கிரெகோரியன் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்லாந்து நாட்டினரான கணிதவல்லுனரும் வானியல்நிபுணருமான 'ஜேம்ஸ் கிரெகோரி(James Gregory)' என்பவரால் வடிவமைக்கப்பட்டது இந்த 'க்ரெகோரியன் தொலைநோக்கி'(Gregorian telescope). இது முதன்முதலில் 1673-ஆமாண்டு 'ராபெர்ட் ஹூக்'(ராபர்ட் ஹூக்) என்பவரால் முதன்முறையாக உருவாக்கப்பட்டது. முதலில் செயலியல் வெற்றிகண்ட 1668 ஆண்டு 'ஸர் ஐஸக் ந்யூட்டனால்'(ஐசாக் நியூட்டன்) உருவாக்கப்பட்ட Newtonian telescopeக்கு முந்தையது இத்தொலைநோக்கியின் வடிவமைப்பு, ஆயினும் இத்தொலைநோக்கியை முதல்ந்யூட்டானியன் தொலைநோக்கிக்கு முன்னால் வெற்றிகரமாக உருவாக்க இயலவில்லை.

வரலாறு[தொகு]

ஜேம்ஸ் க்ரெகோரியின்ன் ஆப்டிகா ப்ரொமோட்டா (Optica Promota - ஒளியியல் வளர்ச்சி) என்ற நூலில் தரப்பட்ட வடிவமைப்பாகவிருப்பதால் இத்தொலைநோக்கிக்கு க்ரெகோரியன் தொலைநோக்கி என்ற பெயர் வழங்கப்பட்டது. இதையொத்த கருத்தியல் வடிவமைப்புகளை 'போனாவெஞ்சுரா கவேலியெரி (Bonaventura Cavalieri)' எழுத்திலும் (Lo Specchio Ustorio (On Burning Mirrors), 16322) மரின் மெர்சென்னே (Marin Mersenne (L'harmonie universalle) 16363) எழுத்திலும் காணலாம். எவ்வித செயலாக்கத்திறமையில்லாததாலும் உருவாக்கும் திறமைபெற்ற ஒளியியல் வித்தகர்கள் இல்லாமையாலும் க்ரெகோரியின் தொடக்கமுயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. பத்தாண்டுகளுக்குப் பிறகு 'ராபெர்ட் ஹூக்' என்ற சோதித்தறியும் அறிவியலறிஞரின் உதவியுடன் வெற்றிகரமாக செயல்வடிவம்பெற்றது.

வடிவமைப்பு[தொகு]

க்ரெகோரியன் தொலைநோக்கி இரண்டு குழியாடிகளைக்கொண்டது. இதிலிருக்கும் முதல்நிலை-பரவளையக் குழியாடி ஒளியை இரண்டாம்நிலை-நீள்வட்டக்குழியாடிக்குமுன்னால் குவிக்கிறது. இங்ஙனம் குவிந்து விரியும் ஒளியை இரண்டாம்நிலை-நீள்வட்டக்குழியாடி மீண்டும் எதிரொளித்து முதல்நிலைப் பரவளையக் குழியாடியின் நடுவில் இருக்கும் துளைவழியாக பார்வையாளரின் கண்ணருகுப் பொருளில் குவிக்கிறது.

நியூட்டானியன் தொலைநோக்கியில் பார்ப்பவர் நிழல் ஆடியிற்படும். ஆடியின் பின்னால் நின்றுகொள்வதால் இச்சிக்கல் 'க்ரெகோரியன் தொலைநோக்கி' வடிவமைப்பிலில்லை. நேரானக் காட்சியை வழங்குதல் இத்தொலைநோக்கியை தேடுதலுக்குப் பயன்படுத்த ஏற்றதொன்றாக்குகிறது. இவ்வடிவமைப்பானது பின்னாளில் வந்த கேஸெக்ரெய்ன் தொலைநோக்கியால் பின்னுக்குத்தள்ளப்பட்டது. இருப்பினும் முப்படகங்களின் உதவியின்றி துல்லியமான காட்சியை வழங்குவதால் தேடுதல் தொலைநோக்கியாக பலவிடங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 1985 வரையில் பெரும்க்ரெகோரியன் தொலைநோக்கிக்கான ஆடிகளை ஸ்ற்றிவார்ட் வானாய்வகம் 1985 வரை செய்துவந்தது.

க்ரகோரியன் தொலைநோக்கி வடிவமைப்பில் முதல்நிலைஆடி இரண்டாம்நிலைஆடியின் முன்பு உண்மையானக்காட்சியை(பிம்பம்) ஏற்படுத்துகிறது. இவ்விடத்தில் வெளிக்காட்சி காட்சிதடுப்பு திரைகளை அமைத்துக்கொள்ள முடியும்.