உள்ளடக்கத்துக்குச் செல்

கிருட்டிண பிரசாத் தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிண பிரசாத் தார்
Krishna Prasad Dar
பிறப்பு30 சனவரி 1893
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு1977
இந்தியா
பணிஅச்சுப்பொறியாளர், பதிப்பாளர்
பெற்றோர்அர் பிரசாத் தார்
பிரான்பதி
வாழ்க்கைத்
துணை
தயா சூரி
பிள்ளைகள்சுதிர் தார் அசோகா தார்
விருதுகள்பத்மசிறீ

கிருட்டிண பிரசாத் தார் (Krishna Prasad Dar) (1893-1977) என்பவர் ஓர் இந்திய அச்சுப்பொறியாளர், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய காசுமீரி சமையல் பற்றிய விவரங்களைக் கூறும் ' காசுமீரி சமையல்' என்ற புத்தகத்திற்காக நன்கு அறியப்படுகிறார்.[1] மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில், பிரசாத் தார் மற்றும் பிரான்பதி தம்பதியரின் ஐந்து குழந்தைகளில் ஒருவராக 1893 சனவரி 30 அன்று பிறந்த இவர், கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.[2][3] பின்னர், அவர் அலகாபாத் சட்ட இதழ் பதிப்பகம் என்ற அச்சகத்தை நிறுவினார், இது அப்பகுதியின் முன்னணி அச்சுப்பொறியாளர்கள் மற்றும் பதிப்பாளர்களில் ஒன்றாக வளர்ந்தது.[2] இந்த அச்சகத்தில்தான் சவகர்லால் நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களான" ஒரு தந்தை தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் [4] மற்றும் 'உலக வரலாறுகளின் தொகுப்புகள்'ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.[2] [5]

காசுமீரி சமையல் பற்றிய புத்தகமான 'காசுமீரி சமையல்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் தார் ஆவார், இந்த புத்தகமானது பின்னர் பெங்குயின் இந்தியா புத்தகம் மூலம் வெளியிடப்பட்டது, இதில் அவரது மகனும், புகழ்பெற்ற இந்திய கேலிச்சித்திர வரைவாளர் சுதிர் தார் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. மற்றும் காப்பி அண்ட ப்ரூஃப் (நகல் மற்றும் சரிபார்ப்பு) 'அதுனிக் சப்பாயி' (நவீன அச்சிடுதல்) ஆகிய இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்,[6] இந்த இரண்டு புத்தகங்களும் பலருக்கும் அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்வதற்கான கையேடுகளாகக் கருதப்படுகின்றன. இந்திய அரசு அவருக்கு 1975 ஆம் ஆண்டில் நான்காவது உயரிய இந்திய குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[7]

தார் அவர்கள், தயா சூரி என்ற பெண்ணை மணந்தார், அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்.[2] அவர் 1977 ஆம் ஆண்டு 83 வயது வயதில் காலமானார்.[2] அவரது மகன்களில் ஒருவரான சுதிர் தார், ஒரு பிரபலமான கேலிச்சித்திர வரைவாளர் ஆவார், அவர் 2019 இல் இறந்தார்.[8]

மேலும் காண்க

[தொகு]
  • சுதிர் தார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krishna Prasad Dar (Author), Sudhir Dar (Illustrator) (2000). Kashmiri Cooking. Penguin Books. p. 216. ISBN 978-0140255652. {{cite book}}: |author= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Krishna Prasad Dar". Geni. 2015. Retrieved 16 June 2015.
  3. "Prints Asia". Prints Asia. 2015. Retrieved 17 June 2015.
  4. Nehru, Jawaharlal (1947). Letters from a father to his daughter. Allahabad Law Journal Press.
  5. J. E. Goldthorpe (1996). The Sociology of Post-Colonial Societies. Cambridge University Press. p. 251. ISBN 9780521578004. Retrieved 17 June 2015. Glimpses of World History Allahabad Law Journal Press.
  6. Krishna Prasad Dar (1938). Copy & Proof. Allahabad Law Journal Press. p. 155.
  7. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.
  8. "Sudhir Dar - Master of Humour". Orissa Barta. 25 July 2014. Retrieved 17 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிண_பிரசாத்_தார்&oldid=4511846" இலிருந்து மீள்விக்கப்பட்டது