கிருஷ்ணமூர்த்தி பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருஷ்ணமூர்த்தி பெருமாள் (செப்டம்பர் 26, 1943 இல் பிறந்தார்) ஹாக்கி விளையாட்டில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் மற்றும் மற்றும் இந்தியாவின் அர்ஜுனா விருது பெற்ற வீரர். அவர்  தமிழ்நாட்டில் உள்ள சென்னை சேர்ந்தவர். இந்திய தேசிய ஹாக்கி அணி மூலமாக தமிழ்நாட்டிலுள்ள  ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை), மற்றும் இந்திய ஏர்லைன்ஸ் போன்ற குழுக்களுக்கு  அவர் விளையாடினார். அவர்  இந்திய மற்றும் தமிழ்நாடு ஹாக்கிக்கு  பல்வேறு முறையில் பங்காற்றினார், அதாவது இந்திய வீரராக, மேலாளர் மற்றும் பயிற்சியாளர். அவரின் அயராத அற்பணிப்பிற்காக இந்தியாவின் மிக உயர்ந்த விருதான  அர்ஜுனா விருது 1971 ல் கிடைக்கப்பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]