கிருத்திகா (சிங்கை எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கிருத்திகா

பிறப்பு கிருத்திகா

ஈரோடு, இந்தியா
தொழில் தகவல் தொழில்நுட்ப மேலாளர், எழுத்தாளர்
நாடு சிங்கப்பூர்
இலக்கிய வகை சிறுகதை, கட்டுரை, பயணம்
http://kiruthikae.blogspot.com/

கிருத்திகா (Kiruthika, Singapore writer) சிங்கப்பூரின் தமிழ் எழுத்தாளர், நூலாசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், பயிலரங்கு பயிற்றுவிப்பாளர் என தமிழ் இலக்கியத்துக்காக பலதரப்பட்ட விதங்களில் பங்காற்றி வருகிறார். நவீன சிந்தனைகள், அறிவியல் புனைவுகளைத் தற்காலத்திற்கேற்ப கதைகளில் எழுதி வருகிறார். இவரது பயணக் கட்டுரைகளில் காட்சிப்படுத்துதல் மூலம் வாசிப்பவர்களையும் பயணத்தின் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிவிடும் நடை கொண்டிருக்கும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கிருத்திகா ' உல்லாசக்கப்பல் பயணம் (சிங்கப்பூர்-மலேசியா-தாய்லாந்து)'[1] என்ற பயண நாவலை எழுதி வெளியிட்ட 2014ஆம் ஆண்டு முதல் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் எழுதி வருகிறார். பயணக்கட்டுரையும் அறிவியல் புனைக்கதைகளும் இவருக்குப் பிடித்தவை.

தகவல் தொழில்நுட்ப மேலாளராக அலுவலக வேலைகளுக்கு நடுவே சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தொண்டூழியம் செய்வதோடு, தொடர்ந்து எழுதி, தமிழ் இலக்கியத்திற்குத் தனது படைப்புகளை அளித்து வருகிறார். மேலும், ’கதைக்களத்தின்’ பொறுப்பாளராகச் செயல்பட்டு புதிய / மாணவ எழுத்தாளர்கள் கதைக்களம் போட்டிகளுக்கு பெரும் அளவில் சிறுகதைகள் எழுத ஊக்குவித்து வருகிறார்.

மாணவர்களுக்காக கதை சொல்வது, மொழிபெயர்ப்பு, கவிதை மற்றும் சிறுகதைப் பயிலரங்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். சிங்கப்பூர்ப் பட்டிமன்றங்களிலும் இவருடைய குரலைக் கேட்கலாம்.

ஜப்பானிய மொழியில் புலமை பெற்றுள்ளவர். மலையேறுவதில் ஆர்வம் கொண்டு 5400 மீட்டர் உயர ’எவரெஸ்ட் அடிவார முகாமைத்’ (EBC) தொட்டவர். ’கராத்தே’, ’டேக்வாண்டோ’ போன்ற தற்காப்பு கலைகளும் பயின்று தேர்ந்தவர்.

ஆக்கங்கள்[தொகு]

வெளியிட்டுள்ள நூல்கள்[தொகு]

 • பயண நூல் – 2
  • உல்லாசக்கப்பல் பயணம் (ஜூன் 2014)
  • சிங்கப்பூரிலிருந்து மதுரை (அட்டோபர் 2019)
 • நினைவு மலர் – 1

படைப்புகள் இடம்பெற்றுள்ள நூல்கள்[தொகு]

 • குறுநாவல் நூல்கள் – 2
 • சிறுகதை தொகுப்புகள் – 6
 • தமிழ் முரசு சிறுகதை - 12
 • கட்டுரை நூல்கள் – 3
 • இதழ்கள் – 4
 • கவிதை தொகுப்புகள் – 3

அமைப்புகளில் வகித்த / வகிக்கும் பொறுப்புகள்[தொகு]

விருதுகள்[தொகு]

சிங்கப்பூர்[தொகு]

ஆண்டு போட்டி வகை விருது/பரிசு விவரம்
தங்கமுனைப் பேனா விருது (ஏற்பாட்டாளர்: சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றம்)
2015 சிறுகதைப் போட்டி ஊக்கப் பரிசு 1 சிறுகதை
முத்தமிழ் விழா (ஏற்பாட்டாளர்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்)
2017 சிறுகதைப் போட்டி மூன்றாம் பரிசு 1 சிறுகதை
2016 குறுநாவல் போட்டி மூன்றாம் பரிசு 1 குறுநாவல்
2015 சிறுகதைப் போட்டி ஊக்கப் பரிசு 1 சிறுகதை
கதைக்களம் (ஏற்பாட்டாளர்: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்)
2014-2016 சிறுகதை விமர்சனப் போட்டிகள் வெற்றி 10 சிறுகதை விமர்சனங்கள்
2014-2016 சிறுகதைப் போட்டிகள் வெற்றி 9 சிறுகதைகள்
தங்கமீன் வாசகர் வட்டம்
2014-2015 சிறுகதைப் போட்டிகள் வெற்றி 6 சிறுகதைகள்
2015 கவிதைப் போட்டிகள் வெற்றி 1 கவிதை
கவிமாலை
2015,2018 கவிதைப் போட்டிகள் வெற்றி 2 கவிதைகள்

அமெரிக்கா[தொகு]

ஆண்டு போட்டி வகை ஏற்பாட்டாளர் விருது பெற்றவை
2015 சிறுகதைப் போட்டி FETNA இரண்டாம் பரிசு 1 சிறுகதை

சான்றுகள்[தொகு]

 1. உல்லாசக்கப்பல் பயணம் (சிங்கப்பூர்-மலேசியா-தாய்லாந்து
 2. சி.த.எ.க. செயலவை