கிருஷ்ணலால் ஸ்ரீதரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணலால் ஸ்ரீதரணி
பிறப்பு(1911-09-16)16 செப்டம்பர் 1911
பவநகர் மாவட்டம் உமராலா, குசராத்து, இந்தியா
இறப்பு23 சூலை 1960(1960-07-23) (அகவை 48)
தில்லி, இந்தியா
தொழில்கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர்
மொழிகுஜராத்தி
தேசியம் இந்தியா
கல்விமுனைவர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வார் வித்அவுட் வயலன்ஸ் (1939)
குறிப்பிடத்தக்க விருதுகள்இரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக் விருது(1958)
துணைவர்

கிருஷ்ணலால் ஸ்ரீதரணி (Krishnalal Shridharani) (16 செப்டம்பர் 1911 – 23 சூலை 1960) ஒரு இந்திய கவிஞரும், நாடக ஆசிரியரும், பத்திரிகையாளரும் ஆவார். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் சமூகவியல், பொருளாதாரம் மற்றும் பத்திரிகை ஆகியவற்றைப் படித்தார். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்று சிறையில் சில காலம் இருந்தார். அந்த நேரத்தில் இவர் நாடகங்களையும் கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். புனைகதை அல்லாத பல புத்தகங்களையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

ஸ்ரீதரணி 16 செப்டம்பர் 1911 இல் குசராத்தின் பவநகருக்கு அருகிலுள்ள உம்ராலாவில் பிறந்தார். தனது குழந்தைப் பருவத்தை ஜூனாகத்தில் கழித்தார். [1] இவர் தனது ஆரம்பக் கல்வியை உம்ராலாவிலும், இடைநிலைக் கல்வியையும் பவநகரின் தட்சிணாமூர்த்தி வினய் மந்திரிலும் முடித்தார். 1929 இல் குஜராத் வித்யாபீடத்தில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஒரு இளைஞராக பங்கேற்று தாராசனா சத்தியாக்கிரகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது கராடி அருகே கைது செய்யப்பட்டார். பின்னர், சபர்மதி மற்றும் நாசிக் சிறைகளில் சிறிது காலம் இருந்தார். 1931இல் சாந்திநிகேதனில் (விஸ்வ-பாரதி பல்கலைக்கழகம்) சேர்ந்து 1933இல் பட்டப்படிப்பை முடித்தார். 1934ஆம் ஆண்டில், ஜேம்ஸ் பிராட், இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்கா சென்றார். இது இவரது அணுகுமுறையில் நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது. 1935இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இவர், கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி பள்ளி இதழியலில் சேர்ந்து 1936 இல் முதுதத்துவமாணி மற்றும் 1940இல் தனது முனைவர் ஆராய்ச்சியையும் முடித்தார்.

இவர் 1945இல் அமிர்த பஜார் பத்ரிக்கா என்ற இதழுக்காக எழுதத் தொடங்கினார், 1946இல் இந்தியா திரும்பினார். [1] பின்னர், சில காலம் வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றினார். [1] இவர் நடனக் கலைஞரும், கலைஞருமான சுந்தரி என்பவரை மணந்தார். [1] 1946 இல் குஜராத்தி இலக்கிய அமைப்பின் வரலாறு மற்றும் பொருளாதாரத் துறைக்கு தலைமை தாங்கினார்.[1] 1960 சூலை 23 அன்று தில்லியில் மாரடைப்பால் இறந்தார்.[1]

காந்திய தத்துவம் மற்றும் வன்முறையற்ற வன்முறைகள் (1939) ஆகியவற்றை பகுப்பாய்வு செய்யும் இவரது புத்தகம், இன சமத்துவத்தின் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் உத்திகளை பாதித்தது. மேலும் அமெரிக்க குடிசார் உரிமைகள் இயக்கத்தின் போது ஆப்பிரிக்க-அமெரிக்க தலைவர்களிடையே பரவலாக விநியோகிக்கப்பட்டது. [2] [3] [4] மான்ட்கோமரி பேருந்துப் புறக்கணிப்பின் போது இளைய மார்ட்டின் லூதர் கிங் இதை ஆய்வு செய்தார். [5]

படைப்புகள்[தொகு]

இவர் மொத்தம் பதினாறு நாடகங்களை எழுதியுள்ளார். சிறைவாசம் அனுபவித்தபோது, வாட்லோ (1931) என்ற சிறுவர் நாடகத்தை எழுதினார். பீலா பாலாஷ் (1934), பியா கோரி, துஸ்கு, துங்கலி நோ தாடோ, சோன்பாரி, விஜாலி, விருஷல், மோர் நா இந்தா போன்றவை இவரது மற்ற நாடகங்கள் ஆகும். பத்மினி என்ற ஒரு வரலாற்று நாடகத்தையும் எழுனார். [1]

1934 ஆம் ஆண்டில், இவரது முதல் கவிதைத் தொகுப்பான கோடியா வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1961 இல் புனரபி. சிறைவாசத்தின் போது கைதிகளுடன் அவர் பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையான இன்சான் மிதா தூங்கா ஆகியவையும் வெளிவந்தது [1]

ஆங்கிலத்தில் இவரது அசல் படைப்புகளில் மை இந்தியா, மை அமெரிக்கா (1941) ஆகியவை அடங்கும். இது அமெரிக்காவில் தான் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியது. வா வித்அவுட் வயலன்ஸ் என்ற இவரது புத்தகம் அமெரிக்க குடிசார் உரிமைகள் இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. [3] வார்னிங் டு தி வெஸ்ட் (1943), தி பிக் ஃபோர் ஆஃப் இந்தியா (1941), தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் தி அப்ஸைட்-டவுன் ட்ரீ (1959), ஸ்டோரி ஆஃப் தி இந்தியன் டெலிகிராப் (1953), தி ஜர்னலிஸ்ட் இன் இன்டியா (1956), பஸ்மைல்ஸ் பிரம் காஷ்மீர் (1959), தி மகாத்மா அண்ட் தி வேர்ல்ட் (1946) ஆகியவையும் அடங்கும். தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் வோக் உள்ளிட்ட பல பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களிலும் இவர் பங்களித்தார். [1]

இவருக்கு 1958 இல் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் விருது வழங்கப்பட்டது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Krishnalal Shridharani" (in Gujarati). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 29 August 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. David Hardiman (2003). Gandhi in His Time and Ours: The Global Legacy of His Ideas. C. Hurst & Co. Publishers. பக். 256. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85065-712-5. https://books.google.com/books?id=y1BMOHA2D7AC&pg=PA256. 
  3. 3.0 3.1 Gerald Horne. The End of Empires: African Americans and India. Temple University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59213-900-2. https://books.google.com/books?id=6so3dLJNfRwC&pg=PA123. 
  4. Marian Mollin. Radical Pacifism in Modern America: Egalitarianism and Protest. University of Pennsylvania Press. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8122-0282-1. https://books.google.com/books?id=gJNLd8ZXwKYC&pg=PA22. 
  5. Mary Elizabeth King. A Quiet Revolution: The First Palestinian Intifada and Nonviolent Resistance. Basic Books. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7867-3326-2. https://books.google.com/books?id=Y5dmy-mWlcsC&pg=PA23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணலால்_ஸ்ரீதரணி&oldid=3708793" இலிருந்து மீள்விக்கப்பட்டது