கிருஷ்ணர் கோயில், தொடுபுழா

ஆள்கூறுகள்: 9°54′00″N 76°43′01″E / 9.9000°N 76.7170°E / 9.9000; 76.7170
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடுபுழா கிருஷ்ணர் கோயில்
கிருஷ்ணர் கோயில், தொடுபுழா is located in கேரளம்
கிருஷ்ணர் கோயில், தொடுபுழா
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:இடுக்கி மாவட்டம்
அமைவு:தொடுபுழா
ஆள்கூறுகள்:9°54′00″N 76°43′01″E / 9.9000°N 76.7170°E / 9.9000; 76.7170
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கேரள பாணி
வரலாறு
அமைத்தவர்:கீழைமலைநாட்டு அரசன்

ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் (Sree Krishna Swami Temple, Thodupuzha) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது மூவாற்றுப்புழை ஆற்றின் துணை ஆறான தொடுபுழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் இறைவனான கிருஷ்ணர் தனது வலது கையில் வெண்ணெய் வைத்திருக்கும் நவநீத கிருஷ்ணர் வடிவில் இருக்கிறார். [1] கோயிலின் தாந்த்ரீக உரிமைகள் அராமல்லூர் காவநட்டு மடத்தால் நடத்தப்படுகின்றன. பூஜைகள் இரண்டு மடங்களால் நடத்தப்படுகின்றன. அவை 'பதின்ஜரே மடம்' மற்றும் 'துருதேல் மடம்' என்ற இரண்டு மடங்களாகும்.

தொன்மம்[தொகு]

வளாகத்தின் பிரதான சன்னதி

கோயிலின் தோற்றம் பல பண்டைய புராணங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒரு காலத்தில் பல்வேறு கோயில்களுக்கு யாத்திரை மேற்கொண்டு அலைந்து திரிந்துகொண்டிருந்த ஒரு பிராமணர் இங்கு வந்து கிருஷ்ணரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றார் என்பது பிரபலமான தொன்மம் ஆகும். கிருஷ்ணரின் தரிசனத்தைப் பெற்றபின், அருகிலுள்ள ஆற்றில் ( தொடுபுழையாறு ) குளித்து உடலை தூய்மையாக்கி, தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி நிவேயத்தை வழங்கினார். இது மலையாள மாதமான மீனத்தில் சோதி நாளில் நடந்தது. பொதுவாக இந்த நிகழ்வே கோவிலின் தோற்றத்திற்கு முதன்மைக் காரணம் என்று நம்பப்படுகிறது. பின்னர், கீழைமலைநாட்டு அரசன் இந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, சிலையமைத்து குடமுழுக்கு செய்தார். இக்கோயிலில் ஆண்டுதோறும், புகழ்பெற்ற சோதியூத்து உற்சவம் என்னும் வாழாவானது பத்து நாட்கள் நடத்தப்படுகிறது. அப்போது இது இங்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. இந்த கோயில் இப்போது அறங்காவலர் குழுவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. [2]

பூசைகள்[தொகு]

காலையில் 'உஷா பூஜை' மற்றும் 'அபிஷேகம்' ஆகியவை செய்யப்படுகின்றன. முந்தைய நாளில் அணிவிக்கப்பட்ட மலர் மாலைகள் தினமும் காலையில் அகற்றப்படுகின்றன. 'நிலாபதுதரா' அல்லது புனித மேடை கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. திருவிழாவின் போது இறைவனின் சிலையானது கருவறையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்ட இந்த மேடைக்கு கொண்டுவரப்பட்டு முழுமையாக அலங்கரிக்கப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

திருவிழாக்கள்[தொகு]

கோயிலின் ஆண்டுத் திருவிழாவானது மலையாள மாதமான மீனம் (மார்ச் / ஏப்ரல்) மாதத்தில் நடத்தப்படுகிறது. உற்சவ பலி என்ற புனித விழாவானது விழாவின் ஒன்பதாம் நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இந்த கோவிலிலுக்கு சொந்தமான மிகப்பெரிய திருமண மண்டபமானது மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தில் 'கிருஷ்ண தீர்த்தம்' என்று பெயரில் உள்ளது. [3]

பரிவார தெய்வங்கள்[தொகு]

இந்த கோவிலில் பகவதி, சிவன், பிள்ளையார் மற்றும் நாகர் ஆகியோர் பிற தெய்வங்களாக உள்ளனர். [4]

குறிப்புகள்[தொகு]