கிருஷ்ணன்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிருஷ்ணன்கோவில் என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும். இவ்வூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவிலின் பெயராலேயே இவ்வூர் வழங்கப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தேசிய நெடுஞ்சாலை 47 இல் அமைந்துள்ளது.இது நாகர்கோவில் நகரை கேரளா தலைநகரான திருவனந்தபுரத்துடன் இணைக்கிறது. கிருஷ்ணன் கோவில் ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவில் "தென் திசையின் குருவாயூர்" என்று அழைக்கப்படுகிறது, இக்கோவிலில் உள்ள கிருஷ்ணன் சிலை, குருவாயூர் கோவிலில் உள்ள ஒரு முக்கிய தெய்வத்தை ஒத்திருக்கிறது.


5 ம் வகுப்பு வரை கல்வி போதிக்கும் ஒரு அரசு துவக்கப் பள்ளி புறநகர் பகுதியில் உள்ளது.இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் நாகர்கோவில் நகரின் அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள் அல்லது வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள்.இங்கு விளையும் முக்கிய பயிர் அரிசி. நாகர்கோவிலில் உள்ள ரயில் நிலையம், நாகர்கோவில் டவுன் என்று அழைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் உள்ள முக்கிய இரயில் நிலையம் நாகர்கோவில் சந்திப்பு என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ணன்கோவில் வடசேரி காவல் நிலையம் அருகில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணன்கோவில்&oldid=2334035" இருந்து மீள்விக்கப்பட்டது