கிருபா முனுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிருபா முனுசாமி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவரும் தமிழ்நாட்டைச் பூர்விகமாகக் கொண்ட வழக்கறிஞராவார். இவர் சமூகத்தில் உள்ள அனைத்து வகையான பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலம் சமூக நீதிக்காக பாடுபடும் ஒரு சமூக, அரசியல் மற்றும் நீதித்துறை ஆர்வலராகவும் மனித உரிமை, மற்றும் தலித் செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். [1] [2] [3] [4] ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து பல திறமையான வழக்கறிஞர்களை வளர்த்தெடுக்க ‘சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு’ (Legal Initiative For Equality) என்ற முன்னோடி அமைப்பை தொடங்கி அதன் நிறுவன நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார்.

பிறப்பும் வாழ்க்கையும்[தொகு]

பின் தங்கிய பொருளாதாரப் பின்னணி கொண்ட பெற்றோருக்கு தமிழ்நாட்டின், சேலத்தில் மூன்றாவது மகளாக பிறந்தவர் கிருபா முனுசாமி. அவருடைய தந்தையின், கல்வி மட்டுமே மீட்பு என்ற கொள்கையின் படி, பள்ளிப்படிப்பையும் இளநிலை பட்டத்தையும் சேலத்திலேயே அர்ப்பணிப்புடன் படித்து முடித்த இவர், முதல் தலைமுறை தலித் பெண் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்துள்ளார்.[[சென்னை|யில் சட்டப்பயிற்சி செய்து கொண்டே கிரிமினல் சட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்பும் முடித்த இவர், ஆறு வருடங்கள் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திருநங்கைகளின் உரிமை தொடர்பான வழக்கில் பங்குகொண்டதன் மூலம் சமூக செயற்பாட்டில் தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கியுள்ளார்.[5] [6]

சமூக செயற்பாடுகள்[தொகு]

சாதி மற்றும் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள், தலித்துகளுக்கு எதிரான சாதி அடிப்படையிலான அட்டூழியங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கல்வி வெளிகளில் பாகுபாடு, மரண தண்டனை, அரச அடக்குமுறை மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் துப்புரவு செய்ய தடை போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இவர் பொதுநல வழக்குகளைப் பதிவு செய்து போராடி வருகிறார்.

மட்டுமல்லாது, மனித உரிமைகள் கடுமையாக மீறப்படும் பிரச்சினைகளில் நீதித்துறை தலையீட்டைக் கொண்டு வரவும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவும் இந்திய நீதிமன்றங்களில் பல பொது நல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.[7]

சட்ட கட்டமைப்பைத் தவிர, தாழ்த்தப்பட்ட, பாலியல் சிறுபான்மையினர் (LGBTQI) மற்றும் தலித் பெண்களுக்கு அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் மீறல் தொடர்பான சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பட்டறைகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.ர்.

இன்றைய இணைய சகாப்தத்தில், சமூக ஊடகங்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தும் செயற்பாட்டாளர்களில் முதன்மையானவராவார்.மேலும் பெரும்பாலான நேரங்களில் உடல்ரீதியான வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் கொலைகளை உள்ளடக்கிய இந்திய மனித உரிமைகள் பிரச்சினைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை உருவாக்க ஆங்கிலம் மற்றும் தமிழ் (அவரது தாய்மொழி) ஆகிய இரண்டு மொழிகளிலும், தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார். பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், தனிப்பட்ட கருத்து மற்றும் தெரிவு உரிமைகள், மேலும் பல ஒடுக்குமுறைகள் பற்றி பல்வேறு தொலைக்காட்சிகளிலும், இணைய வெளியிலும் விவாதங்களில் பங்குகொண்டு அவர்களை பிரதிநிதித்துவப் படுத்தி வருகிறார்.

சமத்துவத்திற்கான சட்ட முன்னெடுப்பு[தொகு]

இவரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கீழ்க்கண்ட மூன்று முக்கிய குறிக்கோள்களோடு இயங்குகிறது. [8]

  • வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளித்தல் - தீண்டாமைக்கு எதிரான வழக்குகள், பெண்ணுரிமை வழக்குகள், தலித் உரிமை வழக்குகள் மற்றும் பொதுவான அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான வழக்குகளை கையாள வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்தல்
  • இலவச சட்ட உதவி - தங்கள் வழக்குகளை நடத்த வழக்கறிஞர்களை அமர்த்த முடியாத பாமர மக்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்து கொடுத்தல்
  • வழக்கறிஞர்களுக்கான உள்கட்டமைப்பு - வழக்கறிஞர்களுக்கு பயிற்சியளித்து, வழக்குகள் கொடுத்தாலும் கூட, அவர்கள் சுயாதீனமாக இயங்குவதற்கான சரியான இடஅமைப்பு இல்லாத காரணத்தால், சுயாதீன வேலை களம் உருவாக்குவதன் மூலம் , ஒரு இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து வேலை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்குதல்


மேற்கோள்கள்[தொகு]

  1. "The Fatal Gang Rape of a Young Woman Is Forcing a Reckoning in India Over the Caste System". Time Magazine. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
  2. "Dalit Lives Matter: 8 Dalit Women Activists You Must Know About". Geetika Sachdev. Yahoo. 14 October 2020. பார்க்கப்பட்ட நாள் 15 November 2020.
  3. "'Our bodies as sites of violence': In conversation with legal experts Kiruba Munusamy and Saumya Uma". Scroll. 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
  4. Political Economy of Caste in India. SAGE Publishing India. https://books.google.com/books?id=1CjwDwAAQBAJ&pg=PA140. பார்த்த நாள்: 16 November 2020. 
  5. "'நான் கருவிலேயே போராடத் தொடங்கி விட்டேன்'- முதல் தலைமுறை வழக்கறிஞர் கிருபா முனுசாமி!".
  6. "The Ghost Of Manu". Kiruba Munusamy. Outlook. 19 October 2020. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
  7. "Kiruba, fighting caste cruelties in India The story of Kiruba Munusamy, human rights lawyer and Dalit women activist from India". Justice and Peace. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
  8. "The nauseating nepotism and caste-based discrimination that exists in Indian judiciary". Kiruba Munusamy. ThePrint. 11 April 2018. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருபா_முனுசாமி&oldid=3671248" இலிருந்து மீள்விக்கப்பட்டது