உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ண கோபால் சக்சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண கோபால் சக்சேனா
பிறப்பு25 செப்டம்பர் 1912
தில்லி, இந்தியா
இறப்புஅக்டோபர் 2003
பணிஓமியோபதி மருத்துவர்
வாழ்க்கைத்
துணை
சகுந்தலா தேவி
விருதுகள்பத்மசிறீ
என். சி. சக்ரவர்த்தி நினைவு தேசிய விருது

கிருஷ்ண கோபால் சக்சேனா (Krishna Gopal Saxena)(1912-2003) என்பவர் ஓர் இந்திய ஓமியோபதி மருத்துவர் ஆவார்.[1]

இளமை & கல்வி

[தொகு]

சக்சேனா 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி தில்லியில் பிறந்தார். கராச்சி மற்றும் அம்பாலாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். கல்கத்தா ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஓமியோபதி மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.[1]

மருத்துவ பணி

[தொகு]

1952-ல் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஓமியோபதி குறிப்புக் குழுவின் முதல் கெளரவ ஆலோசகராக சக்சேனா இருந்தார்.  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான இராசேந்திர பிரசாத்தின் கௌரவ மருத்துவராகவும் பணியாற்றினார்.[1] 1994 முதல் 1999 வரை தில்லி அரசாங்கத்தின் ஓமியோபதி ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்தார்.[1] சக்சேனா என். சி. சக்ரவர்த்தி நினைவு தேசிய விருதை வென்றவர் ஆவார். அனைத்துலக ஓமியோபதி மாநாட்டின் கௌரவத் தலைவர் விருதினையும் பெற்றவர் ஆவார்.[1] 1969-ல் இந்திய அரசாங்கத்தால் இவரது மருத்துவ பங்களிப்புகளுக்காக நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3]

இறப்பு

[தொகு]

மனைவி சகுந்தலா தேவியுடன் வாழ்ந்த, சக்சேனா 2003 அக்டோபரில் இறந்தார்.[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Homoeopathe International". Homoeopathe International. 2004. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
  2. "Padma Awards Directory (1954-2013)" (PDF). Ministry of Home Affairs, India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  3. "Padma Shri Awardees Doctors Forum". Padma Shri Awardees Doctors Forum. 2015. Archived from the original on 22 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_கோபால்_சக்சேனா&oldid=3404484" இலிருந்து மீள்விக்கப்பட்டது