கிருதாட்சி
| கிருதாட்சி | |
|---|---|
| வகை | அரம்பையர் |
| இடம் | சொர்க்கம் |
| குழந்தைகள் | நளன், துரோணர் |
| நூல்கள் | இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் |
கிருதாட்சி (Ghritachi)[1], இந்து தொன்மவியலில் சொர்க்கத்தில் வாழும் அரம்பையர்களில் ஒருவர்[2][3][4][5]. அரம்பை கிருந்தாட்சி பற்றிய செய்திகள் இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் குறிப்பிட்டுள்ளது.
புராண & இதிகாசங்களில்
[தொகு]தேவர்களின் கட்டிடக் கலைஞர் விசுவகர்மன் மற்றும் அரம்பை கிருதாட்சிக்கும் பிறந்தவரே நளன் என்று வாமன புராணம் கூறுகிறது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் விஸ்வகர்மன்-கிருதாட்சிக்கும் பல்வகை சாதியினர் பிறந்தனர் என்று கூறுகிறது.
வியாசர் தனக்கு நேரடி வாரிசு வேண்டி, கிருதாட்சி மூலம் சுகரை பெற்றெடுத்தாக மகாபாரத்தின் சாந்தி பருவம் மற்றும் தேவி பாகவத புராணம் கூறுகிறது. [6]
பாரத்துவாஜ முனிவர் கங்கை ஆற்றில் நீராடுகையில், கிருதாட்சியின் அழகில் மயங்கியதால் வெளிப்பட்ட விந்துவை ஒரு மரக்கலத்தில் அடக்கி வைத்து துரோணரை பெற்றெடுத்தார் என மகாபாரதத்தின் ஆதி பருவம் கூறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.wisdomlib.org (2015-08-25). "Ghritaci, Ghṛtācī: 14 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-12-27.
- ↑ Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. ISBN 978-0-14-341421-6.
- ↑ Walker, Benjamin (2019-04-09). Hindu World: An Encyclopedic Survey of Hinduism. In Two Volumes. Volume I A-L (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-0-429-62421-6.
- ↑ Kapoor, Subodh (2004). A Dictionary of Hinduism: Including Its Mythology, Religion, History, Literature, and Pantheon (in ஆங்கிலம்). Cosmo Publications. ISBN 978-81-7755-874-6.
- ↑ Williams, George M. (2008-03-27). Handbook of Hindu Mythology (in ஆங்கிலம்). OUP USA. ISBN 978-0-19-533261-2.
- ↑ Doniger, Wendy (1993-02-23). Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts (in ஆங்கிலம்). SUNY Press. ISBN 978-0-7914-1382-1.