கிருஷ்ண பால் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண பால் சிங் யாதவ்
Krishna Pal Singh Yadav
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
தொகுதி குணா
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சனவரி 1976 (1976-01-15) (அகவை 47)[1]
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
இருப்பிடம் ருசாலா, அசோக்நகர் (மத்தியப் பிரதேசம்)
படித்த கல்வி நிறுவனங்கள் பாவ் முலக் ஆயுர்வேத பல்கலைக்கழகம், நாக்பூர் (பி. ஏ. எம். எசு- 2000-2001)[சான்று தேவை]
தொழில் அரசியல்வாதி, ஆயுர்வேத மருத்துவர்

கிருஷ்ண பால் சிங் யாதவ் (Krishna Pal Singh Yadav)(பிறப்பு: ஜனவரி 15, 1976) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மத்திய பிரதேசத்தில் குணா நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவைத் தோற்கடித்தார். முங்காவோலி சட்டசபை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக யாதவ் சிந்தியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரசிலிருந்து விலகினார்.[2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

யாதவின் தந்தை பெயர் ரகுவீர் சிங். இவர் 2000-2001 ஆம் ஆண்டில் நாக்பூரில் உள்ள பாவ் முலக் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பட்டத்தை முடித்தார். இவர் ஒரு ஆயுர்வேத பயிற்சியாளர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]