கிருஷ்ணகிரி சோமேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழையபேட்டை சோமேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:பழையபேட்டை, கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:சோமேசுவரர்
தாயார்:பிரசன்ன பார்வதி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:13ஆம் நூற்றாண்டு
அமைத்தவர்:சோமேசுவரன்

பழையபேட்டை சோமேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியின், பழையபேட்டை என்னும் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இப்பகுதியை ஆண்ட சோமேசுவரன் என்ற சிவபக்த மன்னன் கிருட்டிணகிரி, காவேரிப்பட்டிணம், அதியமான்கோட்டை, இராயக்கோட்டை, பாரூர், மணவாரனப்பள்ளி, போன்ற பல்வேறு இடங்களில் சிவன் கோயில்களை எழுப்பினான். இந்த எல்லா கோயில்களின் இறைவனானவர் சோமேசுவரன் என்றே அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1200இல் போசளர் காலத்தில் கட்டப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காலகட்டங்களில் மாற்றங்களைச் சந்தித்து வந்துள்ளது.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் முதன்மை வாயிலின் மேல்பகுதியில் இராசகோபுரத்துக்கு பதிலாக நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார். இந்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அழகிய நந்தி சிலை உள்ளது. அதற்கு எதிரில் கருவறையில் சோமேசுவரர் உள்ளார். இவருக்கு சற்று அருகில் பிரசன்ன பார்வதி தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் உள்ளார். கோயில் பிரகாரத்தில் முதன்மையாக பிள்ளையார் உள்ளார். மேலும் இரட்டை பைரவர்கள் உள்ளனர். கோட்ட தெய்வங்களாக தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகியோர் உள்ளனர். [2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் பிரதோசம், பௌர்ணமி, தேய்பிறை அட்டமி, சங்கடகாரசதுர்த்தி, கார்த்திகை மாத திங்கட்கிழமைகள், நவராத்திரி, ஆடி வெள்ளி ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. கோயிலில் ஒரு காலப்பூசை நடக்கிறது.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கிருஷ்ணகிரி நகரின் புறநகரப் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 500 மீட்டர் தொலைவில் பழையபேட்டை பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சோமேஸ்வரர் கோயிலில் வாசற்கால் பூஜை விழா". செய்தி. தினகரன். 6 அக்டோபர் 2016. Archived from the original on 2022-03-16. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2018.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 87-88.