கிருன்னிசா ஏ.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருன்னிசா ஏ.
கிருன்னிசா ஏ.
கிருன்னிசா ஏ.
தேசியம்இந்தியன்
கல்விகேரளப் பல்கலைக்கழகம்
வகைசிறுவர் இலக்கியம்

கிருன்னிசா ஏ. (Khyrunnisa A.) இந்திய சிறுவர் புனைகதை இலக்கிய எழுத்தாளர், பேச்சாளர், கல்வியாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். பட்டர்ஃபிங்கர்ஸ்' என்ற வரைகதை கதாப் பாத்திரத்தை உருவாக்கியவர். [1] இந்த பாத்திரம் முதலில் இந்திய குழந்தைகள் இதழான டிங்கிளில் வெளிவந்தது

பெரியவர்களுக்கான இவரது முதல் புத்தகம் 31 ஜூலை 2019 அன்று வெளிவந்தது. டன்க் இன் சீக்:தெ ஃபன்னி சைட் ஆஃப் லைஃப் என்ற தலைப்பில், நவீன நகர்ப்புற பெண்ணின் அனுபவங்களை நகைச்சுவையாக எடுத்துக் காட்டும்ம் இந்தப் புத்தகம் வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.[2]

ஸ்காலஸ்டிக் பதிப்பகம் வெளியிட்ட தி லிசார்ட் ஆஃப் ஓஸ் மற்றும் பிற கதைகள் என்ற தலைப்பில் இளம் வாசகர்களுக்கான விலங்குக் கதைகள் புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளிவந்தன.[3]

பிப்ரவரி 2021 இல், பேபி மற்றும் டப்டப் நூல் வெளியானது. இது ஒரு பையன், ஒரு நாய் மற்றும் ஒரு குழந்தைக்கு இடையிலான உறவைப் பற்றிய ஒரு வேடிக்கையான புதினம் ஆகும். [4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிருன்னிசாவின் பெற்றோர்களான ஏ.ஆர். பிஜ்லி மற்றும் ஆயிஷா பிஜ்லி ஆகியோர் திருவனந்தபுரத்தில் குடியேறினர்.

கல்வி[தொகு]

கிருன்னிசா தனது பள்ளிப் படிப்பை ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் திருவனந்தபுரத்திலும், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் இளங்கலையும் திருவனந்தபுரம் , கேரள பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் எம் பில் பட்டங்களைப் பயின்றார்.கேரள பல்கலைக் கழக அளவில் ஆங்கில இளங்கலைப் பட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்தார். [5]

நூலியல்[தொகு]

குழந்தைகள் புத்தகங்கள்[தொகு]

பட்டாம்பூச்சிகள்[தொகு]

  • அஃப்கோர்ஸ் இட்ஸ் பட்டர்ஃபிங்கர்ஸ்! (2018)
  • ரன், இட்ச் பட்டர்பிங்கர்ஸ் அகைன் ! (2017)
  • தெ மிஸ் அட்வன்சர்ஸ் அகைன் (2016)
  • கிளீன் பவுல்ட் , பட்டர் பின்கர்ஸ்!(2015)
  • கோல், பட்டர்ஃபிங்கர்ஸ்! (2012)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Khyrunnisa A – Penguin India" (in en-US). Penguin India இம் மூலத்தில் இருந்து 2017-07-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170728182613/https://penguin.co.in/author/a-khyrunnisa/. 
  2. Nagarajan, Saraswathy (2019-07-26). "Author Khyrunnisa A has two different books ready for release" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/author-khyrunnisa-a-ready-with-two-different-books/article28721733.ece. 
  3. Nagarajan, Saraswathy (2019-07-26). "Author Khyrunnisa A has two different books ready for release" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/books/books-authors/author-khyrunnisa-a-ready-with-two-different-books/article28721733.ece. 
  4. "Baby and Dubdub seaking tiger - Google Search". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-24.
  5. "LITERATURE: Author Profile – Khyrunnisa A – Trivandrum News". www.yentha.com (in ஆங்கிலம்). Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருன்னிசா_ஏ.&oldid=3935067" இலிருந்து மீள்விக்கப்பட்டது