கிருட்டிண பிரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிண பிரபா
Krishna Praba
பிறப்புகிருட்டிண பிரபா
25 நவம்பர் 1987 (1987-11-25) (அகவை 36)[1]
எர்ணாகுளம், கேரளம், இந்தியா
இருப்பிடம்எர்ணாகுளம், கேரளா, இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008 முதல்
வலைத்தளம்
krishnapraba.in

கிருட்டிணா பிரபா (Krishna Praba) [2] ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும் தொழில்முறை நடனக் கலைஞரும் ஆவார். பாரம்பரியம் மற்றும் திரைப்பட மரபு நடனங்களில் இவர் முறையாக பயிற்சி பெற்றௌள்ளார். மலையாளத் திரைப்படங்களில் பிரதானமாக நடித்துள்ளார். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் என்பவர் இயக்கிய மடம்பி (2008) திரைப்படத்தின் வழியாக, திரைப்படத் துறையில் அறிமுகமானார். ஜீத்து ஜோசப் இயக்கிய லைஃப் ஆஃப் ஜோசூட்டி (2015) [3] என்றத் திரைப்படத்தில், மோலிக்குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிரபா 2009 ஆம் ஆண்டில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ஜெய்சி டேனியல் அறக்கட்டளை விருதைப் பெற்றார். இவர் சின்னத்திரை என அழைக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரபா 1987 ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் உள்ள சிறீ சுதீந்திர மருத்துவ நினைவு மருத்துவமனையில் கலமாசேரி எச்.எம்.டி.யில் முன்னாள் இயந்திர பொறியியலாளராக பணிபுரிந்த, மறைந்த சி.ஆர்.பிரபாகரன் நாயர் மற்றும் சீலா பிரபாகரன் நாயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். கலாமசேரியிலிருந்த புனித சூசையப்பர் பள்ளியில் இவர் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர், மனிதநேயத்தில் உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். கொச்சியிலுள்ள தேவரா தூய இருதயக் கல்லூரியில் பட்டம் பெற்றார். இவரது ஆரம்பகால தாக்கங்களில் மோகினியாட்டம், குச்சிபுடி, நாடகம் மற்றும் மார்க்கங்களி ஆகியவை அடங்கும். பிரபா பெங்களூரில் அலையன்சு பல்கலைக்கழகத்தில் பாரதநாட்டியத்தில் பட்டயச் சான்றிதழைப் பெற்றார். கிருட்டிண பிரபா தனது முதல் நடன ஆசிரியரான கலாமண்டலம் சுகந்தியின் வழிகாட்டுதலின் கீழ் பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றார்[4].  

தொழில்[தொகு]

மாநில அளவிலான இளைஞர் திருவிழா போட்டியில் பிரபா பல விருதுகளைப் பெற்றார். இவர் மனோஜ் கின்னஸின் கொச்சின் நவோதயா குழுவில் நடனக் கலைஞராக சேர்ந்தார். பின்னர் இவர் சாஜன் பல்லுருத்தி மற்றும் பிரஜோத் போன்றோருடன் இணைந்து ஏசியாநெட் தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஒரு 'நகைச்சுவை நிகழ்ச்சியை' நடத்தினார். பி உன்னிகிருட்டிணன் திரைப்படத்தில் கிருஷ்ண பிரபா அறிமுகமான பிறகு, மலையாள திரைப்படத் துறையில் தொடர்ச்சியான படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நத்தோலி ஒரு செரியா மீனல்லா (2013) மற்றும் லைஃப் ஆஃப் ஜோசூட்டி (2015) ஆகிய திரைப்படங்கள் இவருக்கு புகழைத் தேடித் தந்தன.

2014இல், காவ்யா மாதவன், ரமேஷ் பிஷரோடி உள்ளிட்டவர்களின் பல பிரபலங்கள் ‘ஷீ டாக்ஸி’ திரைப்படத்தில் கிருட்டிணா நடித்த கதாபாத்திரத்திற்கும் 'போயிங் போயிங்' திரைப்படத்தில் சுகுமாரி கதாபாத்திரத்திற்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியதை அடுத்து, மறைந்த சுகுமாரியுடன் தன்னை ஒப்பிடுவது பாக்கியம் என்று இவர் கூறியுள்ளார். [5] 2017 ஆம் ஆண்டில் கிருட்டிண பிரபா விருது பெற்ற பல மாணவர்களுடன் சேர்ந்து திரைப்பட நடிகை காயத்ரி என்பவர் இயக்கிய ராதா மாதவம் என்ற நடன நாடகத்தை இயற்றினார். [6] மேலும் இந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி கூறுகையில் “ஷீ டாக்ஸியில், நான் ஒரு ஆராய்ச்சி மாணவியாக நடிக்கிறேன். எனது தோற்றம் மற்றும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் வேறுபட்டவை. எனது முந்தைய பயணங்களில் நான் கிராமத்து பெல்லி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் நான் தடிமனான கண்ணாடிகளுடன் ஒரு அழகற்ற தோற்றத்தை வெளிப்படுத்துகிறேன். வேடிக்கையான பாத்திரம் உண்மையில் என் வாழ்க்கைக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும். ”என்று கூறுகிறார். [7] 2017 ஆம் ஆண்டில் தீரம் என்ற படத்திற்கான பாடலைப் பாடினார். இவர் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்.

விருதுகள்[தொகு]

ஜெய்சி டேனியல் அறக்கட்டளை விருதுகள்

  • கிருட்டிண பிரபா, 2009ம் ஆண்டில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ஜெய்சி டேனியல் அறக்கட்டளை விருதினைப் பெற்றுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிண_பிரபா&oldid=3315114" இலிருந்து மீள்விக்கப்பட்டது