கிரெக்கோ தற்காப்பு
நகர்வுகள் | 1.e4 e5 2.Nf3 Qf6 |
---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | சி40 |
பெயரிடப்பட்டது | கியோவச்சினோ கிரெக்கோ |
மூலம் | ராசாவின் குதிரை திறப்பு |
ஏனைய சொற்கள் | மெக்கோன்னெல் திறப்பு |
Chessgames.com opening explorer |
கிரெக்கோ தற்காப்பு (Greco Defence) என்பது பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கப்படும் சதுரங்கத் திறப்பு முறையாகும். கியோவச்சினோ கிரெக்கோ கண்டுபிடித்த காரணத்தால் இத்திறப்பு கிரெக்கோ தற்காப்பு எனப் பெயர் பெற்றது. மெக்கோன்னெல் தற்காப்பு என்ற பெயராலும் இதை அழைக்கலாம்.
சதுரங்கத் திறப்புகளின் கலைக்களஞ்சியத்தில் இத்திறப்புக்கான குறியீடு சி40 எனக் குறிக்கப்பட்டுள்ளது.
உரையாடல்[தொகு]
கருப்பு தன்னுடைய e- சிப்பாயைக் காப்பாற்ற பல்வேறு சாத்திய நகர்வுகள் உள்ள நிலையில் 2...Qf6 என்று விளையாடுவது பலவீனமானது. ஏனெனில் கருப்பு ராணி தேவைக்கு முன்னதாகவே போருக்குள் வருகிறது. வெள்ளைக் காய்கள் அதன்மீது தாக்குதல் மேற்கொள்ளவும் இலக்காகிறது. g8 இல் நிற்கும் கருப்பு குதிரை வெளிவர முடியாமல் அங்கேயே நிற்க வேண்டியுள்ளது. இத்திறப்பில் குறை சொல்வதற்கு இதைத்தவிர வேறு காரணம் ஏதுமில்லை. இத்திறப்பு முறையில் பிரச்சினைகள் ஏதுமின்றி வெள்ளை தன் காய்களை நகர்த்த இயல்கிறது புதிய சதுரங்க வீரர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பிரபலமான தொடக்க தேர்வு என்றாலும், இத்திறப்பை விளையாடும் வீர்ர்கள், "நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்" என்று அனைத்துலக மாசுட்டர் கேரி லேன் கூறுகிறார்.
உதாரணங்கள்[தொகு]
கிரெக்கோ வரிசை நகர்வுகள்[தொகு]
கிரெக்கோ தற்காப்பு திறப்புக்கு எதிராக நகர்த்த வேண்டிய நகர்வுகளை அவரே 1620 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தியுள்ளார். 1. e4 e5 2. Nf3 Qf6?! 3. Bc4 Qg6 4. 0-0 Qxe4 5. Bxf7+ Ke7'
- 5...Kxf7?? 6.Ng5+ கருப்பு ராணி இழக்கப்படுகிறது.
6. Re1 Qf4 7. Rxe5+ Kxf7
- 7...Kd8 8.Re8#
8. d4 Qf6 9. Ng5+ Kg6 10. Qd3+ Kh6 11. Nf7# 1–0[1]
மெக்கோனெல் ஆட்டம்[தொகு]
மார்பி x மெக்கோனெல், நியூ ஒரிலியன்சு 1849:[2]
1. e4 e5 2. Nf3 Qf6 3. Nc3 c6 4. d4 exd4 5. e5 Qg6 6. Bd3
- 6.Qxd4! வெள்ளைக்கு முன்னேற நல் வாய்ப்பைத் தருகிறது
6... Qxg2 7. Rg1 Qh3 8. Rg3 Qh5 9. Rg5 Qh3 10. Bf1 Qe6 11. Nxd4 (see diagram)
- ... வெள்ளைக் காய்களுடன் விளையாடும் மார்பியின் நிலை நன்றாக உள்ளது.
பசுச்செ ஆட்டம்[தொகு]
பால்சென் X பசுச்செ துசெல்டார்ப் 1863 :[3]
1. e4 e5 2. Nf3 Qf6 3. Bc4 Nh6
- கருப்பு சிறிதளவு முன்னெச்சரிக்கை நகர்வு செய்கிறார். வெள்ளை d4 நகர்வையும் தொடர்ந்து Bxh6 நகர்வையும் செய்தால் ...Qxh6 என்று ஆடும் வழிமுறைக்கு அந்நகர்வு உதவும்.
4. 0-0 Bc5 5. Nc3 c6 6. d4! Bxd4 7. Nxd4 exd4 8. e5 Qg6 9. Qxd4
- மறுபடியும் வெள்ளை இங்கு நல்ல நிலையில் உள்ளது. .
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Opening Lanes Gary Lane, Chesscafe.com, 2001, last question on the page.
- ↑ Joel Benjamin; Eric Schiller (1987). "Greco Defence". Unorthodox Openings. Macmillan Publishing Company. பக். 91–92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-02-016590-0.
- ↑ Eric Schiller (1998). "McConnell Defense". Unorthodox Chess Openings. Cardoza Publishing. பக். 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-940685-73-6. https://archive.org/details/unorthodoxchesso00schi.