கிருட்டிணாபுரம் மடம்
கிருட்டிணாபுரம் மடம் (Krishnapur Matha) அல்லது சில பதிவுகளிலும் இலக்கியங்களிலும் கிருட்டிணாப்பூர் மடம் என்று அழைக்கப்ப்படும் இது ஓர் மத்துவ வைணவ மடமாகும்.[1][2] இது உடுப்பியின் துவைதத் தத்துவஞானி மத்வாச்சாரியரால் நிறுவப்பட்ட உடுப்பியின் எட்டு மடங்களில் ஒன்றாகும். இந்த மடம் தற்போது வித்யாசாகர தீர்த்தரின் தலைமையில் இருக்கிறது.[3] இந்த மடத்தின் முதல் தலைவர் மத்துவாச்சாரியரின் நேரடி சீடர்களில் ஒருவரான ஜனார்த்தன தீர்த்தர் என்பவராவார். அதன் முதன்மை தெய்வம் காலிங்கநர்தன கிருட்டிணன் ஆகும். இங்குள்ள அனுமனுக்கு ஒவ்வொரு நாளும் பூஜை செய்யப்படுகிறது.
இந்த துறவற ஒழுங்கு இந்தியா முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. சில உடுப்பி, ராமநாகட்டே, படிகரு, பெஜவாரா, தண்டிதீர்த்தா, பாதுபித்ரி போன்ற இடங்களிலும், மற்றவைகள் பெரும்பாலும் தெற்கு கன்னட மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டங்களிலும், பிரயாகை (அலகாபாத்) மாவட்டங்களிலும் உள்ளது.
மடம் கடைசியாக அதிக அளவில் நிலங்களை வைத்திருந்தது. ஆனால் 1974 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில முதல்வரான தேவராஜ் அர்சால் “உழுபவரே நிலத்தின் உரிமையாளர்” என்ற சட்டத்தை இயற்றியதால் நிலம் அனைத்தும் இழந்தது.[4] மங்களூரின் சூரத்கல் வட்டாரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருட்டிணாபூரில் உள்ள மடாலயம், பெயர் பெற்ற முக்கிய மடமாகும். இங்குள்ள தற்போதைய மடத்தை வித்யாமூர் என்பவர் கட்டிஎழுப்பினார். அவர் இந்த மடத்தின் பரம்பரையில் இருபத்தி ஆறாவது தலைவராவார். மடத்தினுள் அனுமனுக்கு ஒரு கோயில் உள்ளது. கட்டிடத்தின் அமைப்பு பெரும்பாலும் மரத்தினால் ஆனது. இப்போதெல்லாம் கான்கிரீட் கட்டிடங்களின் காலத்தில் இந்த வகை கட்டமைப்பு அரிதானது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Vidyasagara Tirtha ascends paryaya for fourth time in Udupi Sri Krishna Mutt". The Hindu, English daily newspaper. பார்க்கப்பட்ட நாள் 17 April 2024.
- ↑ "paryaya 2022 sri vidyasagara theertha swamiji ascends paryaya peeta in udupi". Udayavani. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
- ↑ "Krishnapur swamiji's "Purapravesha"". தி இந்து (Chennai, India). 2005-12-31 இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105103056/http://www.hindu.com/2005/12/31/stories/2005123103630200.htm. பார்த்த நாள்: 2009-09-23.
- ↑ "Special court for disposal of land disputes". தி இந்து (Chennai, India). 2009-09-05 இம் மூலத்தில் இருந்து 2009-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090909210537/http://www.hindu.com/2009/09/05/stories/2009090551830300.htm. பார்த்த நாள்: 2009-09-23.