கிரீடம் (பல்)
கிரீடம் | |
---|---|
![]() கிரீடம் இடது புறத்தில் அடையாளங்காட்டப்பட்டுள்ளது | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | corona dentis |
MeSH | D019228 |
TA98 | A05.1.03.009 |
TA2 | 915 |
FMA | 55623 |
உடற்கூற்றியல் |

கிரீடம் (Crown) என்பது பல் மருத்துவத்தில் பற்களின் உடற்கூறியல் பகுதி ஒன்றைக் குறிக்கிறது. பொதுவாகக் கிரீடம் என்பது பற்சிப்பியால் மூடப்பட்டிருக்கும் பல்லின் மேற்பகுதியாகும். கிரீடம் பொதுவாக வளர்ந்த பிறகு வாயில் தெரியும். பல்லின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டாலோ அல்லது உடைந்தாலோ, ஒரு பல் மருத்துவர் ஒரு செயற்கை கிரீடத்தைப் பயன்படுத்தலாம். சேதமடைந்த பல்லை முழுவதுமாக மறைக்க அல்லது உள்வைப்பை மறைக்கக் கிரீடங்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பற்கள் காணாமல் போனால், ஒரு இடத்தை மறைக்கப் பாலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிகழ்வின் போது இயற்கையான பல் ஒரு காலத்திலிருந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் உள்வைப்புகளுக்கு பைஞ்சுதை பூசப்படுகின்றது.[1] இந்த வகையான பசையாக, பைஞ்சுதை அல்லது துருப்பிடிக்காத எஃகு உட்பட பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.[2] துருப்பிடிக்காத எஃகு கிரீடங்கள் வெள்ளி அல்லது தங்கத்தில் இருக்கும்; பைஞ்சுதை கிரீடங்கள் வழக்கமான பற்கள் போல இருக்கும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Crown and Bridge". Revitalizing Smiles. 6 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "American Dental Association Crown and Bridge". 2013-10-29 அன்று பார்க்கப்பட்டது.
- Ash, Major M. and Stanley J. Nelson. Wheeler’s Dental Anatomy, Physiology, and Occlusion. 8th edition. 2003. ISBN 0-7216-9382-2ISBN 0-7216-9382-2.