உள்ளடக்கத்துக்குச் செல்

கிருஷ்ணா சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணா சாகி
Krishna Sahi
மத்திய அமைச்சர்,
இந்திய அரசு
பதவியில்
12 மே 1986 – 2 திசம்பர் 1989
பிரதமர்இராஜீவ் காந்தி
பதவியில்
2 சூலை 1992 – 16 மே 1996
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
for பேகூசராய் மக்களவைத் தொகுதி
பதவியில்
1980(1995 – 1996)1989
முன்னையவர்சியாம் நந்தன் மிசுரா
பின்னவர்இலலித் விஜய் சிங்
பதவியில்
1991(1995 – 1996)1996
முன்னையவர்இலலித் விஜய் சிங்
பின்னவர்இராமேந்திர குமார்
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை
பதவியில்
1972(1995 – 1996)1980
தொகுதிமொகமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 பெப்ரவரி 1931 (1931-02-16) (அகவை 94)[1]
முசாபர்பூர், பீகார், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்மறைந்த பி. பி. என். சாகி
பிள்ளைகள்1
பெற்றோர்மறைந்த மகேசு பிரசாத் சின்கா
முன்னாள் மாணவர்பட்னா பல்கலைக்கழகம் (இளங்கலை)
பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம் (இளங்கலைச் சட்டம்)
தொழில்வழக்கறிஞர், அரசியல்வாதி, சமூக சேவகர்

கிருஷ்ணா சாகி (Krishna Sahi)(பிறப்பு: பிப்ரவரி 16, 1931) பீகாரைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கிருஷ்ணா இந்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.[2][3][4]

அரசியல்

[தொகு]

கிருஷ்ணா சாகி பீகார் சட்டமன்றத்தில் மோகார்னா சட்டமன்ற உறுப்பினராக 1972 முதல் 1980 வரை இருமுறை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் பதவி வகித்துள்ளார். இதன் பின்னர் பேகூசராய் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 1980 முதல் 1989 வரை பதவியிலிருந்தார். மீண்டும் 1991 முதல் 1996 வரை இதே நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆனார்.

இராசீவ் காந்தியின் அமைச்சரவையில் 12 மே 1986 முதல் 2 திசம்பர் 1989 வரை மனித வளத்துறை, நீர் வளத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். பி. வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் 2 சூலை 1992 முதல் 16 மே 1996 வரை தொழில்துறை அமைச்சராகவும், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biographical Sketch". Parliament of India. Retrieved 6 January 2014.
  2. BSCAL, BSCAL. "Jagannath Mishra, Krishna Sahi Quit Congress". Business Standard. Business Standard Ltd. Retrieved 6 January 2014.
  3. 3.0 3.1 "India Ministers". Guide2womenleaders.com. Retrieved 2012-09-09.
  4. "Rediff on the NeT: No surprises in Samata Party's first list for Bihar". rediff.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணா_சாகி&oldid=4225243" இலிருந்து மீள்விக்கப்பட்டது