கிரீன்சுடோன் எண்ணிம நூலக மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறீன்ஸ்ரோன் (Greenstone) எண்ணிம நூலக மென்பொருள் எண்ணிம நூலகங்களை இலகுவாக உருவாக்க சிறப்பாகத் துணைபுரிகிறது. புதிய நூல்களை இணைத்து சேகரங்களை (collection) மிகக்குறுகிய நேரத்துள் உருவாக்குதல்; இணையத்திலிருந்து சுயமாகவே விடயங்களை உள்ளீர்த்தல்; புத்தகங்கள் மட்டுமல்லாது, காணொளிகள், பாடல்கள் என்பவற்றையும் எண்ணிம வடிவில் உள்ளடக்கல்; நூலசிரியரின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு என்பவற்றை சுயமாகவே தொகுத்து இலகுவாக நூல்களைத் தேடிப்பெற உதவுதல்; தமிழ் மொழி மட்டுமன்றி பல்வேறு உலக மொழிகளில் பயன்படுத்த முடிதல் என பல்வெறு கோணங்களில் ஏனைய எண்ணிம நூலக மென்பொருட்களுடன் ஒப்பிடுகையில் கிறீன்ஸ்ரோன் மிகச் சிறந்ததாகும்.