கிருஷண்சர் ஏரி

ஆள்கூறுகள்: 34°23′49″N 75°06′02″E / 34.397072°N 75.100447°E / 34.397072; 75.100447
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷண்சர் ஏரி
கிருஷண்சர் ஏரியின் காட்சி
ஜம்மு காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
ஜம்மு காஷ்மீரில் ஏரியின் அமைவிடம்
கிருஷண்சர் ஏரி
அமைவிடம்காந்தர்பல் மாவட்டம், ஜம்மு காஷ்மீர், இந்தியா
ஆள்கூறுகள்34°23′49″N 75°06′02″E / 34.397072°N 75.100447°E / 34.397072; 75.100447
வகைதாவர ஊட்டச்சத்துக்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள ஏரி
முதன்மை வரத்துபனி உருகுவதால் உண்டாகும் ஏரி
முதன்மை வெளியேற்றம்விசன்சர் ஏரி, நீலம் ஆறு
அதிகபட்ச நீளம்0.95 கிலோமீட்டர்கள் (0.59 mi)
அதிகபட்ச அகலம்0.6 கிலோமீட்டர்கள் (0.37 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,710 மீட்டர்கள் (12,170 அடி)

கிருஷண்சர் ஏரி (Krishansar Lake) என்பது இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீரின் காந்தர்பல் மாவட்டத்தில் சோன்மார்க் அருகே 3,710 மீட்டர் (12,170 அடி) உயரத்தில் பனி சூழ அமைந்துள்ள தாவர ஊட்டச்சத்துக்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ள ஏரியாகும். இது விசன்சர் ஏரிக்கு வடமேற்கே ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் அதிகபட்ச நீளம் 0.95 கிமீ மற்றும் அதிகபட்ச அகலம் 0.6 கிமீ. ஆகும்

சொற்பிறப்பியல், புவியியல்[தொகு]

சமசுகிருதத்திலும் காஷ்மீரி மொழியிலும் "கிருஷண்சர்" என்றால் கிருட்டிணன் ஏரி என்று பொருள். இது பல வகையான மீன்களுக்கு தாயகமாக உள்ளது [1] அவற்றில் பழுப்பு திரௌட் அதிக அளவில் உள்ளது. ஏரியானது குளிர்காலத்தில் உறைந்து காணப்படுகிறது. மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இப் பருவத்தில் அணுக முடியாது. இது பசுமையான புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. கோடையில் செம்மறி ஆடுகளை மேய்க்கும் உள்ளூர் மேய்ப்பர்களை ஈர்க்கிறது. கிருஷண்சர் ஏரி விசன்சர் ஏரிக்கு அருகில் உள்ளது. இதன் பின்புறம் பனியால் மூடப்பட்ட மலைகள் உள்ளன, அதில் கட்சர் ஏரிக்கு செல்லும் மலைப்பாதையான கட்சர் கணவாய் அமைந்துள்ளது. இந்த ஏரி காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வடக்கே உள்ள புகழ்பெற்ற மலையேற்ற தளமாகும். இது பெரும்பாலும் பனி மற்றும் பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் நிரம்புகிறது. இது விசன்சர் ஏரியில் விழும் ஒரு சிறிய ஓடை வழியாக வெளியேறி நீலம் ஆற்றை உருவாக்குகிறது.

அணுகல்[தொகு]

கிரிஷண்சர் ஏரி 115 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிறீநகரில் இருந்து வடகிழக்கு மற்றும் சிட்காடி சோனாமார்க்கிலிருந்து 35 கி.மீ. சிறீநகர் அல்லது சிறீநகர் வானூர்தி நிலையத்திலிருந்து 80 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக சிட்காடி கிராமத்திற்குச் செல்லலாம். அங்கிருந்து குதிரைவண்டிகளை வாடகைக்கு அமர்த்தி 35 கிமீ தூரம் உள்ள அல்பைன் மலையேறி ஏரியை அடையலாம். இப்பயணம் கடல் மட்டத்திலிருந்து 4100 மீட்டர் உயரமுள்ள நிச்னாய் கணவாயைக் கடந்து ஒரு முழு நாள் மலையேற்றத்தை எடுக்கும். கட்சர் ஏரி வடமேற்கில் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் இந்த ஏரியைப் பார்வையிட சிறந்த நேரமாகும். [2]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Fishes and Fisheries in high altitude lakes, Vishansar, Gadsar, Gangabal, Krishansar". Fao.org. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
  2. "Kashmir Great Lakes Trek". Kashmir Treks. பார்க்கப்பட்ட நாள் 23 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷண்சர்_ஏரி&oldid=3514604" இலிருந்து மீள்விக்கப்பட்டது