கிருஷ் ஜே.சதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ் ஜே.சதார் (Krish J. Sathar) (உன்னி கிருஷ்ணன் சதார் என்றப் பெயரில் பிறந்தார்) இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகரும் மற்றும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றுகிறார்.

தொழில்[தொகு]

1984 செப்டம்பர் 14 இல் நடிகர்கள் சதார் மற்றும் ஜெயபாரதி ஆகியோருக்கு கிருஷ் பிறந்தார். பொறியியல் படித்த இவர், நிர்வாகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். கிரிஷ் இங்கிலாந்தில் தனது படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவில் பணிபுரிந்தார்.

ஒரு மதிப்புமிக்க திரைப்பட குடும்பத்தில் பிறந்த இவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடிவந்தன. அவற்றுள் மோகன்லால் நடித்து, சித்திக் இயக்கிய லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை தனது துவக்கப்பாதையாக இவர் தேர்ந்தெடுத்தார்.[1] இவர் திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு நியூயார்க் திரைப்பட அகாதமியில் படித்துக் கொண்டிருந்தார். 2014ஆம் ஆண்டில், சிறீப்ரியா இயக்கிய மாலினி 22 பாளையங்கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இது [[ஆஷிக் அபு]வின்], 22 பிமேல் கோட்டயம் என்ற மலையாளத் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கம். இந்தப் படம் தெலுங்கிலும் கட்டானா என்ற தலைப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் இவர் தெலுங்குத் திரையுலகிலும் அறிமுகமானார். இவரது அடுத்த படம் டூ நூரா வித் லவ், இதில் இவர் முக்கிய கதாபாத்திரமான மகிழ்ச்சியான-அதிர்ஷ்டசாலி மற்றும் சூஃபி பாடகர் ஷாஜகானைச் சித்தரித்தார்.[2] இவர் தக்காளி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் தேதி பிரச்சினைகள் காரணமாக அத்திரைப்படத்திலிருந்து விலகினார்.[2]

தொழில் முனைவோர் முயற்சிகள்[தொகு]

கிரிஷ் இலண்டனில் கான்செப்ட் காக்டெய்ல் சொந்தமாக மது விடுதிகளை வைத்து நடத்தி வருகிறார். ஒரு தீவிர காக்டெய்ல் ஆர்வலராக இருந்த இவர் அதை ஒரு பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டார். பின்னர் நியூயார்க்கில் இருந்த காலத்தில் காக்டெய்ல்களில் தனது திறமைகளைப் பயிற்றுவித்தார்.

இவர் லண்டனில் தனது முதல் மது விடுதியினைத் திறந்தார். இது ஐக்கிய இராச்சியத்தின் முதல் பத்து சிறந்த காக்டெய்ல் மது விடுதிகளில் இடம் பெற்றது. சமீபத்தில் இவர் தனது இரண்டாவது மது விடுதியினை லண்டனில் திறந்தார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்_ஜே.சதார்&oldid=3505809" இருந்து மீள்விக்கப்பட்டது