making of industrial and urban Scotland - Scotlands History". Archived from the original on 21 February 2013. Retrieved 11 February 2013.
- 1 2 3 Edinburgh Museums (monuments) website "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 7 ஜனவரி 2014. Retrieved 20 மார்ச் 2026.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) (11 February 2013) - ↑ "Story of Greyfriars Bobby: A Heartwarming Tale". scotlandwelcomesyou.com (in அமெரிக்க ஆங்கிலம்). 16 February 2018. Retrieved 2 March 2021.