கிருஷ்ணா யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா யாதவ்
Krishna Yadav award (sq cropped).jpg
தேசியம் இந்தியா
பணிஊறுகாய் தயாரிப்பாளர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது
வாழ்க்கைத்
துணை
ஜிஎஸ். யாதவ்
பிள்ளைகள்மூன்று

கிருஷ்ணா யாதவ் (Krishna Yadav) இந்தியாவைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் ஆவார். தில்லியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திராவில் (பண்ணை அறிவியல் மையம்) பயிற்சி பெற்ற பிறகு ஊறுகாய் வணிகத்தை உருவாக்குவதில் இவர் வெற்றிப் பெற்றார். பல ஆண்டுகளாக, சாலையோரத்திலிருந்து ஊறுகாய் விற்பனையில் நான்கு வெவ்வேறு வணிக முயற்சிகளாக்கி தனது வருடாந்திர வருவாயை 40 மில்லியன் ரூபாயாக உயர்த்தினார். இவருக்கு 2016 ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இவருக்கு முறையான பள்ளிக் கல்வி இல்லை. [1] இவர் பயிர்களைத் தேர்ந்தெடுத்து வளர்ந்தார், கணவரின் கார் வணிகம் தோல்வியடைந்தபோது, இவர்கள் புலந்த்சகரில் தங்கள் வீட்டை விற்க வேண்டியிருந்தது. இவர்கள் தில்லிக்குச் சென்று காய்கறி விவசாயம் செய்தார்கள். ஆனால் விற்பனை கடினமாக இருந்தது. பின்னர் இவர் ஊறுகாய் வணிகத்தில் கவனம் செலுத்துவதற்காக [2] தில்லியின் உஜ்வா கிராமத்தில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரத்தில் பயிற்சி பெற்றார்.

தொழில்[தொகு]

2002 ஆம் ஆண்டில் இவர் ஊறுகாய் தயாரிக்கத் தொடங்கினார். [3] ஆரம்பத்தில் அவற்றை மளிகைக் கடைகளில் விற்க முடியவில்லை. எனவே இவரது கணவர் அவற்றை சாலையின் ஓரத்தில் விற்றார். அதே நேரத்தில் இவர் தனது குழந்தைகளுடன் சேர்ந்து அவற்றை உற்பத்தி செய்தார். [2] 2013 ஆம் ஆண்டளவில், இவர் 150 வகையான ஊறுகாய்களை விற்பனை செய்து வந்தார். 2016 ஆம் ஆண்டில் இவர் 200 டன் உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்பட்டது. இவரது முயற்சிகள் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. [3] இவரும் இவரது கணவர் ஜி.எஸ். யாதவும் நஜாப்கரில் ஒரு கடையைத் திறந்துள்ளனர். [4] இவர் நான்கு வெவ்வேறு வணிக முயற்சிகளைக் கொண்டிருப்பதாகவும் இவரது வருடாந்திர வருவாய் 40 மில்லியன் ரூபாய் என்றும் கூறப்படுகிறது. [2]

விருது[தொகு]

2016 ஆம் ஆண்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் சர்வதேச மகளிர் தினத்தன்று நாரி சக்தி விருது பெற இவர் பரிந்துரைக்கப்பட்டார். [3] இந்த விருதை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் பிரணப் முகர்ஜி வழங்கினார். இவருடன் சேர்ந்த்து மேலும் பதினான்கு பெண்களுக்கும் ஏழு நிறுவனங்களும் ஒரே நாளில் அவர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டன. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ms. Krishna Yadav - #NariShakti Puraskar 2015 Awardee in Individual category". Ministry of WCD on Twitter. 8 March 2018. 19 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 Kapoor, Shivani. "inspiring story of Krishna Yadav who became a millionaire by selling pickles on the road | How Krishna Yadav became a millionaire by selling pickles on the road, today the mistress of four companies, turnover more than 4 crores - NewsBust.in". NewsBust India (ஆங்கிலம்). 19 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "President honored ex-trainee of KVK with Nari Shakti Puraskar- 2015". Indian Council of Agricultural Research (Ministry of Agriculture and Farmers Welfare). 8 March 2016. 16 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Antyodaya Krishi Puraskar awardee Krishna Yadav and her husband GS..." Getty Images (ஆங்கிலம்). 19 February 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Give women freedom to exercise choices at home, workplace: President Pranab Mukherjee". The Economic Times. 8 March 2016. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/give-women-freedom-to-exercise-choices-at-home-workplace-president-pranab-mukherjee/articleshow/51312597.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_யாதவ்&oldid=3400301" இருந்து மீள்விக்கப்பட்டது