கிருஷ்ணகிரி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌலீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌலீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:சந்திர மௌலீஸ்வரர்
தாயார்:பிரசன்ன பார்வதி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கிருஷ்ணகிரி பிரசன்ன பார்வதி சமேத சந்திர மௌலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் நெடிய மதில்சுவருடன் அமைந்துள்ளது கோயிலின் தலமரமாக வெள்ளெருக்கு செடி விலங்குகிறது. முகப்பில் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது. கருவறையில் சுயம்பு மூர்த்தியாய் சந்திர மௌளீசுவரர் உள்ளார். இவருக்கு வடக்கில் பிரசன்ன பார்வதி தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி உள்ளார். அம்மனுக்கு கிழக்கில் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் உள்ளார். கோயிலின் தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் சண்டிகேசுவரரும் உள்ளார். பிரகாரத்தில் பிரம்மா, விஷ்ணு, நவக்கிரகங்களின் சிலைகளும் உள்ளன.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கிருஷ்ணகிரி நகரின் கிழக்கில் ரவுண்டானாவில் இருந்து ஏறக்குறைய 0.5 கி.மீ தொலைவில் சேலம் சாலையின் கிழக்கில் பாரதியார் தெருவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 73-75. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)